இப்படிப்பட்ட செருப்பை மட்டும் வாழ்க்கையில் ஒரு முறை கூட போடக்கூடாது. விடாப்படியான தரித்திரம் வந்து, விடாமல் ஒட்டிக் கொள்ளும்.

cheppal
- Advertisement -

வாழ்க்கையில் நாம் ஒரு சில தவறுகளை தெறியாமல் கூட செய்யவே கூடாது. நாம் செய்யக்கூடிய அந்த சின்ன தவறு பெரிய பிரச்சனையை கொண்டு வந்து நிறுத்தி விடும். எதிர்காலத்தில் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்ளப் போகின்றோம் என்பதை உணர்த்துவதற்காகவே நமக்கு சில அறிகுறிகளை அந்த ஆண்டவன் காண்பித்துக் கொடுப்பான். அந்த வரிசையில் செருப்பு பற்றிய சில சாஸ்திர ரீதியான விஷயங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை எல்லாம் செய்தால் நல்லது நடந்துவிடுமா. பணக்காரர் ஆகிவிடுவோமா, என்று யோசிக்காதீங்க. இதை எல்லாம் பின்பற்றினால் வாழ்க்கையில் நல்லபடியாக வாழலாம். அதற்காகத்தான் முன்னோர்கள் நமக்கு நல்ல விஷயங்களை எல்லாம் அனுபவித்து ஆராய்ந்து சொல்லி வைத்து சென்றுள்ளார்கள். அதிலிருந்து ஒரு சில நல்ல விஷயங்களை இன்று நாமும் தெரிந்து கொள்வோம்.

காலில் போடக்கூடிய செருப்பு தானே அதில் என்ன இருக்கிறது. அதை எப்படி போட்டால் என்ன என்று மட்டும் அலட்சியமாக நினைக்கவே கூடாது. நம்முடைய கையில் எப்படி ரேகைகள் இருக்கிறது. அதேபோல காலிலும் ரேகைகள் இருக்கின்றது. நம்முடைய தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடியது கைரேகை மட்டும் அல்ல, கால் ரேகையும் தான். நம்முடைய உடம்புக்குள் கெட்ட சக்தி ஊடுருவ கூடிய முக்கியமான ஒரு இடம் என்றால் அது பாதம் தான். பாதத்தின் வழியாகவும் எதிர்மறை ஆற்றல் நம் உடம்புக்குள்ளே செல்லும். இப்படிப்பட்ட பாதங்களை பாதுகாக்கும் காலணிகளின் மீது கொஞ்சம் கவனம் வைப்பதில் தவறு ஒன்றும் கிடையாது.

- Advertisement -

எப்படிப்பட்ட செருப்பை அணிவது தவறு?
வருட கணக்கில் பயன்படுத்தி தேய்ந்து போன செருப்பை மாற்றாமல் அப்படியே போடுவது ரொம்ப ரொம்ப தவறு. ரொம்பவும் தேய்ந்து போன செருப்பை அணிபவர்கள் தரிதரத்தின் பிடியில் சிக்கிக் கொள்வார்கள். புதியதாக வாங்கிய செருப்பு ஒரு சில நாட்களில், அல்லது ஒரு சில மாதங்களில் ஏதோ ஒரு காரணத்தினால் அறுந்து போய்விட்டது விட்டது எனும் போது அதை ஒரே ஒருமுறை தைத்து போடலாம்.

புதிய செருப்பு வாங்க முடியாத சூழ்நிலையில் அவசரத்திற்கு ஒரே ஒருமுறை கிழிந்த செருப்பை தைத்து போடலாம். சில பேர் கிழிந்து கிழிந்து, தைத்து தைத்து அந்த செருப்பில் தையல் போடுவதற்கு இடம் இருக்காது. அப்படி அந்த செருப்பை தைத்து தைத்து போடுவார்கள். கேட்டால் சிக்கனம் என்பார்கள். அது பேர் சிக்கனம் இல்லை. கருமி தனம். இது ரொம்ப ரொம்ப தவறு. ஒரு மனிதன் இப்படிப்பட்ட ஒட்டுகள் போட்ட செருப்பை பயன்படுத்தவே கூடாது. அப்படி செருப்பை தைத்து தைத்து மீண்டும் மீண்டும் போடக்கூடிய நேரம் வருகிறது என்றால், உங்களுக்கு கஷ்ட காலம் வரப்போகிறது என்பதற்கான அறிகுறி தான் அது.

- Advertisement -

ஆகவே அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு நீங்கள் இடம் கொடுக்காதீங்க. எப்படியாவது கிழிந்த செருப்பை தூர போட்டு விட்டு புது செருப்பை வாங்கிக் கொள்ளுங்கள். புதிய செருப்பை வாங்கிய பின்பும் இந்த கிழிந்த சிறப்பை வீட்டில் பத்திரப்படுத்தினால் நிச்சயம் தரித்திரம் ஒட்டிக் கொள்ளத்தான் செய்யும். இந்த தவறையும் தயவு செய்து நீங்கள் செய்யவே செய்யாதிங்க. அதேபோல வாரத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ உங்களுடைய செருப்பை சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு பயன்படுத்துவது நல்லது.

புது செருப்பு தொலைந்தால் என்ன பலன்:
பொதுவாகவே செருப்பு தொலைந்தால், தொலைந்தது கர்மா என்று முன்னோர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம் அல்லவா. நீங்கள் புதுசாக வாங்கிய செருப்பு வாங்கி இரண்டு மூன்று நாட்கள் தான் ஆகிறது. கோவிலுக்கோ திருமணத்திற்கு செல்கிறீர்கள் அந்த இடத்தில் புது சிறப்பு தொலைந்து விட்டது என்றால், ஏதோ தீராத கஷ்டம், உங்களுக்கு இருந்த ஏதோ ஒரு கர்மா அதன் மூலம் கழிந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நினைத்து கவலைப்படாதீர்கள். புதிய செருப்பை வாங்கி பயன்படுத்துங்கள்.

இதையும் படிக்கலாமே: தடையில்லாத பணம் வரவிருக்கும், கொடுத்த பணத்தை திரும்ப பெறவும், தேங்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள். நீங்கள் கேட்காமலே பணம் வாங்கியவர் உங்களை தேடி வந்து திருப்பி தரும் அதிசயம் நடக்கும்.

உங்கள் புது செருப்பு தொலைந்தது என்ற காரணத்தால், எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர்களுடைய புது செருப்பை நீங்கள் மாட்டிக் கொண்டு வரக்கூடாது. ஒருவர் பயன்படுத்திய காலணியை இன்னொருவர் பயன்படுத்துவது ரொம்ப ரொம்ப தவறு. விளையாட்டிற்காக கூட அடுத்தவர்களுடைய செருப்பை மாற்றி மாற்றி போட்டுக் கொள்ளாதீங்க. அது நன்மை தரக்கூடிய விஷயம் அல்ல என்ற  தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -