கட்டுக்கட்டாக பணமும், கட்டி கட்டியாக தங்கமும், உங்கள் வீட்டு பீரோவில் தங்க வேண்டுமா? இந்த 3 தானியங்களை ஒன்றாக சேர்த்து இப்படி வைத்தாலே போதும்.

gold

கட்டுக்கட்டாக பணம், கட்டி கட்டியாக தங்க நகை! கேட்கும்போதே காதில் தேன் பாய்ந்தது போல இனிமையாக உள்ளது. இந்த வார்த்தைகள் நிஜமானால் நிச்சயம் ஒரு மனிதனுக்கு சந்தோஷம் என்பது வான் அளவு உயரும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. கட்டுக் கட்டாக பணத்தையும், கட்டி கட்டியாக தங்கத்தையும் வைத்திருப்பவர்கள் எல்லாம் நோய்நொடிகள் இல்லாமல் சந்தோசமாக தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து விடுகிறார்கள் என்று அர்த்தம் கிடையாது. எப்போதுமே தன்னிடம் இல்லாத ஒன்றை பார்த்து ஏங்குவது தான் மனிதனுடைய இயல்பு. அது இயற்கையானது. அதை யாராலும் தவறு என்று சொல்ல முடியாது. அதை யாராலும் அவ்வளவு சுலபமாக மாற்றி விடவும் முடியாது. இருப்பினும் இந்த பணத்தின் மீதும் தங்க நகைகளின் மீது மனிதர்களுக்கு ஒரு தனி மோகம்.

Today Gold rate

ஆடம்பரமான வாழ்க்கை, அளவுக்கு அதிகமான பணம், அழகு சேர்க்கும் அளவுக்கு அதிகமான தங்க நகைகள், இந்த மூன்றுமே ஒரு மனிதனுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியது. அளவான பணமும், தேவைக்கு ஏற்ப நகையும் ஆடம்பரமில்லாத வாழ்க்கை முறைகளும் தான் என்றுமே நமக்கு நிரந்தரம். சரி, இப்போது நம் வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி, தேவைக்கு ஏற்ப பணத்தையும் தங்கத்தையும் நம்மிடம் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆன்மீக ரீதியாக சுலபமான முறையில் என்ன செய்யலாம்?

இன்று நாம், இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தப் போகும் பொருட்கள் மூன்று. துவரம் பருப்பு, பச்சரிசி, கொண்டைக்கடலை. துவரம்பருப்பு செவ்வாய் பகவானுக்கு உரிய தானியம். பச்சரிசி சந்திரனுக்கு உரியது. கொண்டைக்கடலை குரு பகவானுக்கு உரியது. இந்த மூன்று கிரகங்களின் ஆசீர்வாதத்தை நாம் ஒன்றாக பெறும்போது நமக்கு வாழ்க்கையில் இருக்கக்கூடிய பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஓரளவிற்கு குறைக்கப்படும்.

money1

இந்த மூன்று தானியங்களையும் எப்போதுமே உங்களுடைய வீட்டில் நிறைவாக வைத்துக்கொள்ள பாருங்கள். இந்த மூன்று பொருட்களும் உங்களுடைய வீட்டில் இல்லை என்ற வார்த்தையே வரக்கூடாது. அதேசமயம் செவ்வாய்க்கிழமை அன்று உங்களால் முடிந்த துவரம் பருப்பு பச்சரிசி கொண்டைக்கடலை இந்த மூன்று பொருட்களையும் வாங்கி இயலாதவர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.

- Advertisement -

உங்கள் வீட்டு அக்கம் பக்கத்தில் மிகவும் கஷ்டப்படுபவர்கள் ஆக இருந்தால் அவர்களுக்கு இதை வாங்கி தானம் கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் அனாதை ஆசிரமங்களுக்கு இந்த பொருட்களை தானமாக கொடுக்கலாம். முடிந்தால் இந்த பொருட்களை வைத்து சமைத்து ஏழை எளியவர்களுக்கு சாப்பாடும் போடலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. இந்த பொருட்களை பயன்படுத்தி பிரசாதம் செய்து, கோவிலுக்கு சென்று பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். அது உங்களுடைய இஷ்டம்தான்.

ஒரு பச்சை நிற துணியை எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு, ஒரு ஸ்பூன் பச்சரிசி மூன்று கொண்டை கடலை, இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து வைத்து சிறிய முடிச்சாக கட்டி, உங்கள் வீட்டு பீரோவில் பணப்பெட்டியில் அல்லது நகை வைக்கும் இடத்தில் வைத்து விடலாம். இந்த பொருள் பீரோவில் இருக்கும் வரை நிச்சயமாக பீரோவுக்குள் காசு பணம் இல்லை, தங்க நகை இல்லை என்ற பேச்சுக்கு இடமிருக்காது.

kondai-kadalai

6 மாதத்திற்கு ஒருமுறை இந்தப் பழைய பொருட்களை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதியதாக வைத்துக்கொள்ளலாம். உங்களுடைய நகை அடமானத்தில் இருந்தாலும் கூட அதை மீட்டெடுப்பதற்கு இந்த பரிகாரம் வழிவகுக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபட இந்த பரிகாரம் உறுதுணையாக நிற்கும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்தால் நல்ல பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.