பொங்கல் தினத்தில் இவற்றை எல்லாம் செய்தால் மகத்தான பலன்களை பெறலாம்.

pongal-festival-2021

பன்னிரண்டு தமிழ் மாதங்களில் சூரிய பகவான் குரு பகவானுக்குரிய தனுசு ராசியிலிருந்து, சனிபகவானின் சொந்த ராசியான மகர ராசிக்குள் பிரவேசிக்கும் மாதம் தான் தை மாதம் எனப்படுகிறது. மகரராசி மாதம் எனப்படும் இந்த தை மாதத்தில் தான் சூரிய பகவான் தென் திசையிலிருந்து வட திசையை நோக்கிய பயணத்தைத் தொடங்குகிற மாதம் ஆகும். இதை வடமொழியில் “உத்தராயணம்” என்பார்கள். பொதுவாக எந்த ஒரு செயலையும் தை மாதத்தில் செய்வது பன்மடங்கு பலன்களைத் தரும். அந்த வகையில் இன்று பிறந்திருக்கும் பொங்கல் பண்டிகையின் சிறப்பு குறித்தும் இன்றைய தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

surya-bhagavan

நவக்கிரகங்களில் சூரியன் மற்றும் சந்திர கிரகங்கள் பல சிறப்புத் தன்மைகள் கொண்ட கிரகங்களாகும். சூரியன் ஒரு மனிதனின் உடலுக்கு காரகன் என்றால், சந்திரன் உயிர் அல்லது ஆன்மாவிற்கு காரகத்துவம் கொண்ட கிரகமாகும். அதே போன்று சூரியன் என்பவர் ஒவ்வொரு மனிதனின் தந்தைக்குரிய காரகத்துவம் கொண்ட கிரகம் ஆவார். சந்திரன் ஒவ்வொரு மனிதனின் தாய்க்கு காரகத்துவம் வகிக்கும் கிரகம் ஆவார். நாம் இந்த உலகில் தோன்றுவதற்கு காரணம் நமது தாய், தந்தை ஆவர். முன்னோர்களை வணங்குவதற்கு மிகவும் சிறப்பு தினங்களாக தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்கள் வருகின்றது. அந்தத் தினங்களைப் போலவே, இன்று பிறந்திருக்கும் பொங்கல் தினம் மறைந்த நம் தாய், தந்தையரை வணங்குதற்குரிய ஒரு சிறப்பான தினமாகும்.

இன்றைய தினம் காலை 06.41 மணிக்கு மேல் பொங்கல் பண்டிகை தினம் சந்திர பகவானுக்குரிய திருவோணம் நட்சத்திரத்தில் வருவது மிகவும் சிறப்பான ஒரு அம்சமாகும். இந்த தினத்தில் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, உங்கள் வீட்டில் இருந்தபடியே வானில் உதித்திருக்கும் சூரிய பகவானை இருக்கரங்களை கூப்பி வணங்க வேண்டும். யோக கலையில் கூறப்படும் “சூரிய நமஸ்காரம்” முறையில் சூரியனை வணங்குவது மிகவும் சிறப்பானதாகும்.

surya-namaskar1

பிறகு உங்களுக்கு அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று, நவகிரக சன்னதிகள் சந்திர பகவானுக்குரிய அல்லி மலர், மல்லிகை போன்ற பூக்களை சந்திரனுக்கு சமர்ப்பித்து, அரிசியை வைத்தியமாக வைத்து, சந்திர பகவானை வழிபட வேண்டும். இதன்பிறகு சுபமுகூர்த்த நேரத்தில் பானை வைத்து, தீ மூட்டி, வெல்லம், அரிசி மற்றும் இதர பொருட்கள் கலந்து பொங்கல் செய்து, அதிலிருந்து சிறிது பொங்கலை முதலில் சூரிய பகவானுக்கு நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்து முடித்ததும், சிறிதளவு பொங்கலை மறைந்த உங்கள் பெற்றோரை மனதார நினைத்து அவர்களுக்கு படைத்து, அதன் பிறகு அந்த பொங்கலை காகங்களுக்கு அல்லது பசு மாடுகளுக்கு உணவாக கொடுத்து விட வேண்டும்.

இன்றைய தினம் சந்திர பகவானை வழிபாடு செய்பவர்கள் சந்திர ஹோரை நேரங்களான காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையான காலங்களில் சந்திர பகவானை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும். மேலும் இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை வருகின்ற சந்திர ஹோரை நேரத்தில் சந்திர பகவானுக்கு இரண்டு மண் அகல் விளக்கில், பசுநெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும். இந்த தீபங்களை உங்கள் வீட்டு பூஜையறையிலோ அல்லது கோயில்களில் சந்திர பகவான் சன்னதியிலோ ஏற்றலாம்.

chandra

மேற்கூறிய முறையில் இன்றைய பொங்கல் தினத்தில் சூரிய மற்றும் சந்திர பகவான் வழிபாடு செய்பவர்களுக்கு மறைந்த தாய், தந்தை வழியில் ஏற்பட்டிருந்த சாபங்கள் நீங்கும். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுவதற்கான அமைப்பு உண்டாகும். மனக்குழப்பங்கள், தேவையற்ற பயங்கள் நீங்கி, சிந்தனையில் தெளிவு உண்டாகும். சோம்பல் குணம் அறவே நீங்கும். உடல் மனம் சார்ந்த நோய்கள் ஏற்படாமல் காக்கும். துர்மரணம் ஏற்படாமல் காக்கும்.