இப்பதான் உங்க வீட்ல இட்லி மாவு அரைச்சு வச்சிருக்கீங்களா? உடனே அந்த மாவை எடுத்து இத செஞ்சு பாருங்க! வெறும் 10 நிமிடமும், 2 பொருள் மட்டுமே போதும்.

paniyaram2
- Advertisement -

உங்கள் வீட்டில் இன்னைக்குத்தான் இட்லி மாவை அரைத்து வைத்திருந்தால், அந்த மாவு புளிக்க கூட தேவையில்லை. கெட்டிப் பதத்தில் இருக்கும், இட்லி மாவை எடுத்து ஒரு சூப்பரான தேங்காய் பால் பணியாரத்தை எப்படி செய்வது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எந்த கஷ்டமும் வேண்டாம். ஆரோக்கியமான, நிறைவான உணவு இது. உங்க வீட்ல மாவு அரைச்சு வச்சிருந்தா, இப்பவே இத செஞ்சுதான் பாருங்களேன்! எப்படி இருக்குதுன்னு? திரும்பத்திரும்ப கட்டாயம் இட்லி மாவு அரைக்கும் போதெல்லாம், இத செஞ்சிட்டே இருப்பீங்க.

idli-mavu

Step 1:
முதலில் கெட்டியாக இருக்கும் இட்லி மாவு ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். உப்பு போட்டு கரைப்பதற்கு முன்பாகவே மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கப் அளவு தேங்காய் துருவலை எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை, ஏலக்காய் பொடி, இட்லி மாவை பொரித்து எடுப்பதற்குத் தேவையான எண்ணெய், இந்த பொருட்கள் இருந்தாலே போதும்‌. இவையெல்லாம் நம் வீட்டில் இருக்கும் பொருட்கள் தானே, இதை வைத்துதான் இந்த பணியாரத்தை செய்யப் போகின்றோம்.

- Advertisement -

Step 2:
முதலில் துருவி வைத்திருக்கும் தேங்காயை, மிக்ஸியில் போட்டு இரண்டு ஏலக்காய்களை போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, அரைத்து, அதிலிருந்து தேங்காய் பாலை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் பாலை கொஞ்சம் திக்காக எடுத்துக்கொள்ளுங்கள். ரொம்பவும் தண்ணீர் பதத்தில் இருந்தால், ருசி குறைந்து விடும். அந்த தேங்காயில் இருந்து இரண்டு முறை பிழிந்து பால் எடுத்தாலே போதுமானது. அந்தத் தேங்காய் பாலுக்கு, உங்களுடைய சுவைக்கு ஏற்றார்போல் சர்க்கரையைப் போட்டு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

paniyaram

Step 3:
அடுத்தபடியாக இட்லி மாவில் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, இவைகளை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இட்லி மாவு கட்டாயம் கெட்டியாக தான் இருக்க வேண்டும். கொஞ்சம் மாவு நீர்த்து விட்டால் கூட, இந்த போண்டா பிரிந்து பிரிந்து போய் விடும்.

- Advertisement -

கடாயில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி, சூடு படுத்திக் கொள்ள வேண்டும். இட்லி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கையில் எடுத்து சிறு சிறு போண்டாக்களாக நிறைய எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டியதுதான். போண்டாவை, பெரியதாக போட வேண்டாம். சுவை சேராது. சின்ன உருண்டைகளாக விட்டுக் கொடுங்கள்.

paniyaram1

சுட்டு எடுத்த இந்த போண்டாக்களை, சுடசுட தயாராக வைத்திருக்கும் தேங்காய்ப் பாலில் போட்டு 10 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு பரிமாறி பாருங்கள். சூப்பரான, ஆரோக்கியமான, இந்த தேங்காய் பால் பணியாரம் எப்படி இருக்குமென்று. வாயில் வைத்து உடனேயே கரைந்து உள்ளே போய்விடும். குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இந்த  ஆரோக்கியமான தேங்காய் பால் பணியாரம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
அழகை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்ள, பார்ப்பதற்கு பலபலன்னு இருக்க, இவ்வளவு ஈஸி டிப்ஸா? காசு கூட நிறைய செலவாகாது. இந்த 2 பொருள் போதும்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -