இன்றைய காலத்தில் பணத்திற்கு எந்த அளவிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறதோ? அதே போல் தான் ஒருவர் அணியக்கூடிய தங்க நகைகளுக்கும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. ஒரு விசேஷமான இடத்திற்கு செல்லும் பொழுது அவர்கள் அணிந்து வந்திருக்கும் தங்க நகைகளை பார்த்தே அவர்களின் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது என்று கூட கூறலாம். தங்க நகை வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாகவே தெரியாது. ஆனால் தங்க நகை இல்லாமல் பல பேர் இப்படி விசேஷகரமான வீட்டிற்கு செல்ல தயங்குவார்கள். அந்த அளவிற்கு இன்றைய காலத்தில் தங்கத்தின் முக்கியத்துவம் அதிகமாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட தங்கத்தை சேர்ப்பதற்கு வீட்டில் எந்த விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
தங்கம் சேர தீபம்
எந்த ஒரு வழிபாட்டை செய்வதாக இருந்தாலும் அந்த வழிபாட்டில் கண்டிப்பான முறையில் ஒரே ஒரு தீபத்தை மட்டுமாவது ஏற்றி வைத்து நாம் வழிபாடு செய்வோம். அப்பொழுதுதான் அந்த வழிப்பாட்டிற்குரிய பலன் நமக்கு கிடைக்கும். மேலும் அந்த வழிப்பாடும் பூர்த்தியடையும். அந்த அளவிற்கு தீபத்திற்கு பலவிதமான முக்கியத்துவங்கள் இருக்கின்றன. இந்த தீபத்தை ஏற்றுவதில் பலவிதமான வழிமுறைகள் இருக்கிறது. அந்த ஒவ்வொரு வழிமுறைக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை நம்மால் அனுபவிக்க முடியும். முழு மனதோடு நாம் ஏற்றக்கூடிய தீபத்திற்கு பல மடங்கு நன்மைகளை தரக்கூடிய ஆற்றல் இருக்கிறது. அந்த வகையில் தங்கம் சேருவதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த தீபத்தை நாம் இரண்டு இடங்களில் ஏற்ற வேண்டும். ஒன்று மகாலட்சுமி தாயாரே குடியிருக்க கூடிய துளசிச் செடியின் அருகில், மற்றொன்று கிரகலட்சுமி என்று கூறக்கூடிய நிலை வாசலில். இந்த இரண்டு இடங்களுமே மகாலட்சுமி சம்பந்தப்பட்ட இடமாக கருதப்படுகிறது. இந்த இடத்தில் நாம் தினமும் தீபம் ஏற்றினோம் என்றால் தங்கம் மட்டுமல்ல நம் வீட்டிற்கு அனைத்து விதமான செல்வங்களும் தேடிவரும் என்று கூறப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே துளசி மாடத்திலும் நிலை வாசலிலும் தீபம் ஏற்றுக்கொண்டு தானே இருக்கிறோம். எங்களுக்கு பணம் சேரவில்லையே என்று ஒரு சிலர் கேட்பார்கள். அந்த தீபத்தை எந்த விளக்கில் ஏற்றுகிறோம் என்பதில் ஒரு சூட்சுமம் அடங்கி இருக்கிறது. பலரும் பித்தளை விளக்கில் ஏற்றுவார்கள் அல்லது அகல் விளக்கில் ஏற்றுவார்கள். இன்னும் சில வசதி படைத்தவர்கள் பூஜை அறையில் வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இதை தவிர்த்து நாம் மறந்து போன ஒரு உலோகமாக இருப்பது தான் செம்பு.
பொதுவாகவே செம்பு ஒரு இடத்தில் இருக்கக் கூடியவற்றை கடத்தி மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கும் என்று கூறப்படுவது உண்டு. அப்படிப்பட்ட செம்பால் செய்யப்பட்ட விளக்கை வாங்கி வந்து துளசி மாடத்தில் ஒரு தீபத்தையும் நிலைவாசலில் இரண்டு தீபத்தையும் வைத்து ஏற்ற வேண்டும். துளசி மாடத்தில் காலையிலும் மாலையிலும் ஏற்றுவது சிறப்பு நிலை வாசலில் கண்டிப்பான முறையில் மாலை நேரத்தில் இந்த இரண்டு தீபங்களையும் ஏற்ற வேண்டும். இதில் நாம் பயன்படுத்தக்கூடியது சுத்தமான பசு நெய் அல்லது இலுப்பை எண்ணெய். முடிந்த அளவிற்கு பசுமையை பயன்படுத்தி நிலை வாசலில் தீபம் ஏற்றுங்கள். துளசி மாடத்தில் ஏற்றக்கூடிய தீபத்திற்கு நாம் எந்த எண்ணெயை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
தினமும் மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தில் நிறைவாசலில் இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து பூஜை அறையில் தீபமேற்றி துளசி மாடத்திலும் தீபம் ஏற்றி தங்கம் அதிகளவில் சேர வேண்டும் என்று வேண்டுபவர்களுக்கு ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவர்களின் வருமானம் அதிகரித்து தங்கத்தை சேர்ப்பதற்கு உரிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த தீபத்தை தொடர்ச்சியாக 48 நாட்கள் ஏற்ற வேண்டும். இந்த 48 நாட்களிலேயே தங்கம் சேர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தங்களுக்கு விருப்பம் இருப்பின் இந்த தீபத்தை தங்களின் வாழ்நாள் முழுவதும் ஏற்றலாம் தங்கத்தோடு சேர்த்து பலவிதமான செல்வங்களும் வந்து சேரும்.
இதையும் படிக்கலாமே:அதிர்ஷ்டசாலியாக மாற செய்ய வேண்டிய தானம்
தீபம் ஏற்றுவதால் வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கிறது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு இந்த முறையில் முழு நம்பிக்கையுடன் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய தங்கம் பல மடங்கு சேர வாய்ப்புகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.