தீயவைகள் அனைத்தும் விலக சாய் பாபா மந்திரம்

sai-baba-1

குழந்தைகளாக பிறக்கும் எவருமே நல்லவர்கள் தான். ஆனால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் நல்லவர்களாக இருப்பது அவர்களை வளர்க்கும் பெற்றோர்கள் மற்றும் அவர்களுக்கு கல்வியறிவு புகட்டும் ஆசிரியர்களிடம் உள்ளது. ஆனால் எல்லோருமே இறைவனும், இந்த சமூகமும் விரும்பும் நல்லவர்களாக இருப்பதில்லை. ஒரு சிலர் அவர்களின் சக மனிதர்களின் சகவாசத்தாலும் அவர்கள் வாழும் சூழ்நிலையிலிருந்தும் பல தீய எண்ணங்கள் மற்றும் பழக்கங்களை கற்று வாழ்வில் துன்புறுகிறார்கள். ஒருவரிடம் உள்ள அணைத்து விதமான தீய பழக்கங்களும் நீக்க கூறவேண்டிய ஸ்ரீ சாய் பாபா மந்திரம் இது.

Sai Baba

சாய் பாபா மந்திரம்:

ஓம் சாய் அந்தர்யாமினாய் நமஹ

ஸ்ரீ சாய் பாபாவை மனதில் நினைத்து ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை 108 எண்ணிக்கை அல்லது 1008 எண்ணிக்கையில் கூறலாம். ஆனால் இம்மந்திரத்தின் பலன் விரைந்து கிடைக்க வேண்டுமென்றால் வியாழக்கிழமையில் காலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாகவும், மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள்ளான நேரத்தில் தியானத்தில் அமர்ந்து “ஸ்ரீ சாய் பாபாவை” மனதில் நினைத்து இம்மந்திரத்தை கூற நம்மிடம் இருக்கும் தீய பழக்க, வழக்கங்களை விட்டொழிக்கும் மனபலத்தை சாய் பாபா வழங்குவார்.

பலகோடி முறை பல வகையான உயிர்களாக பிறப்பெடுத்து இறுதியாக தான் இந்த மனித பிறவி வாய்க்கிறது என தியானத்தின் மூலம் இறைவனையும், பிற அனைத்திற்குமான விடைகளை அறிந்த முனிவர்கள் மற்றும் யோகிகள் கூறிய கருத்தாகும். “மானிடராய் பிறக்க மா தவம் செய்திருக்க வேண்டும்” என பாடினார் “மகாகவி பாரதியார்”. அப்பேற்பட்ட கிடைத்தற்கரிய இந்த மானிட பிறவியை எடுத்திருந்தும், சிலர் மேலான நிலையாகிய இறைவனை நோக்கி செல்லாமல், கீழான நிலையாகிய காமம் மற்றும் செல்வத்தின் மயக்கத்தில் சிக்கி தவிக்கின்றனர்.

Sai baba

இப்படி உலகியல் வாழ்வின் மாய வலையில் சிக்கி தவிக்கும் மக்களில் சிலர் அவர்களால் முடியாவிட்டாலும், இறைவனை அறியவும் அவரை தங்களுள் உணரவும் விரும்புகின்றனர். இந்த வகையான மனிதர்கள் தங்களை இறைவனை நோக்கி அழைத்து செல்ல ஏதேனும் ஒரு ஞானகுருவிடம் சரண் புக வேண்டும் அப்படியான ஒரு ஞானகுரு ஷீர்டி ஸ்ரீ சாய் பாபா ஆவார். அவரை நாம் பற்றிக்கொள்வதால் நம்மை மேலான நிலைக்கு உயர்த்துகிறார் ஸ்ரீ சாய் பாபா.

இதையும் படிக்கலாமே:
மனக்கவலைகளை போக்கி இன்பம் தரும் சாய் பாபா மந்திரம்

English Overview:
Here we have Sai Baba mantra which helps to come out from bad habits. If one chant this mantra on Thursday then he will get extra benefits.