இந்த ஒளி பிறந்தால் தரித்திரம் தாண்டவம் ஆடும் வீட்டில் செல்வம் குவியும்.

mahalakshmi vilaku
- Advertisement -

நம் முன்னோர்கள் காலம் முதலில் பின்பற்றி வந்து ஒரு அற்புதமான வழக்கமெனில் அது காலையும் மாலையும் வீட்டில் விளக்கு வைப்பது தான். இப்படி காலையும் மாலையும் விளக்கு ஏற்றும் வீடு ஒரு நாளும் வீணாய் போகாது என்பது நம் முன்னோர்கள் வாக்கு. இன்றைய காலகட்டத்தில் இதை பெரும்பாலானோர் செய்வதில்லை. இதற்கு காரணம் நேரமின்மை என்பதும் உண்மை தான். ஆனாலும் நம் வீடு சுபிட்சமாக இருக்க வேண்டுமெனில் நாம் கொஞ்சம் சிரத்தையாக இதையெல்லாம் செய்து தான் ஆக வேண்டும். நம் வீடு லட்சுமி கடாட்சத்தோடு இருக்க நாம் ஏற்ற வேண்டிய ஒரு தீப வழிபாட்டு முறை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வீடு சுபிட்சமாக இருக்க ஏற்ற வேண்டிய தீபம்

முன் காலத்தில் எல்லாம் நம்முடைய வீட்டு பெரியவர்கள் காலை மாலை இருவேளையும் தவறாது வீட்டில் விளக்கு ஏற்றி வந்தார்கள். இந்த விளக்கை வீட்டில் ஏற்றுவதோடு மட்டுமல்லாமல் நிலை வாசலிலும் தவறாது இந்த தீபத்தை ஏற்று வந்தார்கள். இதற்கென நிலை வாசல் தனியாக மாடம் அமைத்து அதில் கொஞ்சம் சாணியை வைத்து அதன் மேல் அகல் வைத்து தீபம் ஏற்றி வந்தார்கள் இதை தினமுமே செய்து வந்தார்கள்.

- Advertisement -

ஆகையால் தான் அந்த காலத்தில் எத்தனை பெரிய கஷ்டங்கள் வந்தாலும் அனைத்தும் விலகி நல்லதொரு வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது மட்டும் இன்றி இப்படி தீபம் ஏற்றும் பொழுது அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் வாசம் நிச்சயமாக இருக்கும் என்பதையும் அவர்கள் ஆணித்தரமாக நம்பி நல்ல முறையில் வாழ்ந்தார்கள் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இப்போது நாமும் அப்படி நம் வீடு லட்சுமி கடாட்சமாக இருக்கு எந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த தீபத்தை காலையில் ஆறு மணிக்குள்ளாக அதாவது பிரம்ம முகூர்த்த வேளையிலே நம் வீட்டு நிலை வாசலில் ஏற்று விட வேண்டும். இந்த தீபத்தை ஏற்றும் பொழுது வீட்டு நிலை வாசலில் கொஞ்சமாக மஞ்சளை குழைத்து கட்டியாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இப்போதெல்லாம் சாணம் கிடைப்பது அரிது. ஆகையால் மஞ்சளை உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு வெற்றிலையை எடுத்து அதை நிலை வாசலில் இரண்டு புறமும் வைத்த பிறகு அதன் மேல் இந்த மஞ்சளை வைத்து மஞ்சளின் மேல் அகல் விளக்கை வைத்து என்னை அல்லது நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுங்கள்.

- Advertisement -

இந்த தீபம் கிழக்கு அல்லது வடக்கு முகமாக பார்த்தவாறு எறிவது மிகவும் நல்லது வைக்கும் போது வெற்றிலையும் நுனி இரண்டு விளக்கை ஒன்றை ஒன்று பார்ப்பது போல் இருக்க வேண்டும் இதை ஏற்றிய பிறகு அப்படியே உங்கள் பூஜை அறையிலும் ஒரு தீபம் ஏற்றி விடுங்கள் அது அகல் விளக்காக இருப்பினும் பரவாயில்லை ஆனால் அந்த அகல் விளக்கில் ஆறு டைமண்ட் கற்கண்டு போட்டு ஏற்றுங்கள். இந்த டைமண்ட் கற்கண்டு சுக்கிர வசியத்தை ஏற்படுத்தும் அது மட்டும் இன்றி இனிப்புடன் ஏற்றப்படும் தீபம் மகாலட்சுமி தாயார் மிகவும் மகிழ்விப்பதாகவும் இருக்கும். இந்த தீபத்தை காலை மாலை இருவேளையிலும் ஏற்றுவது இன்னும் சிறப்பு.

இதையும் படிக்கலாமே: சொல்பேச்சு கேட்காத மகனை திருத்த செல்ல வேண்டிய கோவில்

நிலைவாசலில் வைத்திருக்கும் மஞ்சள் வெற்றிலை இவை அனைத்திலுமே மகாலட்சுமி தாயாரின் வாசம் முழுவதுமாக நிறைந்திருக்கும். அத்துடன் வீட்டின் பூஜையறையில் ஏற்றப்படும் இந்த ஒரு தீபம் நமக்கு தாயாரின் அனுகிரகத்தோடு சுக்கிர யோகத்தையும் சேர்த்து தரும் இதனால் வீட்டில் எப்படிப்பட்ட தரித்திரம் தாண்டவம் ஆடிருந்தாலும் அதை விரட்டி அடித்து மகாலட்சுமி தாயாரே வந்த அமர்ந்து குடும்பத்தை நல்ல முறையில் வாழ வைப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. இந்த தீப வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் தினமும் இந்த முறையில் தீபம் ஏற்றி நீங்கள் குடும்பத்தில் செல்வ வளத்துடன் வாழலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -