இந்தத் தண்ணீரை வீடு முழுக்க இப்படித் தெளித்தாலே போதும். உங்கள் வீட்டை பிடித்த தரித்திரம் தலை தெறிக்க வெளியே ஓடிவிடும். மீண்டும் தரித்திரம் உங்கள் வீட்டுப் பக்கம் தலை வைத்து கூட படுக்காது.

theertham

ஒரு மனிதனுக்கு பணம் காசு நிறைய இருக்கின்றதோ இல்லையோ, நிம்மதி என்ற நான்கு வார்த்தை ஒரு வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும். மனது நிம்மதியாக இல்லை என்றால் நாம் வாழக்கூடிய வாழ்க்கையே அர்த்தம் இல்லாமல் போய்விடும். நிம்மதி இல்லை என்றால் ஒரு வேளை சாப்பாட்டை கூட நம்மால் மனநிறைவோடு சாப்பிட முடியாது. தேவைக்கு ஏற்ப பணமும், சண்டை சச்சரவு இல்லாத வாழ்க்கையுமே இல்லரத்தை இனிமையாக மாற்றும். உங்களுடைய வீட்டில் திடீரென்று காரணமே இல்லாமல் பிரச்சினைகள் தலை தூக்க ஆரம்பிக்கிறதா? வீட்டில் மன நிம்மதி கெடும் அளவிற்கு சம்பவங்கள் நடந்துகொண்டே வருகின்றதா? சந்தோஷம் உங்கள் வீட்டை விட்டு வெளியே சென்று விடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக மன நிம்மதி உங்கள் வீடு தேடி வரும்.

sad-crying2

வீட்டில் இருப்பவர்களுடைய மன நிம்மதி கெடுவதற்கு வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளும் துர்தேவதைகளும் தான் காரணம். துர்தேவதைகள் வீட்டில் குடி கொண்டு விட்டால் வீட்டில் இருக்கும் நல்ல சக்தி வெளியேறி, வீட்டில் சண்டை சச்சரவுகள் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். உங்கள் வீட்டை பிடித்த தரித்திரத்தை வெளியே விரட்டி அடிக்க இந்த ஒரு தீர்த்தம் போதும்.

கடலிலிருந்து கொஞ்சமாக கடல் தண்ணீரை கொண்டு வரவேண்டும். சமுத்திர தீர்த்தம் என்று சொல்வார்கள். உங்களுடைய வீட்டின் அருகில் கடல் இல்லை என்றால், கோவில்களின் அருகில் இருக்கும் கிணற்றில் இருந்து, குளத்திலிருந்து கொஞ்சமாக தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். அந்த தீர்த்தத்தை உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

Milagu benefits in Tamil

பாத்திரத்தில் இருக்கக்கூடிய தீர்த்தத்தில் முதலில் ஐந்து மிளகுகளை நன்றாக இடித்து கலந்து கொள்ளுங்கள். இரண்டாவதாக, 2 சிட்டிகை மஞ்சள் பொடி, கொஞ்சமாக கோமியம், வாசனை மிகுந்த ஏலக்காய் 3, இந்த எல்லாப் பொருட்களையும் அந்த தண்ணீரில் கலந்து தீர்த்தமாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தீர்த்தத்தை தயார் செய்ய பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இறுதியாக நாம் இதில் ஒரு விஷயத்தை செய்யப்போகின்றோம். அதில் தான் சூட்சுமம் அடங்கியுள்ளது. ஒரு கற்பூரத்தை எடுத்து பற்ற வைத்து இந்த தீர்த்தத்தின் மேல் வைத்தால், அந்த கற்பூரம் அப்படியே எரியத் தொடங்கும். தண்ணீரில் மீது வைத்ததும் கற்பூரம் அணையாது. அந்த கற்பூரம், அந்த தீர்த்தத்தில் முழுமையாக எரிந்து குளிர்ந்ததும் அந்தத் தீர்த்தத்தை கொண்டுபோய் உங்கள் வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.

theertham

உங்களால் இந்த கற்பூரத்தை தீர்த்தத்தின் மேல் எறிய வைக்க முடியவில்லை என்றால் ஒரு சிறிய வாழை இலையின் மீதோ, அப்படி இல்லை என்றால் வெற்றிலையின் மீதோ அந்த கற்பூரத்தை கொளுத்தி தீர்த்தத்தில் வைத்து, எரியவிட வேண்டும். அப்போது தான் தீர்த்தத்திற்கு சக்தி அதிகரிக்கும்.

sombu

வீட்டின் உள் பக்கத்தில் இருந்து வெளிப்பக்கம் வரை நீங்கள் தயார் செய்த தீர்த்தத்தை தெளித்து வரவேண்டும். உங்கள் வீட்டிற்கு உள்ளிருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியே கொண்டு வந்து விட வேண்டும். வீட்டின் மூலை முடுக்குகள் எல்லா இடங்களிலும் இந்த தீர்த்தத்தை தெளிக்கலாம். குளியலறை முதற்கொண்டு இந்த தீர்த்தம் தெளிப்பதில் தவறொன்றும் கிடையாது. இந்த பரிகாரத்தை என்றைக்கு செய்யலாம். அமாவாசை, பவுர்ணமி, பஞ்சமி திதி இந்த மூன்று நாட்களில் ஏதாவது ஒரு நாள் செய்வது அபரிவிதமான பலனைப் பெற்றுத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையுள்ளவர்கள் செய்து நல்ல பலனை பெற வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.