நம்முடைய வாழ்க்கையில் நாம் எந்த அளவிற்கு நேர்மறையாக செயலாற்றுகிறோமோ அந்த அளவிற்கு நமக்கும் நேர்மறையான பலன்களை கிடைக்கும். ஆனால் நம்முடைய முன்னேற்றத்தில் விருப்பமில்லாதவர்களால் நமக்கு எதிர்மறை ஆற்றல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த எதிர்மறை ஆற்றல்களை நாம் பல வகைகளில் கூறுவோம். பொதுவாக கூற வேண்டும் என்றால் கண் திருஷ்டி என்று கூறலாம். இதையும் தாண்டி நன்றாகவே இருக்கக் கூடாது என்பதற்காக பல தீய சக்திகளை ஏவி விடுபவர்களும் இருக்கிறார்கள். இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் அமைப்பாலும் நமக்கு எதிர்மறை ஆற்றல்கள் என்பது ஏற்படும். இப்படி எந்த ரூபத்திலாவது நம்முடைய வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலாலோ அல்லது தீய சக்திகளாலோ பிரச்சனைகள் ஏற்படுகிறது என்னும் பட்சத்தில் அதை நாம் விரட்டி அடித்தால் தான் நம்மால் அடுத்த கட்ட முன்னேற்றத்தையே அடைய முடியும். அப்படி விரட்டி அடிப்பதற்கு என்று பல பரிகாரங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வீட்டில் இருக்கும் தீய சக்திகள் விலக
எந்த அளவிற்கு நம்முடைய வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து இருக்கிறதோ அந்த அளவிற்கு நமக்கு நன்மைகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் நேர்மறையாக இருக்கும் பட்சத்தில் நம்மை சுற்றி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். மேலும் நம்முடைய வீட்டில் நல்ல தேவதைகள் இருப்பார்கள். அவர்கள் எப்பொழுதுமே சதாப்து சதாப்து என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதனால் தான் நாம் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் நன்மை தரக்கூடிய வார்த்தையாக இருக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் அன்றைய காலத்தில் கூறினார்கள்.
அப்படி நாம் நன்மைகள் தரக்கூடிய வார்த்தைகளை மட்டுமே உச்சரித்துக் கொண்டு இருந்தோம் என்றால் அந்த தேவதைகள் சதாப்து என்று கூறும் பொழுது அது அப்படியே நடந்து விடும். இதே எதிர்மறை வார்த்தைகளை உபயோகித்தோம் என்றால் என்னவாகும்? எதிர்மறையான செயல்கள் தானே நடைபெறும். அதனால் நம்முடைய வீட்டில் எந்த வித தீய சக்திகளும் அணுகக் கூடாது என்றால் முதலில் நாம் நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தி பேச வேண்டும்.
இதோடு மட்டுமல்லாமல் தினமும் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து நமக்குத் தெரிந்த மந்திரங்களையும் சுவாமியின் பாடல்களையோ அமர்ந்து உச்சரிக்க வேண்டும். அப்படி எதுவும் தெரியாத பட்சத்தில் கைபேசி மூலம் ஒலிக்கச் செய்யலாம். மேலும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி தூபம் போட்டு வீடு முழுவதும் காட்ட வேண்டும். இவை அனைத்துமே பொதுவாக பலரும் செய்யக்கூடிய காரியங்கள் தான்.
இதையும் தாண்டி நமக்கு எதிர்மறை ஆற்றலால் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்னும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமை என்பது திருஷ்டி சுத்தி போடுவதற்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. அதனால் அன்றைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு ஒரு கண்ணாடி டம்ளர் அல்லது ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள்.
அது நிறைய தண்ணீரை பிடித்து அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு வீட்டில் அரைத்த சுத்தமான மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் போட்டு உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். அந்த தண்ணீரை யாரும் தொடக்கூடாது. அந்த அளவிற்கு பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். அன்று இரவு 9 மணிக்கு மேல் இந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு வீட்டு நிலை வாசல் வழியாக வெளியே சென்று கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள்.
இப்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாம் செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்களும், தீய சக்திகளும் விலகும். மேலும் நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே:கடன் பிரச்சினையை தீர்க்கும் செவ்வாய்க்கிழமை மைத்ர முகூர்த்த நேரம்
இந்த எளிமையான தண்ணீர் பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த முறையில் செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் நன்மைகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.