பெண்கள் இந்த 1 பூவை தினமும், தலையில் சூடிக் கொண்டாலே போதுமே. அந்த வீட்டில் தங்கம், போதும் போதும் என்றாலும் தாறுமாறாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.

gold
- Advertisement -

பெண்களிடம் இருக்கும் புன்னகையோடு சேர்ந்த பொன்னகையும் ஒரு அழகுதான். பெண்கள் என்றாலே நிச்சயமாக ஒரு குண்டுமணி தங்கத்தையாவது அணிந்திருக்க வேண்டும். அதுதான் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை தேடித்தரும். அந்த பெண்கள் தங்களுடைய தலையில் தினமும் பூக்களை சூடிக் கொள்வதும் லட்சுமிகடாட்சம் நிறைந்ததுதான். பெண்கள் தினந்தோறும் தங்களுடைய தலையில் எந்த பூவைச் சூடிக் கொண்டால், அது அவர்களுக்கு மங்கலத்தை கொண்டு வந்து சேர்க்கும். மங்களகரமான தங்கத்தை, லட்சுமி கடாட்சத்தை வீட்டில் உண்டுபண்ணும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

guru-bagavan

குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்லுவார்கள். குரு பகவானின் அம்சம் நமக்கு முழுமையாக நிறைந்திருந்தால், நம்முடைய வீட்டில் சுபகாரியங்கள் சுபிட்சமாக நடக்கும் என்றும் சொல்லுவார்கள். குரு பகவானின் ஆசிர்வாதம் நமக்குக் கிடைத்தால் நம்முடைய வீட்டில் தங்கமும் சேரும் என்பதும் உண்மை. குரு பகவானுக்கு உரியது மஞ்சள் நிறம். குரு பகவானுக்கு உரியது வியாழக்கிழமை.

- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்கள் முடிந்தவரை வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற துணியை உடுத்திக் கொண்டு, மஞ்சள் நிற பூக்களை தலையில் சூடிக் கொள்ளலாம். குறிப்பாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் சாமந்திப் பூவை வியாழக்கிழமை அன்று பெண்கள் தங்களுடைய தலையில் வைத்துக் கொள்வது, அந்த வீட்டிற்கு ஐஸ்வர்யமான தங்கத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

samandhi

உங்களுக்கு மஞ்சள்நிற சாமந்திப்பூ கிடைக்கவில்லை என்றாலும், மஞ்சள் நிறத்தில் வேறு ஏதாவது ஒரு பூ கிடைத்தாலும் அதை தலையில் சூடிக் கொள்வதில் தவறொன்றுமில்லை. மஞ்சள் கனகாம்பரம், மஞ்சள் நிற ரோஜா இப்படி எந்த பூக்களை வேண்டுமென்றாலும் நீங்கள் தலையில் சூடிக் கொள்ளலாம்.

- Advertisement -

வியாழக்கிழமை அன்று மட்டும் தானா! இல்லை, தினந்தோறும் நீங்கள் மங்களகரமான மஞ்சள் பூக்களை உங்களுடைய தலையில் சூட்டிக் கொள்வது நன்மையை தரும். காரணம் குரு பகவானுக்கு உரிய நிறம் மஞ்சள் நிறம். முடிந்தால் தினம் தோறும் இந்த மஞ்சள் வண்ணப் பூக்களை, பெண்கள் தலையில் சூடிக் கொள்ளலாம். வீட்டிற்கு அதிகப்படியான நன்மையைக் கொண்டு வந்து சேர்க்க, இந்த மஞ்சள் நிற பூவிற்கு அதிகமாகவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

samanthi

சரி, இதோடு மட்டுமல்லாமல் தங்கத்தை எந்த நேரத்தில், எந்த நாளில் போய் வாங்குவது? எந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் முடிந்தவரை வளர்பிறையில் வரும் நாட்களில் செய்வது மிகவும் நல்லது. அமாவாசை முடிந்து, மூன்று நாட்கள் கழித்து அடுத்து வரக்கூடிய நாட்களில், நல்ல நாளாக பார்த்து நல்ல நேரத்தில் சென்று நகைகளை வாங்கலாம். குறிப்பாக தின நாள்காட்டியில், குளிகை நேரம் என்ற ஒரு நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த குளிகை நேரத்தில் தங்கத்தை வாங்கினாலும் நமக்கு மேலும் மேலும் நிறைய தங்கம் சேரும் என்று சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டில் தங்கம் நிறைய சேர வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உள்ளதா? இந்த குறிப்பை நீங்களும் பின்பற்றலாம். நல்லதே நடக்கும்.

- Advertisement -