பண பிரச்சினை தீர தயிர் பரிகாரம்

thayir pariharam
- Advertisement -

குழந்தை பிறப்பதில் இருந்து இறப்பது பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பணத்தை சம்பாதித்து சேர்த்து வைப்பதன் மூலமே நம்மால் நல்ல வாழ்க்கையை வாழ முடியும். பணத்தை பல வழிகளில் சம்பாதிக்கலாம். சம்பாதித்தால் மட்டும் போதுமா? அது நம்முடனே சேர்ந்து இருக்க வேண்டும். அப்படி நம்மால் பணத்தை சேர்த்து வைக்க முடியவில்லை என்றால் குடும்பத்தில் சந்தோஷம் இருக்காது. சண்டை சச்சரவுகள் ஏற்படும். குழந்தைகளை படிக்க வைக்க முடியாது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கித் தர முடியாது.

இப்படி பல காரியங்கள் முடியாது, இயலாது என்றே வரும். இந்த முடியாது இயலாது என்பதற்கு முக்கியமான காரணமாக பணமே திகழ்கிறது. அப்படிப்பட்ட பணத்தை நம்முடைய வாழ்க்கையில் நாம் அதிகமான அளவு சேர்ப்பதற்கும் பணத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கவும் தயிரை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் நவகிரகங்களே காரணமாக திகழ்கின்றனர். ஒரு கிரகம் எந்த கிரகத்தை பார்க்கிறது எந்த இடத்தில் அமர்கிறது என்பதை பொறுத்து நமக்கு பலன்கள் ஏற்படும். இந்த பலன்களின் அடிப்படையிலேயே பண வரவும், பண விரயமும், பண பிரச்சனையும் ஏற்படும். இந்த பணரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாக திகழக்கூடிய கிரகம் தான் சுக்கிர பகவான்.

நம்முடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவை நாம் பெற வேண்டும் என்றால் நமக்கு சுக்கிர பகவானின் அருள் வேண்டும். அப்படி சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம், சுக்கிர பகவானின் அருளைப் பெற வேண்டும் என்றால் சுக்கிரனின் அம்சம் பொருந்திய தயிர் நமக்கு தேவைப்படும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வாரத்தில் எந்த நாட்கள் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இந்த பரிகாரத்தை செய்வதற்கு குறிப்பிட்ட நேரம் இருக்கிறது. ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு நேரத்தில் சுக்கிர ஹோரை வரும். அந்த சுக்கிர ஹோரையை பார்த்து நாம் இந்த பரிகாரத்தை செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் சுக்கிர பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை, திங்கட்கிழமை 11 மணி முதல் 12 மணி வரை, செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிலிருந்து 9 மணி வரை, புதன்கிழமை மதியம் 12 மணியிலிருந்து 1 மணி வரை, வியாழக்கிழமை மாலை 4 மணியிலிருந்து 5 மணி வரை, வெள்ளிக்கிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணி, மதியம் 1 மணியிலிருந்து 2 மணி, இரவு 8 மணியிலிருந்து 9 மணி, சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து 11 மணி வரை.

- Advertisement -

இந்த பரிகாரத்தை தினமும் செய்யலாம் அல்லது ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்து அந்த நாளையில் மட்டும் தொடர்ச்சியாக வாராவாரமும் செய்யலாம். தங்களுடைய பண பிரச்சினை தீரும் வரை இந்த பரிகாரத்தை செய்யலாம். இதற்கு ஒரு கப் தயிர் வேண்டும். புளிக்காத தயிராக இருக்க வேண்டும். பசு மாட்டு தயிராக இருப்பது மிகவும் சிறப்பு. எச்சில் படாத தயிராக பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து ஒரு கப் தயிரை பூஜையறையில் வைத்து ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து கொள்ளுங்கள். உங்களுடைய வலது கை கட்ட விரலை அந்த தயிரில் வைக்க வேண்டும். இப்பொழுது “ஓம் சும் சுக்ராய நமஹ” என்னும் மந்திரத்தை கூறிக் கொண்டே கட்டை விரலால் தயிரில் ஒரு வட்டம் போட வேண்டும். இப்படி 11 முறை இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே 11 வட்டங்களை போட வேண்டும்.

அவ்வளவுதான் பரிகாரம். இந்த பரிகாரம் முடிந்த பிறகு இந்த தயிரை நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் சுக்கிர பகவானின் அருள் கிடைக்கும். சுக்கிர பகவானின் அருள் கிடைப்பதால் அன்றாட பண தேவைகள் பூர்த்தி அடைவதற்குரிய சூழ்நிலை உண்டாகும். மன தைரியம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: தீராத துன்பம் தீர விளக்கு பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் எந்தவித ஐயப்பாடும் இல்லாமல் செய்பவர்களுடைய வாழ்க்கையில் சுக்கிர பகவானின் அருள் பரிபூரணமாக கிடைத்து பண பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -