‘ஏன்மா என்ன திட்டுற!’ என்று மழலையைப் போல கொஞ்சி விளையாடும் ‘ட்ரெண்டிங் கிளி’ இன்னும் நீங்க பாக்கலையா? மிஸ் பண்ணிடாதிங்க! அப்புறம் வருத்தப்படுவீங்க.

சில நாட்களுக்கு முன்பு வைரலாகி கொண்டிருந்த ‘பட்டு’ என்கிற கிளி மழலை போலவே மாறாமல் கொஞ்சும் குரலில் தன் எஜமானியாகிய தாயிடம் பேசும் வீடியோ காட்சி உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் இந்த கிளி, மற்ற கிளிகளை காட்டிலும் மிகவும் விசித்திரமாக பேசுவதை பார்க்கும் பொழுது சற்றே புல்லரிக்க தான் செய்கிறது. அந்த வீடியோ காட்சியும், அதற்குரிய தகவல்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

parrot

கிளி என்றாலே பேசுவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், எல்லா கிளிகளும் சொன்னதை மட்டுமே திரும்பச் சொல்லும். ஓரிரு வார்த்தைகளை மட்டுமே நாம் பேசுவதற்கு இணையாக சொல்லக் கூடியதாக இருக்கும். ஆனால் இந்த கிளி சற்று விசேஷமானதாக உள்ளது. தன் எஜமானர்களின் கட்டளைக்கு உடனே அடி பணியாமல், ‘நான் ஏன் இதை செய்ய வேண்டும்’? என்று மிக அழகாக கேள்வி எல்லாம் கேட்கிறது. இதனை காண்பவர்களுக்கு பட்டு மேல் தனி பிரியம் ஏற்பட்டு விடுகிறது.

இந்த கிளி எந்த கூண்டிலும் அடைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மிகவும் சுதந்திரமாக எங்கே வேண்டுமானாலும் செல்லும் இந்த கிளி மீண்டும் தன் வீட்டிற்கே வந்து விடுவது ஆச்சரியமான ஒன்றுதான். இந்த வீடியோ பதிவில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவின் மூடியின் மீது அமர்ந்து இருக்கும் இக்கிளி அந்த மூடியை தன் அலகினால் கொத்தி கொண்டு இருக்கிறது. இதனை பார்த்த எஜமானி கோபப்பட்டு பிளாஸ்டிக்கை கடிக்கலாமா? ஏன் இப்படி செய்கிறாய்? என்று அதட்டி கொண்டிருக்கிறார்கள்.

pattu-parrot1

அதற்கு அக்கிளி கூறும் பதில்களும், எழுப்பும் கேள்விகளும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. அழுது அடம் பிடிப்பதும், சாதுரியமான பேச்சாற்றலும் இக்கிளியின் சிறப்பம்சமாக இருக்கிறது. ‘பட்டுக்கு குடு’, ‘ஏம்மா திட்டுற?’, ‘ஏன் கடிக்க கூடாது?’, ‘பட்டுக்கு வேணும்’ என்று மிக அழகாக தன் கொஞ்சும் கீச்சுக் குரலில் பட்டு பேசுவதைக் கேட்கும் பொழுது நமக்கும் அந்த கிளியை அப்படியே அலேக்காக தூக்கி வந்து விடலாம் என்று ஆசையாக தான் இருக்கும்.

- Advertisement -

தங்களுக்குக் கிடைத்த பட்டு, சிட்டு என்கிற இரண்டு கிளிகளில் சிட்டு என்கிற கிளி பறந்து போய் விட்டதாகவும், மீண்டும் வரவில்லை என்றும், பட்டு மட்டுமே எங்கும் செல்லாமல் இங்கேயே இருக்கிறது, எங்கு சென்றாலும் 10 நிமிடத்தில் திரும்ப வீட்டுக்கே வந்து விடும் என்றும் அதனுடைய முதலாளிகள் கூறியுள்ளனர்.

myna

பறவை இனங்களில் ஒரு சில பறவைகள் மனிதர்களைப் போலவே அழகாக பேசும். அதில் நமக்கு தெரிந்தது கிளி வகைகள் மட்டும் தான். ஆனால் கிளியை விட அழகாக பேசும் ‘மைனா’ பற்றிய கதைகள் இன்னும் வெளி உலகிற்கு தெரிய வரவில்லை. எனினும் பட்டுக் கிளி இவை அனைத்தையும் விட ஒரு படி மேலே நின்று, இன்று உலக அளவில் ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் திருப்பியுள்ளது. சொன்னதையே சொல்வது மட்டுமல்ல! அதையும் தாண்டி தன் உரிமையை மனிதர்களைப் போலவே தட்டிக் கேட்கும் இந்த ‘கியூட் பட்டு கிளி’ எப்பொழுதும் இதே போல மகிழ்ச்சியுடன் இருக்க நாமும் வாழ்த்துவோம். அதனுடைய எஜமானர்களுக்கு ஒரு ‘சல்யூட்’.

உங்களுக்காக ‘தி ரியல் ஆங்கிரி பேர்ட் பட்டு’ கிளியின் வீடியோ காட்சி இதோ: