இரவு தள்ளுவண்டி கடை இட்லி, தோசை குருமா ஒருவாட்டி இப்படி வச்சு பாருங்க.

kuruma
- Advertisement -

இரவு நேரங்களில் சில தள்ளுவண்டி கடைகளில், இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள ஒரு குருமா வைப்பார்கள். அந்த குருமா வித்தியாசமான சுவையில், கிடைக்கும். அதாவது மிளகாய்த்தூள் சேர்க்க மாட்டார்கள். பச்சை மிளகாய் சேர்த்து வித்தியாசமான சுவையில் கொஞ்சம் தண்ணியாக இந்த குருமா நமக்கு கிடைக்கும். அப்படிப்பட்ட காரசாரமான புதுவிதமான ஒரு குருமா ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எப்போதும்போல வெங்காயம் தக்காளி சேர்த்து செய்கின்ற குருமா தான். ஆனால் செய்யும் முறையில் கொஞ்சம் வித்தியாசம். சுவையில் கொஞ்சம் வித்தியாசம். வாங்க அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு – 1 ஸ்பூன், லவங்கம் -1, மீடியம் சைஸில் இருக்கும் பெரிய வெங்காயம் நறுக்கியது – 2, தோல் உரித்த பூண்டு பல் – 10, இஞ்சி துண்டு – 2 இன்ச், பச்சைமிளகாய் – 5, தேங்காய் – 2 கைப்பிடி அளவு, கசகசா – 1 ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 8, இந்த பொருட்களை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். (மிளகாய்த் தூள் சேர்க்க போவது கிடையாது பச்சை மிளகாயின் காரம் தான்.)

- Advertisement -

எல்லா பொருட்களும் வதங்கிய பின்பு, அடுப்பை அணைத்து விட்டு, இதை நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். ஆறிய பின்பு இந்த எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது குருமாவை தாளித்து விடலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் பட்டை – 2 துண்டு, லவங்கம் – 1, அன்னாசிப்பூ – 1, இந்த பொருட்களை சேர்த்து தாளித்து 1 கொத்து கறிவேப்பிலை போட்டு, மிகப் பொடியாக நிறுத்திய 2 பழுத்த ரெண்டு தக்காளி பழங்களை போட்டு, கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தக்காளிப்பழத்தை பச்சை வாடை நீங்க வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை கடாயில் ஊற்றி, குரு மாவுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, குரு மாவுக்கு தேவையான அளவு உப்பை போட்டு, நன்றாக கலந்து விட்டு, குருமாவை ஒரு மூடி போட்டு மிதமான தீயில் நன்றாகக் கொதிக்க வையுங்கள். குருமாவின் பச்சை வாடை நீங்கிய பின்பு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி, அடுப்பை அணைத்து சுடச்சுட இட்லி மேல் இந்த குருமாவை ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். ருசி அருமையாக இருக்கும்.

இதே குருமாவை கொஞ்சம் கெட்டியாக வைத்து சப்பாத்தி பூரிக்குத் தொட்டுக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்தான். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சி இருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. என்ஜாய் பண்ணி சாப்பிடுங்க.

- Advertisement -