உங்களுக்கு கல்யாணமே நடக்காதுன்னு சொல்லி இருந்தால் கூட கவலையே வேண்டாம். 9 வாரங்களில் திருமணம் நிச்சயமாகும். இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள்!

siruvapuri-murugan-marraige
- Advertisement -

நிறைய பேருக்கு திருமணத்தில் தடை இருக்கும். சில பேருக்கு ஜாதக கட்டத்தில் திருமணம் நடக்கும் என்ற யோகம் இருந்தாலும் கூட, சில பெண்களுக்கு சீக்கிரத்தில் மாப்பிள்ளை கிடைக்காது, ஆணாக இருந்தால், திருமணம் செய்து கொள்ள, மணமகளை தேடுவதில் சிரமம் இருக்கும். உங்களுடைய ஜாதக கட்டத்தில், உங்களுடைய கர்ம வினையால், தோஷத்தால், திருமணத் தடை இருந்தாலும் கூட கவலை வேண்டாம். இந்த பதிவில் சொல்லக்கூடிய பரிகாரத்தை நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். கட்டாயம் கைமேல் பலன் கிடைக்கும்.

marraige-couple

குறிப்பாக இந்த பரிகாரத்தை திருமணம் ஆகாத பெண், திருமணம் ஆகாத ஆண் தான், செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. திருமணமாகாமல் இருக்கும் ஆண் அல்லது பெண்ணின் பெற்றோரும் செய்யலாம். உடன்பிறந்தவர்களும் செய்யலாம். ஆனால், கட்டாயம் 9 வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இடையில் ஒரு வாரம் கூட தவறக்கூடாது.

- Advertisement -

திருமணம் நடக்க வேண்டும் என்று, வேண்டிக்கொண்டு முருகனின் பாதங்களில் தான் நாம் சரணடையப் போகின்றோம். இதை பரிகாரம் என்று கூட சொல்லமுடியாது. நம்பிக்கையான வழிபாடு என்றே சொல்லலாம். வாரம் தோறும் வரும் செவ்வாய்க் கிழமைகளில் முருகர் கோவிலுக்கு சென்று, இரண்டு நெய் தீபம் ஏற்றி வையுங்கள். அதன் பின்பு தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், இவைகளை வாங்கி கொடுத்து முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். திருமணம் ஆகாத அந்த குறிப்பிட்ட நபரின் பெயர், கோத்திரம், நட்சத்திரம், ராசி, இவைகளைச் மட்டும் சொல்லி அர்ச்சனை செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நீங்கள் அர்ச்சனை செய்யும் பொருட்களோடு சேர்த்து, ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கி வையுங்கள். அர்ச்சனை பொருட்களோடு சேர்த்து அந்த எலுமிச்சை பழத்தை கொடுப்பதற்கு முன்பு, உங்கள் உள்ளங்கைகளில் அந்த எலுமிச்சை பழத்தை வைத்து, இரு கைகளையும் கூப்பி, முருகப் பெருமானை வேண்டி, திருமண தடைகள் நீங்கி, அந்த குறிப்பிட்ட நபருக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டு, அந்த எலுமிச்சை பழத்தை அர்ச்சனை பையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

குருக்களிடம் அந்த அர்ச்சனை பாழத்தை இறைவனின் பாதங்களில் சேர்த்து விடும்படி சொல்லுங்கள். அர்ச்சனை முடித்த பின்பு, மீண்டும் அந்தப் பழத்தை திரும்பி வாங்கிக் கொள்ள வேண்டாம். அந்த வேண்டுதல் நிறைவேற, அந்த எலுமிச்சை பழத்தை முருகப்பெருமானின் பாதங்களிலேயே விட்டு விடுங்கள். அவ்வளவு தான். பிரச்சனையை முருகப்பெருமான் பார்த்துக் கொள்வான்.

lemon1

ஒன்பது வாரங்களும் தொடர்ந்து இதை செய்து வர வேண்டும். இது ஒரு பரிகாரம். இதுதவிர இரண்டாவதாக ஒரு பரிகாரம் உள்ளது. அதையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த பரிகாரத்தை திருமணமாகாத குறிப்பிட்ட அந்த ஆணோ அல்லது பெண்ணோ தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

திருமணம் ஆகாத ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முருகன் கோவிலுக்கு தொடர்ந்து 6 செவ்வாய்க் கிழமைகள் சென்று, அங்கு இருக்கும் முருகப்பெருமானை, மூலவரை தரிசனம் செய்துவிட்டு, அந்த கோவிலிலேயே தனியாக, கல்யாண முருகர் என்று ஒரு சன்னிதானம் இருக்கின்றது. அந்த சன்னிதானத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

Siruvapuri murugan

திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கும் அந்த குறிப்பிட்ட நபர் 6 வாரங்கள் இந்த கோவிலுக்கு சென்று, கல்யாண முருகனுக்கு மாலை வாங்கி அணிவித்து, குங்கும அர்ச்சனை செய்து, கல்யாண முருகர் கழுத்திலிருந்து ஒரு மாலையை பெற்று, தன் கழுத்தில் போட்டுக்கொண்டு, இந்த சிறுவாபுரி முருகன் கோவிலை 6 முறை வலம் வரவேண்டும். 6 வாரங்கள் தொடர்ந்து, இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஆறாவது வாரம் உங்களால் முடிந்த பிரசாதத்தை செய்து, பக்தர்களுக்கு விநியோகம் செய்து, பிரார்த்தனையை நிறைவு செய்துகொள்ள வேண்டும். இந்தப் பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தவர்கள், யாருக்கும் திருமணமாகாமல் இருந்ததே கிடையாது. இது அனுபவப்பூர்வமான உண்மையும் கூட. உங்களது மனதிற்கு பிடித்தமான, மணவாழ்க்கை கட்டாயம் கிடைக்கும்.

siruvapuri_murugan

நிறைய பேருக்கு சிறுவாபுரி முருகன் கோவிலைப் பற்றி தெரிந்திருக்கும். இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த பதிவு. முடிந்தவர்கள் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று, இந்த பரிகாரத்தை செய்யலாம். முடியாதவர்கள் உங்கள் வீட்டில் அருகிலிருக்கும் ஏதாவது ஒரு  முருகன் கோவிலுக்கு சென்று,  எலுமிச்சை பழத்தை வாங்கி வைத்து, முதலில் சொன்ன வழிபாட்டை செய்து பலனடையலாம். நிச்சயம் நல்ல பலன் உண்டு என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கடன் வாங்கும் சூழ்நிலையே உங்களுக்கு ஏற்படாது. இந்த பூஜையை தினம்தோறும் உங்கள் வீட்டில் செய்து வந்தால்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -