- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதரித்திரமும் கஷ்ட காலமும் நீங்க ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்

தரித்திரமும் கஷ்ட காலமும் நீங்க ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்

- Advertisement -

எந்த ஒரு வேலையை செய்ய ஆரம்பித்தாலும் அதில் தடங்கல் வந்து கொண்டே இருக்கிறது என்று வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். எந்த வேலையை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கவில்லை என்று வருத்தப்படுபவர்களும் இருக்கிறார்கள். கஷ்டத்திற்கும் மேல் கஷ்டம் வந்து கொண்டே இருக்கிறது என்பவர்களும், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படுபவர்களும், பணவரவே இல்லாமல் பண நெருக்கடியில் மாட்டிக் கொண்டு இருப்பவர்களும், தங்களுடைய கஷ்ட காலம் நீங்குவதற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தரித்திரமும் கஷ்ட காலமும் நீங்க

நம்மை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்குவதற்கு ராகு கால பரிகாரம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக இந்த விதமான பிரச்சனைகள் தீருவதற்கு ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு காலம் அதீத சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலம் என்பது மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் வரும். அந்த நேரத்தில் அருகில் இருக்கக் கூடிய காளியம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஒரு புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக பார்த்து எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். காளியம்மன் கோவிலுக்கு செல்வதால் அன்றைய தினம் அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் எந்த தவறும் கிடையாது. ஒருவேளை உங்களுடைய மனதிற்கு அது சரியாகப்படவில்லை என்னும் பட்சத்தில் கோவிலுக்கு செல்வதற்கு முன்பாக குளித்துவிட்டு செல்லலாம்.

சரியாக ராகு காலத்தில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இருந்தே எலுமிச்சம் பழத்தை உங்கள் கையில் வைத்துக்கொண்டு செல்லுங்கள். கோவிலுக்கு சென்ற பிறகு கோவிலுக்கு முன்பாக திரிசூலம் என்பது இருக்கும். அந்த திரிசூலத்திற்கு முன்பாக நின்று கொண்டு காளியம்மனை மனதார நினைத்து கையில் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தை வைத்து உங்களுடைய தலையை வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்ற வேண்டும். இவ்வாறு சுற்றி முடித்த பிறகு நீங்கள் நின்ற இடத்தை விட்டு சற்று விலகி நின்று அந்த எலுமிச்சம் பழத்தை திரிசூலத்தின் நடுவில் குத்தி விட வேண்டும். இப்படி குத்தி முடித்த பிறகு காளியம்மனை முழுமனதோடு வழிபாடு செய்து உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வீட்டிற்கு வர வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் எலுமிச்சம் பழத்தை வைத்து இந்த முறையில் நாம் பரிகாரம் செய்ய நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும், தரித்திரங்களும், கெட்ட காலமும், தோஷமும் அனைத்தும் நீங்கும். இவை அனைத்தும் நீங்குவதன் பலனால் நமக்கு ஏற்பட்ட கஷ்டங்களும் படிப்படியாக நீங்கி நல்ல முன்னேற்றகரமான வாழ்க்கையை வாழ முடியும். ஒரு வேளை அருகில் காளியம்மனின் ஆலயம் இல்லாத பட்சத்தில் அம்மன் ஆலயம் இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:செல்வ செல்வாக்குடன் வாழ தை முதல் திங்கள் வழிபாடு

அதீத சக்தி வாய்ந்த இந்த எலுமிச்சம் பழ பரிகாரத்தை முழுமனதோடு ஞாயிற்றுக்கிழமை அன்று உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு செய்ய காளியம்மன் அருளால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்