- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதீராத நோய் தீர வாராஹி வழிபாடு

தீராத நோய் தீர வாராஹி வழிபாடு

- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். எவ்வளவு தான் நாம் பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணத்தை அனுபவிப்பதற்கு தேவையான உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தால் நாம் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதை வைத்து எதையும் அனுபவிக்க முடியாது என்பதால் முதலில் நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி உடல் ஆரோக்கியமாக இருக்கவும் நோய்களின் தாக்கம் குறையவும் வாராகி அம்மனை வழிபடும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்தி இருக்கிறது. அந்த வகையில் உக்கிர தெய்வங்களுக்கு நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய சக்தி அதிக அளவில் இருக்கிறது. அதிலும் நம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு ஓடோடி வரக்கூடிய தெய்வங்களாக தான் உக்கிர தெய்வங்கள் திகழ்கிறார்கள். அதனால் நாம் வாராகி அம்மனை முழுமனதோடு வழிபாடு செய்ய நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்னும் பட்சத்தில் நம்முடைய நோய்கள் நீங்காமல் போய்விடுமா? கண்டிப்பான முறையில் நீங்கும். அப்படி நோய்கள் நீங்குவதற்கு செய்யக்கூடிய வழிபாட்டை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டிற்கு வாராகி அம்மனின் படம் வேண்டும். வாராகி அம்மனின் படம் இல்லாத பட்சத்தில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம். வாராகி அம்மனுக்கு முன்பாக பஞ்சமுக தீபத்தை ஏற்ற வேண்டும்.

இதை வெறும் தரையில் வைத்து ஏற்றாமல் ஒரு தட்டை வைத்து அதில் பச்சரிசியை பரப்பி அதற்கு மேல் பஞ்சமுக விளக்கை வைத்து இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இலுப்பை எண்ணெய் கிடைக்கவில்லை என்பவர்கள் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய்யை பயன்படுத்தலாம். பஞ்சமுக விளக்கு கிடைக்க வில்லை என்பவர்கள் ஐந்து அகல்விளக்குகளை வைத்து இந்த தீபத்தை ஏற்றலாம். இப்படி தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு வாராகி அம்மனுக்கு நெல்லிக்காய், மாதுளம் பழம் இவற்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு வாராகி அம்மனின் 108 போற்றிகளை கூறி வாராகி அம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து விட வேண்டும். இந்த அகல் விளக்கை எண்ணெய் தீரும் வரை எரியவிட்டு பிறகு குளிர வைத்துவிட வேண்டும். விளக்கை குளிர வைத்த பிறகு நாம் நெய்வேத்தியமாக வைத்த பழங்களை எடுத்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். இந்த முறையில் ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று வழிபட நோய்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் விலகி ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே கடன் தீர, நோய் நீங்க சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியவராக திகழ்வர் சூரிய பகவான் என்பதால் சூரிய பகவானுக்குரிய கிழமையான ஞாயிற்றுக்கிழமை அன்று வாராஹி அம்மனை நாம் வழிபடும் பொழுது வாராகி அம்மனின் அருளால் நமக்கு நோய்களால் ஏற்படக்கூடிய துன்பங்கள் அனைத்தும் விலகும்.

சற்று முன்