உங்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பிரச்சனை வந்தால், இந்த 1 பாடலை பாடுங்கள். கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் தீரும்.

thirunavukkarasar-sivan

நமக்கு எவ்வளவோ கஷ்டங்கள் வந்து கொண்டும், போய்க் கொண்டும் தான் இருக்கும். ஆனால் நாம் எதிர்பாராத ஒரு சமயத்தில் இந்த வாழ்க்கையை நாம் வெறுத்து போகும் அளவிற்கு விரக்தி உண்டு பண்ணி விடும். போதும் இந்த வாழ்க்கை, இனி வாழ்வதற்கு ஒன்றுமில்லை என்கிற நிலையை ஏற்படுத்தி விடும். சிலருக்கு அது பண கஷ்டமாக இருக்கலாம். பலருக்கு அது மன கஷ்டமாக இருக்கலாம். இப்படியாக ஒவ்வொரு மனிதர்களுக்கும் வெவ்வேறு காரணங்களால் துன்பங்கள் வரும். அதை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு வருவதற்கு கடவுள் மேல் முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

sad-man

நமக்கு எந்த கஷ்டம் வந்தாலும் நம்மால் அதை சமாளிக்க முடியும். நாம் சோர்ந்து விடக்கூடாது. நம்மை நம்பி சில உயிர்கள் நம்முடன் இருக்கின்றன. அதற்காகவாவது நாம் தன்னம்பிக்கையுடன் திரும்பி மீண்டு எழ வேண்டும். ஐயோ இப்படி ஆயிற்று, இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற மனப்பான்மை இனி எப்போதும் வரவே கூடாது. சில சமயத்தில் பார்த்தீர்களானால் நாம் நம்பியிருக்கும் ஒரு விஷயம் நமக்கு துணை புரிவதில்லை. நமக்கு நம்பிக்கை இல்லாத ஒரு விஷயம் நமக்கு துணையாக நிற்கும். அதை நிரூபிக்கும் விதமாக இருக்கும் ஒரு கதை தான் திருநாவுக்கரசர் கதையும்.

திருநாவுக்கரசர் ஒரு முறை தம் இல்லத்தில் தன்னுடைய இளைய சகோதரர் தீராத வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருப்பதை கண்டார். அவர் சகோதரர் அப்போது சமணத் துறவியாக இருந்தவர். ஆனால் அவருடைய தமக்கையார் மிகுந்த சிவ பக்தி உடையவர். சைவ சமயத்தில் நாட்டம் கொண்டவர். சகோதரரின் வயிற்று வலியை தீர்ப்பதற்கு சமணர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. எந்த மந்திரமும், மருந்தும் பயன்படவில்லை. தமக்கையார் அவரின் நெற்றியில் திருநீற்றை பூசி சிவ மந்திரம் ஜபித்ததும் வயிற்று வலி உடனே தீர்ந்து குணமடைந்தார். இதனை பார்த்துக் கொண்டிருந்த திருநாவுக்கரசர் சமண சமயத்தைத் துறந்து சைவ சமயத்திற்கு மாறினார். சிவ சேவைகள் பல புரிந்து தீவிர சிவபக்தர் ஆனார்.

Thirunavukarasar

இதனால் ஆத்திரமடைந்த சமணர்கள் திருநாவுக்கரசர் மீது அளவில்லா கோபம் கொண்டனர். அவரை எவ்வளவோ வழிகளில் முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் பெரிய பாறாங்கல்லில் அவரை கட்டி சமுத்திரத்தில் போட உத்தரவிட்டனர். அப்போது அவர் ஈசனை நினைந்து இந்தப் பாடலை பாடினார். உடனே சமுத்திரம் தெப்பமாக மாறி பாறாங்கல் அப்படியே மிதந்து வந்தது அங்கிருக்கும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன் பிறகு திருநாவுக்கரசர் நிறைய பாடல்கள் பாடி சிவனருள் பெற்றார்.

- Advertisement -

இதோ அந்த பாடல்:
சொற்றுனை வேதியன் சோதி வானவன்,
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதோழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்,
நற்றுணை யாவது நமச்சி வாயவே!

thirunavukkarasar

எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக நம்பினால் தான் அதற்கு பலனும் உண்டு. நாம் தீர்க்கமாக நம்புவதுதான் நம் வாழ்க்கையில் செயல் வடிவமாக மாற்றமடையும். உங்களுக்கு தீராத துன்பம் நேரும் பொழுது இந்த பாடலை நம்பிக்கையுடன் உச்சரியுங்கள். உங்களது கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் தவிடு பொடியாகி விடும்.

இதையும் படிக்கலாமே
எந்த நோயையும் 48 நாட்களில் குணப்படுத்தும் நாராயணீய மந்திரம்! எப்படி உச்சரிப்பது?

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thirunavukkarasar pathigam in Tamil. Thirunavukkarasar in Tamil. Thirunavukkarasar history in Tamil. Thirunavukkarasar padalgal in Tamil. Thirunavukkarasar pathigam.