மனம் சம்பந்தமான குறைபாடுகள் தீர, குழந்தை பாக்கியம் உண்டாக இங்கு செல்லுங்கள்

thingalur-sivan

அறிவியல் ரீதியாக பார்க்கும்போது சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் மனிதர்களின் சிந்தனை, செயல்களில் மாறுபாடுகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது சித்தர்களும்,வானியல் சாஸ்திர வல்லுநர்கள் கூறியுள்ளனர். சந்திரனை தனது முடியில் சூடி சந்திரசேகரன் என்கிற பெயரில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அப்படி சிவபெருமானும் நவகிரகங்களில் சந்திர பகவானும் ஒருசேர அருள்புரியும் திங்களூர் அருள்மிகு கைலாசநாதர் கோயிலின் சிறப்புகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Sivan Temple

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தல வரலாறு

சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இந்த திங்களூர் கைலாசநாதர் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் கைலாசநாதர் என்கிற பெயரிலும், அம்பாள் பெரியநாயகி என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். இக்கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் இருக்கிறது. தீர்த்தம் சந்திர புஷ்கரணி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

தேவாரம் பாடிய திருநாவுக்கரசரை மட்டுமே அனைவரும் அறிவர். ஆனால் திங்களூரில் வாழ்ந்த சிறந்த பக்தரான அப்பூதியடிகளும் அவரின் மனைவியான தேன்மொழி தேவிக்கும் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளில் மூத்தவர் மூத்த திருநாவுக்கரசு என்றும், இளைய மகன் இடையே திருநாவுக்கரசு என்கிற பெயரிலும் அழைக்கப்பட்டனர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிற கொள்கை முழக்கம் கொண்ட அப்பூதியடிகள், திருநாவுக்கரசர் என்கிற பெயரில் தண்ணீர் பந்தல், அன்னதானம் கூடம் அமைத்து மக்களுக்கு சேவை செய்து வந்தார்.

sivan

ஒருமுறை அப்பூதியடிகளின் மூத்த மகனான மூத்த திருநாவுக்கரசை பாம்பு தீண்டியது. அவரை தேவாரம் பாடிய திருநாவுக்கரசர் காப்பாற்றியதாக வரலாறு கூறப்படுகிறது. அப்பூதியடிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் சிலைகள் இன்றும் திங்களூர் கோயிலில் காணலாம்.

- Advertisement -

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தல சிறப்புகள்

குழந்தைக்கு முதல் சோறு ஊட்டும் நிகழ்ச்சி அன்னப்பிரசானம் என்பர். அன்னபிரசன்னம் சடங்கு செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற கோயிலாக கேரள மாநிலம் குருவாயூர் கோயில் இருக்கிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு அன்னப்பிரசானம் சடங்கு செய்வதற்கு மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக இந்த திங்களூர் கைலாசநாதர் கோயில் இருக்கிறது. அஸ்வினி, மிருகசீரிடம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி போன்ற நட்சத்திர தினங்களிலும், சந்திரஹோரை வேளைகளிலும் இக்கோயிலில் குழந்தைகளுக்கு சந்திரனையும், பசுவையும் காண்பித்து ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் பால், தேன் கலந்து குழந்தைக்கு சோறூட்டும் சடங்கை செய்கின்றனர்.

இவ்வாறு சாப்பிடும் குழந்தைக்கு ஜலதேவதையின் அருளும், ஒளஷதி (மருந்து) தேவதையின் அருளும் கிடைத்து அக்குழந்தை பூரண உடல் நலத்தோடு இருக்கும் என்பது ஐதீகம். ஜல தேவதையின் அருளால் அக்குழந்தைக்கு ஜலதோஷம், காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படாது என்றும், ஒளஷதி தேவதையின் அருளால் மருந்து உண்டவுடன் அக்குழந்தையை பீடித்திருக்கும் நோய்கள் நீங்கும் என்பதற்காக இந்த சடங்கு செய்யப்படுகிறது.

Chandra Baghavan

நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்குரிய பரிகார தலமாக இக்கோயில் இருக்கிறது. மனநல பாதிப்பு உள்ளவர்கள், மனக்குழப்பம், சித்த பிரமை ஏற்பட்டவர்கள், தாயாரின் உடல் நலம் பெற விரும்புபவர்கள் மற்றும் ஜாதகத்தில் சந்திரனின் பாதகமான நிலையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இக்கோயிலில் வந்து வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும் என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கையாகும். மேலும் திருமணத்தடை, புத்திர பாக்கியம் இன்மை போன்றவை நீங்கவும் இங்கு வந்து பெரும்பாலான பக்தர்கள் வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் இறைவனுக்கு வஸ்திரம் சாற்றியும், கோயில் திருப்பணிக்கு நன்கொடை அளித்து தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திங்களூர் எனும் ஊரில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
திங்களூர்
தஞ்சாவூர் மாவட்டம் – 613204

தொலைபேசி எண்

4362 – 262499

இதையும் படிக்கலாமே:
வேலைவாய்ப்பின்மை நீங்க இங்கு சென்று வழிபடுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thingalur kailasanathar temple in Tamil. It is also called as Chandran parihara sthalam in Tamil or Thingalur chandran kovil in Tamil or Thanjavur temples in Tamil or Thingalur sivan kovil in Tamil or