பித்ரு சாபம் நீங்க, தீராத வியாதிகள் தீர மாசி மாத அமாவாசை தினம் அன்று இந்த பரிகாரத்தை தவறாமல் செய்து பாருங்கள்

masi1
- Advertisement -

என்ன தான் ஓடி ஓடி உழைத்தாலும் கையில் வந்த பணம் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து விடுகிறது. அந்த அளவிற்கு நமது வருமானத்தை விட பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது. எவ்வளவு சம்பாதித்து வருமானத்தை அதிகப்படுத்தினாலும் அதனை விட சற்று அதிகமான செலவில் தான் பிரச்சனைகள் இருக்கின்றன. இவ்வாறு கடின உழைப்பு கொடுத்தும் முன்னேறவில்லையே என்று நினைக்கும் பொழுது வாழ்க்கையே வெறுத்து விடுகிறது. இதுபோன்ற பாதிப்புகள் உண்டாவதற்கு முன்னோர்களின் சாபம் கூட காரணமாக கூட இருக்கலாம். அதாவது நமது குடும்பத்தில் மறைந்துபோன முன்னோர்களை நினைக்காமல் இருந்தாலும், அவர்களுக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்யாமல் இருந்தாலும் நமது குடும்பம் எப்போதும் ஏழ்மை நிலையிலும், துன்பத்திலும் தான் இருக்கும். இதனால் ஒரு சிலருக்கு குணப்படுத்த முடியாத வியாதிகளும் கூட தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும். எனவே இந்த மாசி அமாவாசை தினத்தன்று இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து நீங்கள் விடுபட இந்த பரிகாரத்தை தவறாமல் செய்து வாருங்கள்.

இந்த வருடம் மாசி அமாவாசை மார்ச் 02.2022 அன்று வருகிறது. அன்றைய தினம் சதய நட்சத்திரத்தில் மாசி அமாவாசை வருகிறது. எனவே சதய நட்சத்திரத்திற்கு உரிய கடவுள் வருண பகவான் ஆவார். வருண பகவானின் மனைவி பெயர் வாருணி தேவி தீர்த்த வடிவில் இருப்பதால் அமாவாசை தினத்தன்று சதயம் நட்சத்திரத்துடன் சேர்ந்து வந்தால் அந்த தினத்தை வாருணி யோகா தினம் என்று அழைப்பார்கள்.

- Advertisement -

மார்ச் 3ஆம் தேதி வரக்கூடிய கரணம் நிகழ கரணம் என்று சொல்லப்படுகிறது. நாகம் என்றாலே அது ராகுவை குறிக்கிறது. இந்த தினத்தன்று நாக தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும், தீராத தோல் வியாதிகள் உள்ளவர்களும் சிவபெருமானை வணங்கி, சிவன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி, சிவனைத் வணங்குவதன் மூலம் இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.

பொதுவாகவே தொண்ணூற்றி ஆறு வகையான தர்ப்பணங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் முறையாக செய்யவில்லை என்றாலும் மாதம் மாதம் வரும் அமாவாசை தினத்தன்று தவறாமல் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இவ்வாறு தர்ப்பணம் கொடுப்பதையே மறந்துவிட்டு, நமது அன்றாட வேலைகளை செய்து கொண்டிருந்தோம் என்றால் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பித்ருக்களின் கோபத்திற்கு ஆளாகி விடுவோம்.

- Advertisement -

எனவே வரக்கூடிய மாசி மாத அமாவாசை தினத்தன்று காலை விரைவாக எழுந்து, குளித்து முடித்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்து, பூஜைக்கான அனைத்து காரியங்களையும் செய்து விடவேண்டும். வீட்டில் இறந்தவர்களின் படம் இருந்தால் அவற்றை சுத்தம் செய்து, அதற்கு துளசி மாலை அணிவிக்க வேண்டும். பின்னர் அவர்களுக்கு பிடித்த சைவ உணவுகளை சமைத்து வைத்து முறையாக படைத்து பூஜை செய்ய வேண்டும்.

அடுத்ததாக அமாவாசை என்றாலே அம்பிகை தீய சக்திகளை அழிப்பதற்காக உருவெடுத்த நாள் ஆகும். எனவே இன்றைய தினத்தில் துர்க்கைக்கு பூஜை செய்வதன் மூலம் தீராத பிரச்சனைகளை தீர்க்க முடியும். அன்றைய தினம் வரக்கூடிய ராகு கால நேரத்தில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து, மாலையாக தொடுத்து துர்க்கை அம்மனுக்கு சாற்றி விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.

- Advertisement -