இந்த வேர் உங்கள் வீட்டில் இருந்தால் எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை

vilvam1
- Advertisement -

பொதுவாக வில்வமரத்தின் புனிதத்தை நாம் எல்லோரும் அறிவோம். தீராத பாவங்களாக இருந்தாலும், அந்த பாவத்தை போக்கக்கூடிய சக்தியானது வில்வ இலைகளுக்கு உண்டு. வில்வ இலைகளால் சிவனுக்கு தொடர்ந்து அர்ச்சனை செய்து வந்தால் நம் பாவங்கள் விலகும் என்பதும் ஐதீகம். இப்படிப்பட்ட வில்வ மரத்தினை நம்முடைய வீட்டிலும் வைத்து வளர்க்கலாம். ஆனால் அதனுடைய புனிதத் தன்மை கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தீட்டு சம்பந்தப்பட்ட விசேஷங்களுக்கு சென்று வந்தாலும், பெண்கள் மாதவிடாய் காலங்களிலும், வில்வமரத்தினை தொடுதல் கூடாது. வீட்டில் வில்வ மரத்தை வைத்திருப்பவர்கள் பௌர்ணமி தினத்திலும், வெள்ளிக்கிழமை அன்றும் லக்ஷ்மியின் துதியை கூறி நைவேத்தியமாக கற்கண்டு வைத்து வில்வ மரத்தை வழிபட வேண்டும்.

vilvam

“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் வில்வ ரூபிண்யை சௌபாக்ய லட்சுமியை தனதாண்ய கர்யை நமோ நம!” மகாலட்சுமியின் இந்தத் துதியினை 32, 54, 108 இதில் ஏதாவது ஒரு கணக்கில் மந்திரத்தை உச்சரிப்பது நல்ல பலனை தரும். வில்வமரம் இருக்கும் இடத்தில் கட்டாயம் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். இந்த மந்திரத்தை சொல்லி, மனதார வில்வமரத்தை தொடர்ந்து வழிபட்டு வந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.

- Advertisement -

காசியில் இருந்து ராமேஸ்வரம் வரை உள்ள சிவலிங்கங்களை வழிபட்ட பலனை நாம் பெற முடியும். இந்த வில்வ மரத்திற்கு இத்தனை சிறப்புகள் இருக்கிறது என்றால், அதனுடைய வேருக்கு எத்தனை மகிமைகள் இருக்கும். வேரின் சிறப்பைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

vilvam tree

இந்த பரிகாரத்தை காய் காய்க்காத வில்வ மரத்தில் தான் செய்ய வேண்டும். வளர்பிறையில் வரும் வியாழக்கிழமை அன்று காய்க் காய்காத வில்வமரத்தின் வடக்குப் பக்கமாக நோக்கி செல்லும் வேரை, ஆயுதம் படாமல் கைகளாலேயே கிள்ளி எடுக்க வேண்டும். இதன்மூலம் மரத்திற்கு எந்த ஒரு சேதாரமும் ஏற்படக்கூடாது. பக்கவாட்டில் இருந்து இந்த வேரினை எடுத்துக் கொள்ளலாம். வடக்கு நோக்கி செல்லும் பக்கத்திலிருந்து எடுக்கவேண்டும்.

- Advertisement -

வேரை எடுப்பதற்கு முன்பு, சிறிது மஞ்சள் பொடியை தூவி வில்வமரத்திடம் மனதார வேண்டி, ‘நம்முடைய நன்மைக்காகத்தான் வேர் எடுக்கப்படுகின்றது’ என்பதை மனதார சொல்லி, அதன் பின்பு வேரை கிள்ளி எடுத்துக் கொள்ளுங்கள். இப்படியாக முறைப்படி எடுக்கப்பட்ட வேரை, நம் வீட்டிற்கு எடுத்து வந்த பிறகு, முதலில் தண்ணீரால் அபிஷேகம் செய்து, அதன் பின்பு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து, தீபாராதனை எல்லாம் காட்டி, வெள்ளி தாயத்தில் போட்டு கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.

எந்த விதமான கெட்ட சக்தியும் நம் அருகில் கூட வர முடியாது. கண் திருஷ்டிகள் காணாமல் போய்விடும். மகாலட்சுமி கலாட்சம் நம் வீட்டிற்குள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அதாவது பணவரவில் இருந்த எப்பேர்பட்ட தடையாக இருந்தாலும் அதை தவிர்க்கும் சக்தியானது இந்த வில்வ மரத்தின் வேருக்கு உள்ளது.

- Advertisement -

vilvam

இதேபோன்று சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு இருக்கும். இப்படிப்பட்ட சமயத்தில் ஒரு சிறிய துண்டு வில்வ வேரை வலது கை மணிக்கட்டில் கட்டிவிட வேண்டும். இரத்தப் போக்கானது உடனடியாக குறையும் என்பது மூலிகை மருத்துவமாக நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட பல வகையான நன்மையைத் தரும் இந்த வில்வ மரமும் சிறப்பானது தான். வில்வ மரத்தின் வேரும் மிக அற்புதமான பலனை தரக்கூடியது தான் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்திருப்பீர்கள். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து தான் பார்ப்போமே! கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியின் மூலம், எத்தனை பேர், எத்தனை இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அதற்கான இவ்வளவு சுலபமான தீர்வை நம் முன்னோர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, பழைய நூல்களில் சொல்லியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
வீட்டில் இருக்கும் தங்கம் அடகு கடைக்கு செல்லாமல் இருக்கவும், அடகு கடையில் இருக்கும் தங்கம், வீட்டிற்கு சீக்கிரம் திரும்பவும் என்னதான் செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Theeya sakthi vilaga Tamil. Thushta sakthi. Theeya sakthi in Tamil. Veetil theeya sakthi. Theeya sakthiyai viratta. Theeya sakthi neenga.

- Advertisement -