நாளை (4/4/2021) தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவருக்கு இந்த மலர்களை சாற்றி வேண்டினால் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்! உங்களை எதிர்க்கும் பகைவர்கள் தொல்லை ஒழியும்.

kala-bairavar-sevvarali

தேய்பிறை அஷ்டமி வழிபாடு என்பது பைரவருக்கு உரிய வழிபாடு ஆகும். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதியிலும் பைரவருக்கு விசேஷமான பூஜைகள் பல்வேறு திருத்தலங்களில் நடப்பது உண்டு. கலியுகத்தின் காக்கும் கடவுளாக விளங்கும் காலபைரவர் நம் கோரிக்கைகளை எளிதாக நிறைவேற்றி கொடுப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அவரை தேய்பிறையில் எவ்வாறு வழிபடுவது?

sathur-kala-bairavar

சிவபெருமானுடைய ஸ்வரூபமாக விளங்கும் பைரவர் நாயை வாகனமாக கொண்டுள்ளவர். பைரவர் உடைய அருள் பெற தினமும் இரவில் ஒரு கைப்பிடி சோறாவது நாய்களுக்கு வையுங்கள். இதனால் வீட்டில் துஷ்ட சக்திகள் அண்டாது, பகைவர் தொல்லை, கண் திருஷ்டி பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

பைரவருக்கு உகந்த மலர்களை சாற்றி வழிபடும் பொழுது அதற்குரிய பலன்களும் விசேஷமாக இருக்கும். பைரவர் திருத்தலங்களில் செவ்வரளி மலர்களும், செந்நிற மலர்களும் சாற்றி வழிபடுவது உண்டு. சிவப்பு என்பது பைரவருக்கு உகந்த நிறமாக இருக்கிறது. சிகப்பு வண்ண மலர்கள் எதுவானாலும் அவற்றை மாலையாகக் கோர்த்து பைரவரை சாற்றி வழிபட்டு வந்தால் சகல பிரச்சனைகளும் தீரும்.

arali

ஒவ்வொருவருடைய மனதிலும் ஏதாவது ஒரு கனவுகளும், ஆசைகளும் நிச்சயமாக இருக்கும். கனவுகள் விரைவில் பலிதமாக பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது சிறப்பம்சமாகும். கடன் தொல்லைகள் நீங்கவும், பகைவர்கள் தொல்லை நீங்கவும், இழந்த பொருட்களை மீட்கவும், வழக்குகளில் வெற்றி பெறவும் பைரவர் வழிபாடு செய்வது உத்தமம்.

- Advertisement -

மேலும் 64 வகை பைரவர்களில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்யும் பொழுது செல்வ வளங்களும், பணவரவுகளும் மென்மேலும் அதிகரிக்கக்கூடும். ஸ்வர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு கோவில்களில் மட்டுமல்லாமல் நம் வீட்டிலேயே நாணயங்களை அர்ச்சித்து செய்வது வழக்கம். குபேரனுக்கு எப்படி நாணய அர்ச்சனை செய்யப்படுகிறதோ? அதேபோல ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் நாணயங்களால் அர்ச்சனை செய்யும் பொழுது எல்லா வகையான செல்வங்களும், 16 பேறுகளும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.

swarna-bairavar3

பைரவர் உடைய மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது எமபயம் நீங்கும். நோய் நொடிகள் யாவும் விலகுவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. கீழ்வரும் பைரவர் காயத்ரி மந்திரத்தை தேய்பிறை அஷ்டமியில் 108 முறை உச்சரித்து வருபவர்களுக்கு எவ்வித நோயும் அண்டாது. தீராத நோய்கள் அனைத்தும் தீர்வததாக சாஸ்திரங்கள் கூறுகிறது.

பைரவர் காயத்ரி மந்திரம்:
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே!
சூல ஹஸ்தாய தீமஹி!
தன்னோ பைரவ ப்ரசோதயாத்!!

swarna-bairavar2

நாளை காலை 9:40 மணி முதல் ஆரம்பமாகும் தேய்பிறை அஷ்டமி மறுநாள் வரை நீடிக்கும் என்பதால் நீங்கள் காலை, மாலை பைரவர் வழிபாடு செய்து கொள்ளலாம். ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் படம் வைத்திருப்பவர்கள் உங்களிடம் இருக்கும் தங்க நகைகளை பூஜையில் வைத்து பூஜைகள் செய்யலாம்.

மனதில் இருக்கும் வேண்டுதல்கள் விரைவில் பலிக்க சிவனின் ஸ்வரூபமாக இருக்கும் பைரவர் சன்னிதிக்குச் சென்று செவ்வரளி மலர்கள் அல்லது செந்நிற மலர்களை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். எத்தகைய துன்பங்களும் விரைவாக நீங்க பைரவர் நிச்சயமாக அருள் புரிவார். அவருடைய திரு நாமங்களை உச்சரிப்பவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வி என்பதே கிடையாது. எந்த ஒரு பகைவர்களின் தொல்லயும் என்றும் அவர்களிடத்தில் அண்டுவதும் இல்லை. எனவே ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் பைரவர் வழிபாடு செய்வதை மறந்து விடாதீர்கள்.