ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை எந்தக் கிழமையில் எந்தெந்த பொருட்களை வாங்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாமா?

rice-date-calendar
- Advertisement -

நம் முன்னோர்கள் குறிப்பிட்டு வைத்துள்ள சில முக்கியமான விஷயங்களை இன்றுவரையிலும் நமது அன்றாட வாழ்வில் பின்பற்றிகொண்டு வருகின்றோம். அவ்வாறு நமது முன்னோர்கள் ஒரு சில கிழமைகளில் தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்களையும், ஒரு சில கிழமைகளில் நிச்சயம் செய்யக் கூடாது செயல்களையும் பற்றி குறிப்பிட்டு வைத்துள்ளனர். அவ்வாறு அவர்கள் சொல்லியிருக்கும் குறிப்புகளின் படி எந்த கிழமைகளில் எந்த பொருட்களை வாங்கினால் நமக்கான நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து பயணிப்போம் வாருங்கள்.

monday

திங்கள்:
சந்திரன் மட்டும் சிவபெருமானுக்கு உகந்த நாள் திங்கட்கிழமை ஆகும். இந்த தினத்தன்று வெள்ளை நிறத்தில் இருக்கும் பொருட்களை வாங்குவதால் உங்கள் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். அவ்வாறாக திங்கட்கிழமை அன்று அரிசி, சர்க்கரை, பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்குவது சிறந்த பலன்களை கொடுக்கும். ஆனால் திங்கட்கிழமை தினத்தில் தானியங்கள், எழுதும் பொருட்கள், மின்னணு பொருட்கள் போன்றவற்றை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

செவ்வாய்:
செவ்வாய்க்கிழமை முருகன் மற்றும் ஆஞ்சநேயருக்கு உகந்த நாளாகும். இன்றைய தினத்தில் நிலம் வாங்கவோ விற்கவோ செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதேபோல் சொத்து தொடர்பான அனைத்து விஷயங்களையும் இன்றைய தினத்தில் செய்வது நன்மையை கொடுக்கும். செவ்வாய்க்கிழமையில் பால், மரம் மற்றும் தோல் சம்பந்தமான பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவேண்டும்.

rice-arisi-alavai

புதன்:
இன்றைய தினம் புதன் பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தினமாகும். புதன்கிழமை அன்று பச்சை காய்கறிகள், வீட்டு அலங்கார பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் கல்வி சம்பந்தமான பொருட்களை வாங்குவதன் மூலம் வீட்டில் எப்பொழுதும் நிறைய பொருட்கள் சேர்ந்து கொண்டிருக்கும். ஆனால் இன்றைய தினத்தில் பாத்திரங்கள் அரிசி, மருந்து மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

வியாழன்:
வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்கி அவரது ஆசி பெறுவதற்கான சிறந்த நாளாகும். இன்றைய தினத்தில் மின் சாதனப் பொருட்களான டிவி, ஃப்ரிட்ஜ், கம்ப்யூட்டர், செல்போன் போன்ற பொருட்களை வாங்குவது வீட்டிற்கு நன்மையே அளிக்கும். இந்த நாளில் கண்ணாடி சம்பந்தமான பொருட்கள் மற்றும் மிகவும் கூர்மையான பொருட்கள் போன்றவற்றை வீட்டிற்குள் கொண்டு வரக்கூடாது.

kamatchi-amman8

வெள்ளி:
வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இன்றைய தினத்தில் மங்களகரமான பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதன பொருட்களை வாங்குவதன் மூலம் வீட்டில் பொருளாதார சூழல் மேன்மை அடையும். இந்த தினத்தில் வாகனங்கள் வாங்குவது, போன்ற சொத்து சம்பந்தமான விஷயங்களைத் தவிர்ப்பது மிகவும் அவசியமாகும்.

sanibagavan1

சனி:
சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய நாளாகும். இந்த நாளில் தண்ணீர் குடிக்கும் குவளைகள் மற்றும் பூச்செடிகள் வாங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆனால் சனிக்கிழமை நாளில் உலோகம் சம்பந்தமான பொருட்கள், மரம் மற்றும் தோல் சம்பந்தமான பொருட்கள், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் இவற்றை வாங்குவது என்பது தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு:
ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானின் அருளைப் பெறுவதற்கான சிறந்த தினமாகும். இன்றைய தினத்தில் கண்ணாடி சம்பந்தமான பொருட்களை வாங்குவது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை அன்று சிவப்பு நிற பொருட்கள், கோதுமை மற்றும் வாகனங்கள் வாங்குவதை தவிர்த்திட வேண்டும்.

- Advertisement -