6 மாதங்கள் வரை தேங்காயைக் கெட்டுப் போகாமல், பாதுகாத்து வைக்க முடியுமா? அது எப்படி? பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு கூட சின்ன சின்ன டிப்ஸ்.

coconut3
- Advertisement -

பொதுவாகவே காலத்திற்கு ஏற்ப, தேங்காயின் விலை என்பது ஏறும், இறங்கும். சில பேர் விலை குறைவாக இருக்கும்போது தேங்காய் வாங்கி வீட்டில் சேமித்து வைத்துக்கொள்வார்கள். அதாவது பத்து தேங்காய்களுக்கு மேல் வாங்கி சேமிக்கும் பழக்கமும் சில பேர் வீட்டில் உள்ளது. சில சமயங்களில், அந்த தேங்காயில் ஓரிரண்டு தேங்காய்கள் அழுகிப் போய் விடும். இதற்கு மேலும் அழுகிப் போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. இப்படி முழு தேங்காயை எப்படி வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகாமல் இருக்கும் என்பதைப் பற்றியும், உடைந்த தேங்காயை ஃப்ரிட்ஜில் பக்குவமாக எப்படி ஸ்டோர் செய்வது என்பதைப் பற்றியும் ஃப்ரிட்ஜ் இல்லாதவர்கள், உடைத்த தேங்காயை எப்படி பாதுகாத்து வைப்பது என்பதை பற்றியும் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mattai-thengai-coconut

முதலில் தேங்காயில் இரண்டு வகை உள்ளது. பழைய தேங்காய் ஒன்று. புதிய தேங்காய் ஒன்று. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தேங்காய் நிறத்திலேயே கொஞ்சம் டார்கான நிறத்தில் இருக்கும் தேங்காய் பழைய தேங்காய் என்று சொல்லுவார்கள். பார்ப்பதற்கு கொஞ்சம் லைட்டான நிறத்தில் இருக்கும் தேங்காயை புது தேங்காய் என்று சொல்லுவார்கள். பொதுவாக இந்த புதிய தேங்காயை வாங்கி  நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள முடியாது. அது சீக்கிரமே கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உண்டு.

- Advertisement -

நீண்ட நாட்களுக்கு எடுத்துவைக்க வேண்டும் என்றால், பழைய தேங்காயை வாங்கி வைத்துக் கொள்வது தான் நல்லது. எப்போதுமே தேங்காயை வீட்டில் வாங்கி வந்து அடுக்கி வைக்கும்போது, தேங்காயின் குடுமிப் பக்கமானது எப்போதுமே மேலே பார்த்தவாறு தான் இருக்க வேண்டும். இப்படியாக நீங்க வாங்கிய தேங்காய்களை எல்லாம் மேல் இருக்கக் கூடிய குடுமி, வானத்தைப் பார்த்தவாறு இருக்கும்படி அடுக்கி வைத்து விடுங்கள். அதை அடிக்கடி நகத்த கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. சில பேர் உரிக்காத தேங்காயை, மட்டையோடு வாங்கி சேகரித்து வைப்பார்கள். அந்த தேங்காயையும் இப்படி குடிமி பக்கம் மேலே பார்த்தவாறு வைப்பது நல்லது.

coconut

தேங்காயின் குடுமிப் பக்கத்தை மேலே பார்த்தவாறு வைத்தால், தேங்காய் எப்படி வெகு நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே, தேங்காய் குடுமி இருக்கும் பக்கத்தில், மூன்று கண் இருக்கும். அந்த மூன்று கண்ணுமே கொஞ்சம் நாசுக்கான தன்மை கொண்டது. அந்த இடத்தில் தேங்காய் தண்ணீர் படும்போது அந்த தேங்காய் சீக்கிரமே அழுகிப் போய் விடும். அதாவது அந்த கண் பகுதி மிகவும் மெல்லிய தன்மை கொண்டது. கெட்டுப்போன தேங்காய்களுக்கு அந்த இடத்தில் ஓட்டை விழும்.

- Advertisement -

நாம் குடுமி பக்கத்தை மேலே பார்த்து வைக்கும் போது, அந்த தேங்காய் தண்ணீர் அந்த, தேங்காய், கண்களில் படாமல் இருக்கும். இதனால் தேங்காய் சீக்கிரமாக கெட்டுப் போவதற்கு வாய்ப்பே இல்லை. குறைந்தது 6 மாதத்திற்கு தேங்காய் கெட்டுப் போகாமல் இருக்கும். சரி உடைத்த தேங்காயை எப்படி பாதுகாப்பது?

otrai kan thengai

உங்களுடைய வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லை என்றால், சுத்தமான குடிக்கிற தண்ணீரில் தேங்காய் மூடிகளை மூழ்க வைத்து, மேலே ஒரு வெள்ளைத் துணியை போட்டு மூடி பாதுகாத்துக் கொள்ளலாம். தேங்காயை உடைத்தார்கள் என்றால், அதில் நீங்கள் முதலில் கண் உள்ள பக்கத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் பக்கம் சீக்கிரமாகவே கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

மீதமுள்ள பாதி முடியை தண்ணீரில் மூழ்க வைத்து பாதுகாத்து கொள்ளலாம். அந்த தேங்காய் மூடியில் சிறிது உப்பை தடவி தண்ணீரில் போட்டு வைத்தாலும் கூட இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு சேர்த்து தேங்காய் அழுகாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தேங்காயில் நிரப்பி வைத்திருக்கும் தண்ணீரை ஒரு நாளைக்கு, மூன்று முறையாவது கட்டாயம் மாற்ற வேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

coconut2

அடுத்தபடியாக துருவிய தேங்காயாக இருந்தால், ஒரு காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு, மூடிவிட்டு, ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசரில் ஸ்டோர் செய்து வைத்தால், அந்தத் தேங்காய் இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் வரை கூட கெட்டுப்போகாமல் இருக்கும்.

coconut1

அதுவே தேங்காய் பக்தைகள் என்று சொல்லுவார்கள் அல்லவா? தேங்காயிலிருந்து பத்தை போட்டு எடுத்து வைத்த தேங்காய் துண்டுகளை, ஒரு சில்வர் டப்பாவில் போட்டு, அந்த துண்டுகள் மூழ்கும் அளவிற்கு குடிக்கிற தண்ணீரை ஊற்றி, மூடி போட்டு, ஃப்ரீசர் அல்லாமல், பிரிட்ஜின் ஏதாவது ஒரு மூலையில் வைத்தாலும் தேங்காய் இரண்டு வாரங்களுக்கு கெட்டுப்போகாமல், பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த குறிப்புகள் பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
கருத்துப்போன கவரிங் நகைகளை இனி தூக்கி போட வேண்டாம். பாசி பிடித்த கவரிங் நகைகளை கூட 5 நிமிடத்தில் தங்கம் போல ஜொலிக்க வைக்க முடியும். இப்படி செஞ்சு பாருங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -