தினமும் காலையில் இதை எல்லாம் செய்தால் அதிஷ்டம் பெருகும் தெரியுமா ?

perumal

காலையில் நமக்கு தூக்கம் கலைந்து விழிக்கும் அந்த நேரத்தில் கடவுளை ஒரு நிமிடம் நினைத்துவிட்டு அடுத்ததாக நாம் சில விஷயங்களை செய்ய வேண்டும். அப்படி என்னென்ன விஷயங்களை நாம் செய்ய வேண்டும். அப்படி செய்வதினால் நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி காணலாம்.

mariyamman

காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலமிடுவதில் இருந்து, இரவு நமது சமையலறையை சுத்தம் செய்து, திரும்ப தூங்க செல்லும்வரை நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் கடவுளை சம்பந்தப்படுத்தி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால் அவைகளை வெறும் சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் என்று மட்டுமே நமக்கு கூறியுள்ளார்கள். இதனுடன் நம் வாழ்க்கையின் அன்றாட நலன்களும் கலந்துதான் இருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் “ஏஹாக்கிருதை” “ஐக்கிய பாவம்” பிரதானமாக இருக்க வேண்டும். ஏஹாக்கிருதை என்பது மனதை இறை சிந்தனையில் ஒருமுகப்படுத்துவது. ஐக்கிய பாவம் என்பது அர்ப்பணிக்கும் உணர்வு. இவைகளைக் கொண்டு நாம் செய்யும் பூஜைகள் இறைவனை சென்றடையும்.

Amman

ஒரு பண்டிகை தினத்தில் இறைவனை வழிபடுவதில் நம் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும். ஆகையால் தான் பண்டிகை காலங்களில் நம் வீடுகளில் இறைவனை வழிபடுவதற்காக ஆளுக்கொரு ஒரு வேலையைச் செய்கிறார்கள். கணவன் கடைக்குச் சென்று பூஜைக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வருவது. மனைவி நெய்வேத்தியதிற்கு தேவையான பிரசாதங்களை சமைத்து வைப்பது, குழந்தைகள் தோரணம் கட்டுவது, பூக்களால் இறைவனை அலங்கரிப்பது போன்ற வேலைகளை செய்வார்கள். இப்படியாக ஒட்டுமொத்த குடும்பமும் அந்த இறை வழிபாட்டில் ஈடுபடும். இதனால் நம் குடும்பத்தில் நன்மை அதிகரிக்கும். அவர்களுக்குள் ஒரு மகிழ்ச்சி உருவாகும்.

- Advertisement -

இவ்வாறு பண்டிகை காலங்களில் மட்டும் அல்லாமல், நாம் தினம்தோறும் இறைவனின் அருளைப் பெற சில வழிபாடுகளும், எளிய மந்திரங்களையும், நமக்காக நம் முன்னோர்களும், மகரிஷிகளும் பல நூல்களில் கூறிவிட்டுத் தான் சென்றிருக்கின்றனர். அதில் சில சுலபமான விஷயங்களை மட்டும் இப்போது நாம் காண்போம்.

காலையில் நாம் எழுந்தவுடன் செய்ய வேண்டிய விஷயங்கள்.

முதலாவதாக உள்ளங்கை தரிசனம் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். உள்ளங்கையில் துவக்கம் முடிவு மத்திய பாகம் இந்த மூன்று இடங்களில் லக்ஷ்மி, பார்வதி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்கள் குடிகொண்டுள்ளார்கல். இதனால் தான் காலையில் எழுந்தவுடன் உள்ளங்கையை காணவேண்டும் என்று கூறியுள்ளனர்.

அடுத்ததாக அனுதினமும் நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமித்தாயினை வணங்க வேண்டும். நம் கால்கள் தரையில் படுவதற்கு முன்பு பூமி தாயிடம் அனுமதி கேட்டு வணங்கி நம் காலினை தரையில் வைக்க வேண்டும்.

மூன்றாவதாக கருட தரிசனம். கருட தரிசனம் நம் கவலைகளை எல்லாம் தீர்த்து விடுமாம். வானில் கருடனை பார்க்கும் பொழுது நம் மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்தையும் மறந்து நம் மனம் இன்பத்தில் லைக்கும். தினமும் வானில் கருட பகவானை காண்பது என்பது இயலாதது. அதனால் கருடனின் படங்களை வீட்டில் வைத்துக்கூட காணலாம்.

Garudan

நான்காவதாக பசுவிற்கு வணக்கம் செலுத்துவது. இதனை கோ வணக்கம் என்றும் கூறுவார்கள். பசுவிற்கு தினம்தோறும் ஒரு கைப்பிடி அளவு புள்ளையோ, முடிந்தால் ஒரு கட்டு அகத்திக்கீரையையோ தானமாக அளிக்கலாம். இதனால் நாம் முன்ஜென்மத்தில் செய்த எந்த பாவமாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட முடியும்.

ஐந்தாவதாக நாம் உண்ணும் உணவினை வணங்க வேண்டும். நாம் உண்ணும் உணவானது இறைவனுக்கு படைக்க பட்ட பின்பு பிரசாதமாக மாறிவிடுகிறது. தண்ணீர் கூட தீர்த்தமாக மாறிவிடுமாம். உணவு உண்பதற்கு முன்பு, நமக்கு அனுதினமும் படியளக்கும் இறைவனுக்கு அதனை நைவேத்தியமாக வைத்துவிட்டு பின்பு உணவு அருந்தினால், நமக்கு அதீக சக்தி கிடைக்கும்.

food

இதுமட்டுமல்லாமல் வீட்டு வாசலில் காலையும் மாலையும் கோலம் போடுவது, நம் வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமமும், பழங்களும், பூக்களும் கொடுப்பது. வீட்டைச் சுற்றி மரங்கள் வளர்ப்பது இவைகள் அனைத்தும் நமக்கு நன்மைகளை அளிக்கும். வீட்டின் வாசலில் கருட கிழங்கினை கட்டினாலும், மா இலை தோரணம், துளசி இவைகளை கட்டுவதினாலும் தீவினைகள் அண்டாது.

இவ்வாறாக சில எளிய நல்ல பழக்க வழக்கங்களை நாம் பின்பற்றும் பொழுது நம் மனதானது பக்குவம் அடைந்து, எந்தவிதமான தீய பழக்கவழக்கங்களுக்கும் செல்லாமல், நன்மைக்கான பாதையை வகுக்கும்.