இடிந்து விழுந்த முருகன் கோவில் மண்டபம் – பலியான பெண் பக்தர்

tiruchendur mandapam

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று யாரும் எதிர்பாராத விதமாக ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. காலை 10.45 மணி அளவில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் திடீரெனெ இடிந்தது.

kovil mandapam

இந்த இடிபாட்டில் பலர் சிக்கியுள்ளனர். முதல் கட்ட அறிக்கையின் படி ஒரு பெண் உயிர் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இது கார்த்திகை மாதம் என்பதால் பக்தர்களில் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்துள்ளது. பிரகார மண்டபத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பக்தர்கள் இடிபாற்றிக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர்.

இடிந்த பரிகார மண்டபம் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. விபத்தை அடுத்து கோவிலின் நடை சார்த்தப்பட்டு மீட்பு பணிகள் தீவிரதமாக நடைபெற்று வருகிறது. தீயணைப்பு படை வீர்கள், கோவில் நிர்வாகிகள் என பலர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

kovil mandapam

பெண் ஒருவர் இறந்த காரணத்தினால் அனைத்து பூஜைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. பரிகாரங்கள் செய்த பின்னரே மீண்டும் பூஜை துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தை நேரில் கண்ட பக்தர்கள் அனைவரும் பெரும் பதற்றம் அடைந்துள்ளனர்.

kovil mandapam

எல்லாம் வல்ல அந்த முருகப் பெருமானின் அருளால் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்றும் இறந்தவர் இறைவனடி சேரவேண்டும் என்றும் அனைவரும் பிராத்திப்போம்.