தேய்பிறை நிலவு தேய்வது போல, உங்களது கடனும் தேய்ந்து கரைந்து காணாமல் போகும். நாளை, இந்த பரிகாரத்தை செய்ய தவற விட்டுவிடாதீர்கள்.

powrnami1
- Advertisement -

பொதுவாகவே நம் கஷ்டங்கள் தேய்ந்து போக வேண்டுமென்றால் பரிகாரங்களை தேய்பிறையில் செய்ய வேண்டும். சுபிட்சமான காரியங்கள் நம்முடைய வீட்டில் நடக்க வேண்டும், நல்லது நடக்க வேண்டும் என்றால் பரிகார வழிபாட்டு முறைகளை வளர்பிறையில் செய்ய வேண்டும். அந்த வரிசையில் நமக்கு இருக்கும் கஷ்டம், கடன் தொல்லை காணாமல் போக தேய்பிறையில் என்ன பரிகாரம் செய்யலாம்? பவுர்ணமி முடிந்து மூன்றாவது நாள் தேய்பிறை தொடங்கும்‌. அதாவது நேற்று பவுர்ணமி, நாளை பவுர்ணமியை அடுத்த மூன்றாவது நாள் வரும் அல்லவா? நாளைய தினம் இந்த பரிகாரத்தை செய்து அனைவரும் பலன் பெறலாம்.

kadan

பொதுவாகவே இந்த கடன் பிரச்சினை என்பது எதனால் வருகிறது? மகாலட்சுமி நம் வீட்டில் தங்காததன் காரணமாகத் தான். மகாலட்சுமிக்கு சொந்தமாக உள்ள ஒரு பொருள் என்றால் அது நம் வீட்டில் இருக்கும் கல்லுப்பு. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

- Advertisement -

நாளை காலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். வீட்டில் இருக்கும் ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே ஒரு வெற்றிலையை வைத்து விடுங்கள். வெற்றிலைக்கு நடுவே கொஞ்சமாக கல் உப்பை வைத்து, அதன் உள்ளே ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, லட்சுமி தாயாரிடம், கடன் கரைந்து போக வேண்டும் என்று மனமுருகி வேண்டுதல் வைக்க வேண்டும்.

uppu

வேண்டுதல் முடியும் வரை இதை முடிச்சு போடக்கூடாது. வேண்டுதல் வைக்கும்போது வெற்றிலையின் மேல் இருக்கக் கூடிய கல் உப்பை பார்த்துக் கொண்டேதான் வேண்டுதல் வைக்க வேண்டும். வழக்கம் போல இந்த பரிகாரத்தை செய்யும் போது பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். மனதார வேண்டுதலை முடித்தபின்பு மஞ்சள் துணியில் வைத்திருக்கும் வெற்றிலை, உப்பு, 1 ரூபாய் நாணயத்தை அப்படியே சிறிய முடிச்சாக கட்டி மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

நாளை புதன்கிழமை இந்த பரிகாரத்தை செய்து, மகாலட்சுமி தாயாரை வழிபட்டு இருப்பீர்கள். நாளை மறுநாள் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, மகாலட்சுமியிடம் மறுபடி மனமுருகி வேண்டி, முடிச்சை அவிழ்த்து வெற்றிலையை பசுமாட்டிற்கு கொடுத்துவிடுங்கள். உள்ளே இருக்கும் உப்பை தண்ணீரில் கரைக்க வேண்டும். ‘கடன் கரைய வேண்டும்! கடன் கரைய வேண்டும்! கடன் கரைய வேண்டும்!’ என்ற வார்த்தையை உச்சரித்துக்கொண்டே உப்பைத் தண்ணீரில் கரைக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

water

அடுத்தபடியாக முடிச்சில் வைத்த ஒரு ரூபாய்க்கு கற்பூரத்தை வாங்கி உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்றி விடுங்கள். இந்த பரிகாரத்தை மாதம்தோறும் வரக்கூடிய தேய்பிறை அன்று செய்யலாம். உங்கள் கடன் கரையும் வரை செய்து கொண்டு வாருங்கள். நிச்சயமாக எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அது கூடிய விரைவில் கரைந்துவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் நம்பிக்கையோடு செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -