யாரோ 4 பேர் சேர்ந்து அடிச்சி போட்ட மாதிரி உங்க உடம்பு இருக்கா? இந்த 1 பொருளை இப்படி செஞ்சா போதுமே!

sad-lemon

நம் அன்றாட வாழ்க்கையில் திடீரென நமக்கு நேரும் சில மாற்றங்கள் வியப்பாகவும், விசித்திரமாகவும் இருக்கும். அதில் ஒன்று தான் உடல் சோர்வு என்பது. நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும் திடீரென ஆரோக்கியம் குன்றிப் போய் பித்துப் பிடித்தது போல, சோர்வாக காணப்படுவோம். யாரோ நாலு பேர் சேர்ந்து அடித்தால் எப்படி இருக்குமோ! அப்படி ஒரு வலியும், அசதியும் நம் உடம்பில் இருக்கும். இத்தகைய பாதிப்புகள் இருந்தால் வீட்டில் கெட்ட சக்திகளின் ஆதிக்கம் உங்களை சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதை எப்படி எளிதாக நீக்குவது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

thirusti-lemon

பொதுவாக சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு இது அடிக்கடி ஏற்படுவதை நாம் கண்டிருப்போம். நன்றாக ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென சதா அழுது கொண்டே இருக்கும். எதற்காக அழுகிறது? என்றே தெரியாது ஆனால் அழுகையை மட்டும் நிறுத்தவே செய்யாது. அதுபோல அதுவரையிலும் நன்றாக சாப்பிட்ட குழந்தை திடீரென சாப்பிட அடம்பிடிக்க தொடங்கும். ஒரு வாய் சாப்பாடு ஊட்டுவதற்க்குள் படாதபாடு படுவோம்.

இதையெல்லாம் கெட்ட சக்திகளின் அதாவது எதிர்மறை ஆற்றல் தரும் பிரதிபலிப்பாக இருக்கிறது. கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல் போன்ற விஷயங்கள் கூட இந்த பாதிப்புகளை ஏற்படுத்தும். தனக்குத் தானே பேசிக் கொள்வது, எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, எந்த ஒரு விஷயத்திலும் பிடிப்பு இல்லாமல் தோல்வியை பற்றி நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பது போன்ற அறிகுறிகளும் இதன் தாக்கத்தின் அடிப்படையில் தான் இருக்கும்.

kan-thirusti

இந்த பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் கெட்ட சக்திகளையும், துர்தேவதைகளையும் விரட்டியடிக்க கூடிய ஆற்றல் தேவ கனி என்று கூறப்படும் எலுமிச்சைக்கு உண்டு. எலுமிச்சை கனியை நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்துவார்கள், கெட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்துவார்கள். நல்ல விஷயங்களையும், கெட்ட விஷயங்களையும் எதுவாக இருந்தாலும் உட்கிரகிக்கும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு. எந்த ஒரு மந்திரத்தையும் எலுமிச்சை பழத்தை கையில் வைத்துக் கொண்டு கூறினால் அம்மந்திரம் கிரகிக்கப்பட்டு வேண்டிய வேண்டுதல் உடனே பலிக்கும் என்பது நியதி.

தீய விஷயங்கள் நம்மை ஆட்கொண்டு இருக்கும் பொழுது உடல் முழுவதும் சோர்வுடன் காணப்படும். எப்பொழுதும் தூங்கிக் கொண்டே இருந்தால் நன்றாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். எதிலும் நாட்டமில்லாமல் ஒருவிதமான விரக்தியுடன் காணப்படுவார்கள். இத்தகையவர்கள் செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, அமாவாசை ஆகிய ஏதாவது ஒரு தினங்களில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு தனக்குத் தானே தன் தலையைச் சுற்றிலும் திருஷ்டி கழிக்க வேண்டும். கையில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்துக் கொண்டு இரண்டாக பாதி அளவிற்கு வெட்டி அதில் கல் உப்பை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

lemon

தங்களுடைய தலையை வலது புறமாக மூன்று சுற்று, இடது புறமாக மூன்று சுற்று சுற்றிக் கொண்டு பின்னர் வெளியில் சென்று இரண்டாக எலுமிச்சை பழத்தை உடைத்து இரண்டு திசைகளிலும் கைமாறி போட்டு விட வேண்டும். வலது கையில் இருக்கும் எலுமிச்சை பழத்தை இடது புறத்திலும், இடது கையில் இருக்கும் எலுமிச்சை பழத்தை வலது புறத்திலும் போட வேண்டும். பின்னர் வீட்டிற்குள் வந்து கை, கால்களை அலம்பி விட்டு நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு படுத்துக் கொள்ளலாம். தூங்குவதற்கு முன்னர் இதை செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு சில முறை செய்யும் பொழுது உங்களுடைய உடலில் இருக்கும் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள்.