இந்த பொங்கலில் இதை செய்ய மறந்திருந்தாலும் அடுத்த பொங்கலிலாவது இதை எல்லாம் செய்ய மறக்காதீர்கள்.

- Advertisement -

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை என அழைக்கப்படுகின்றது. பொதுவாக எந்த ஒரு வருடமும் வருகின்ற பொங்கல் பண்டிகை தினமும் ஒரு சுபமுகூர்த்த நாளாகவே கருதப்படுகின்றது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தினமான பொங்கல் தினத்தன்று நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை குறித்தும் இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

sun1

தை மாதம் முதல் தேதி பொங்கல் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு சூரியன் உதிக்கின்ற கிழக்கு திசையை பார்த்து சூரிய பகவானுக்குரிய இந்த மந்திரத்தை பத்து முறை மனமார துதித்து வழிபட வேண்டும்.

- Advertisement -

ஓம் பாஸ்கராய நம
இந்த சூரிய வழிபாட்டு முறையை உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் சிவன் கோயில்களில் இருக்கும் சூரியபகவான் சந்நிதியிலும் மேற்கொள்ளலாம். அப்படி செய்யும் போது ஐந்து சிவப்பு நிற மலர்களை சூரிய பகவானின் விக்ரகத்திற்கு சமர்ப்பித்து, இந்த மந்திரத்தை குறைந்தது 10 முதல் 108 முறை துதித்து வழிபாடு செய்வதால் உங்கள் ஜாதகத்தில் சூரிய பகவான் கெடுதலான அமைப்பில் இருந்தாலும்,, அதனால் ஏற்படும் ஜாதக தோஷங்கள் நீங்கி, உங்கள் வாழ்வில் நன்மையான மாற்றங்கள் ஏற்பட வழிவகை செய்யும். உடல், மன வலிமை உண்டாகும். கண், எலும்பு சம்பந்தமான நோய்கள், குறைபாடுகள் சிறிது சிறிதாக நீங்க பெறும்.

vellam

பொங்கல் தினத்தன்று காலையில் குளித்து முடித்த பிறகு, ஒரு சிறிய செம்பு பாத்திரத்தில் சிறிதளவு பால் அல்லது சிறிதளவு தண்ணீரை ஊற்றி, சூரிய பகவானை வழிபட்டு, அந்த நீர் அல்லது பாலை நைவேத்தியமாக வைத்து உங்களின் மற்ற காரியங்களை செய்யலாம். இந்த பரிகாரத்தால் உங்களிடம் இருக்கின்ற எதிர்மறை ஆற்றல் நீங்கி, நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற்று, நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேற வழிவகுக்கும்.

- Advertisement -

பொங்கல் தினத்தில் சூரியபகவானுக்கு நைவேத்தியமாக படைக்கப்படும் சர்க்கரை பொங்கலுடன் பயன்படுத்தப்படுகின்ற வெல்லம் சூரியபகவானின் அருள் நிறைந்த ஒரு பண்டமாக கருதப்படுகிறது. இதன் காரணமாகத் தான் தை முதல் தேதியான பொங்கல் தினத்தில் வெல்லம் கலந்து சர்க்கரைப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைத்து பின்பு, அந்த சர்க்கரைப் பொங்கலை பிரசாதமாகக் கருதி பக்தர்கள் உண்கின்றனர். மேலும் பொங்கல் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து விட்டு, சூரிய வழிபாடு செய்வதற்கு முன்பு ஒரு செம்பு கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு வெல்லத்தை கரைத்து, அதை சூரிய பகவானுக்கு நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்வதால் சூரிய பகவானின் மிகுதியான அருளாசிகள் இந்த பரிகாரத்தை செய்யும் நபருக்கு கிடைக்க வழிவகை செய்கிறது.

money

பிறருக்கு தானங்கள், உதவிகள் போன்றவற்றை செய்வதற்கு மிக அற்புதமான தினமாக தைமாதம் முதல் தேதியான பொங்கல் தினம் திகழ்கிறது. வடமொழியில் “மகர சங்கராந்தி” என அழைக்கப்படும் இந்த தினத்தில் எந்த வகையான தானங்களை ஒருவர் செய்தாலும் அவை பன்மடங்கு பெருகி தானம் அளிப்போருக்கு பன்மடங்கு திரும்ப வந்து சேரும் என்பது நம்பிக்கை. குறிப்பாக ஏழைகளுக்கு உங்கள் வசதிக்கேற்ப பணத்தை தானம் அளிப்பதால் எதிர்காலத்தில் உங்களுக்கு அந்த பணம் பன்மடங்காக பெருகி உங்களிடம் சேமிப்பாக மாறும் என்பது உறுதி.

eating-food

இந்த பொங்கல் தினத்தன்று உணவு, உடை கிடைக்கப்பெறாமல் வறுமையில் வாடுகின்ற நபர்களுக்கு உணவு, ஆடை போன்றவற்றை தானம் செய்வது மிகவும் சிறப்பானதாகும். மேலும் இந்த தினத்தில் ஏழைகளுக்கு கோதுமை, கொள்ளு போன்ற தானியங்களை தானமாகத் தருவது உங்களின் முன்னோர்களின் ஆசிகளை உங்களுக்கு பெற்றுத்தரும். இந்த தினத்தில் அன்னதானம் செய்வது இன்னும் மேலான பலன்களை உங்கள் வாழ்வில் ஏற்பட வழிவகை செய்யும்.

- Advertisement -