குளித்தவுடன் இந்த ஒரு விஷயத்தை மறக்காமல் செய்து விடுங்கள்! உங்களை பிடித்த தரித்திரங்கள், பீடைகள் யாவும் வந்த வழியே விலகி ஓ‌டி‌விடுமாம்.

bathing-lakshmi
- Advertisement -

தரித்திரம், பீடை என்பது எதிர்மறை வார்த்தைகள் ஆகும். எதிர்மறை ஆற்றல்களை வெளியிடக்கூடிய இந்த சக்தி வாய்ந்த வார்த்தைகள் நம்மை ஆட்டிப்படைக்கும், நமக்கு துன்பங்களை அள்ளிக் கொடுக்கும் கெட்ட விஷயங்களாக இருந்து வருகிறது. நாம் என்னதான் நேர்வழியில் நடந்தாலும், நமக்கு வரக்கூடிய நன்மைகளைத் தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி இவைகளுக்கு உண்டு. நம் முன்னோர்கள் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது என்று அறிவுறுத்த கேட்டிருப்போம்.

இந்த விஷயங்களை செய்தால் தரித்திரம் பிடிக்கும், உனக்கு பீடை பிடிக்கும் என்றெல்லாம் கூறுவதை கேட்டிருப்போம். வீட்டிற்கு மட்டும் அல்லாமல், தனி மனிதனுக்கும் இது போன்ற விஷயங்களில் கெட்டவை நடக்க வாய்ப்பு அதிகம் என்பதால் செய்யும் செயலில் ஒழுக்கமும், இறை பக்தியும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது ஆன்மீகம். நம்மை பிடித்த தரித்திரங்களும், பீடைகளையும் ஒழிய தினமும் குளித்து முடித்த பின்பு இதை தான் முதலில் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. அது என்ன? எப்படி செய்ய வேண்டும்? என்பது போன்ற தெய்வீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

குளித்த முடித்தவுடன் முதலில் முதுகை தான் துடைக்க வேண்டும் என்று கூறுவார்கள். வேதாளம் விக்ரமாதித்தன் முதுகில் தொங்குவது போல, நம்முடைய தரித்திரங்களும், பீடைகளும் நம்முடைய முதுகில் தான் ஒட்டிக் கொண்டு இருக்குமாம். நம் கண்களுக்குத் தெரியாதவாறு புறத்தில் இருக்கும் இந்த தரித்திரம் மற்றும் பீடையை குளிக்கும் போது அனுதினமும் நாம் விரட்டி அடிக்க முதலில் முதுகை துடைக்க வேண்டும். குளித்ததும் முதுகில் ஒட்டிக் கொண்டிருக்கும் தண்ணீரின் மூலம் நம்முடைய தரித்திரங்கள் விலகிவிடுமாம் எனவே முதுகை துடைத்துவிட்டு பின்னர் மற்ற இடங்களை துடைப்பது நல்லது.

நம்மை பீடித்திருக்கும் தரித்திரங்கள் பொதுவாக பாதம் வழியாகவே நுழைகின்றன எனவே தான் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தால் பாதங்களை கழுவ அறிவுறுத்தப்படுகிறது. கை, கால்களை அலம்பி விட்டு தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும். ஆனால் இன்று வீட்டிற்குள் தான் கை, கால்களை அலம்புமாறு கட்டி வைத்திருக்கிறோம்.

- Advertisement -

படுத்த படுக்கை அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் தூங்கி எழுந்த பின்பு பாயை சுருட்டி வைப்பது தான் முதல் வேலையாக இருக்க வேண்டும் என்று அக்காலத்தில் அறிவுறுத்தப்பட்டது. பாயை சுருட்டாமல் வைத்து விட்டால் அதில் பேய் வந்து உட்கார்ந்து கொள்ளும் என்றெல்லாம் அக்காலத்தில் பயமுறுத்தப்பட்டது. போர்த்திக் கொள்ள பயன்படுத்திய பெட்ஷீட் முதற் கொண்டு சுத்தமாக, நீட்டாக மடித்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் தரித்திரங்கள் தாண்டவம் ஆடும் என்ற சாஸ்திரங்கள் உண்டு. இவையெல்லாம் நம்முடைய ஒழுக்கத்தை நெறிமுறை படுத்தவே சொல்லப்பட்டுள்ள சாஸ்திரங்களாக இருக்கின்றன.

இதை தரித்திரம், பீடை என்கிற எதிர்மறை வார்த்தைகளை பயன்படுத்தி கொள்ளுவதால் நாம் அதை தட்டாமல் கேட்போம் என்பது நம் முன்னோர்களுடைய புத்திசாலித்தனம் ஆகும். ஈரத் துணியை இரவு நேரங்களில் வீட்டில் போட்டு வைத்தால் தரித்திரம் பிடிக்கும். அது போல தலைவிரி கோலமாக இருப்பது, இரவு நேரத்தில் வீட்டை கூட்டி சுத்தம் செய்வது, நகத்தை வெட்டுவது, கண்ட கண்ட கிழமைகளில் முக சவரம் அல்லது முடி வெட்டுவது போன்ற விஷயங்களை எல்லாம் செய்தால் தரித்திரம் வீட்டிற்குள் வந்து விடும். இது போன்ற விஷயங்கள் எதிர்மறையாக சொல்லப்பட்டாலும், நேர்மறையான விஷயங்களை மட்டுமே இது பலனாக கொடுக்கிறது என்பதையும் மறந்து விடாதீர்கள்.

- Advertisement -