செய்யும் வேலையில் திறமை வெளிப்பட பரிகாரம்

job
- Advertisement -

சில பேருக்கு நல்ல வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கும். வேலையில்லாத திண்டாட்டம் இருக்கும். சில பேருக்கு நல்ல வேலை கிடைத்திருக்கும், ஆனால் அந்த வேலையில் எவ்வளவு உழைத்தாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. டீம் லீடரிடம், மேனேஜரிடம் எப்போதுமே திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். நம்முடைய திறமையை என்னதான் வெளி படுத்தினாலும், அதன் மூலம் முன்னேற்றம் இருக்காது.

இந்த பிரச்சனைகள் வருவதற்கு காரணம் ஏதோ ஒரு விதமான தரித்திரம் தான். அந்த தரித்திரம் நம்மை விட்டு விலக வேண்டும் என்றால் தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். அந்த தண்ணீரை எப்படி தயார் செய்வது காலையில் எழுந்து இந்த தண்ணீரில் எப்படி முகம் கழுவினால் வாழ்க்கையில் நல்லது நடக்கும் ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

நல்ல வேலை கிடைக்க பரிகாரம்

இரவு தூங்க செல்வதற்கு முன்பாகவே ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக கோமியம், கொஞ்சமாக காசி தீர்த்தம், ஒரு ஸ்பூன் வெண்கடுகு, கொஞ்சமாக பன்னீர் சேர்த்து கலந்து ஒரு மூடி போட்டு வைத்து விடுங்கள். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பு நீங்கள் எழுந்து விட வேண்டும். பல் தேய்த்துக் கொள்ளுங்கள்.

காலை கடன்களை முடித்துவிட்டு, இந்த தண்ணீரைக் கொண்டு உங்களுடைய முகத்தை கழுவ வேண்டும். இரவு தயார் செய்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா அந்த தண்ணீரை எடுத்து முகம் கழுவிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு அரை மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வரலாம். 48 நாள் தொடர்ந்து இந்த தண்ணீரில் முகம் கழுவினால் உங்கள் முகத்தை பிடித்த தரித்திரம் விலகும்.

- Advertisement -

கூடிய சீக்கிரத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருந்தும் கெட்ட பெயர் எடுத்தவர்களுக்கு சீக்கிரம் நல்ல பெயர் கிடைக்கும். எளிமையான பரிகாரம் தான். இருப்பினும் உங்கள் தரிதத்தை சீக்கிரம் போக்குவதற்கு இந்த தண்ணீரை விட சிறந்த மருந்து வேறு எதுவும் கிடையாது. சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து முகத்தை கழுவி விட்டு, பிறகு தூங்கக்கூடாது.

இதையும் படிக்கலாமே: கர்ம வினை நீங்க தானம்

தூங்காமல் குளித்துவிட்டு உங்களுடைய அன்றாட வேலைக்கு செல்லவும். வேலைக்கு செல்பவர்கள் மட்டும்தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. வியாபாரம் செய்பவர்கள் கடை வைத்திருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்தாலும் அவரவர் தொழிலில், அவரவர் சிறந்து விளங்குவீர்கள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -