கண் திருஷ்டியை நமக்கு நாமே போக்கிக்கொள்ள இதை விட சுலபமான பரிகாரம் வேறு இருக்கவே முடியாது. இதை செய்த உடனேயே திருஷ்டி நீங்கியதை உணரலாம்.

theertham-salt

கண் திருஷ்டியை நீக்குவதற்கு சாஸ்திர ரீதியாக பல பரிகாரங்கள் நமக்கு தெரிந்திருக்கும். அந்த வரிசையில் ஒரு சுலபமான சக்தி வாய்ந்த பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதன் மூலம் கண் திருஷ்டி உங்களை விட்டு நீங்கியதை அனுபவபூர்வமாக உணரும் அளவிற்கு, இந்த பரிகாரத்திற்க்கு சக்தி உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை செய்ய செலவும் அதிகம் ஆகாது. இந்த ஒரு பொருள் இருந்தால் போதும். உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள, அந்த ஒரு பொருள் என்ன. அந்தப் பொருளை வைத்து எந்தக் கிழமையில் எப்படி திருஷ்டியை கழிக்கலாம். தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

virali-manjal

இந்த முறையில் நாம் திருஷ்டி கழிக்க பயன்படுத்தப் போகும் பொருள் மஞ்சள். விரலி மஞ்சள் ஆக இருந்தாலும் சரி, குண்டு மஞ்சள் ஆக இருந்தாலும் சரி. அதில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மஞ்சளை அந்த தண்ணீரில் போட்டு 5 லிருந்து 10 நிமிடங்கள் ஊறவைத்தால் தண்ணீரின் நிறம் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

இந்தத் தண்ணீரில் 2 கல் உப்பை போட்டுக் கொள்ளுங்கள். நிறைய போட வேண்டாம். கல் உப்பில் கட்டி கட்டியாக இருக்கும் அல்லவா அதில் இரண்டு எடுத்துப் போட்டால் கூட போதும். கல்லை தண்ணீரில் நன்றாகக் கரைத்து விட்டு, அந்த தண்ணீரை உங்கள் வீட்டின் மூலை முடுக்குகளில் தெளிக்க வேண்டும்.

salt

மாவிலை வேப்பிலை அருகம்புல் இதில் எது கிடைத்தாலும், அதில் இந்த நீரைத் தொட்டு உங்கள் வீடு முழுவதும் தெளிக்கலாம். எதுவுமே கிடைக்காத பட்சத்தில் உங்கள் கையாலேயே இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விட்டால் போதும். வீட்டை பிடித்த கண்திஸ்டி விலகிவிடும். நீங்கள் வெளியே ஏதாவது ஒரு இடங்களுக்குச் சென்று வந்து உங்களுடைய உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் சமயத்தில் கண்திஸ்டி பட்டதாக நீங்கள் உணர்ந்தால், அதை போக்க, இந்தத் தண்ணீரை உங்கள் தலையின் மீதும் மூன்று முறை தெளித்துக் கொள்ளலாம்.

இந்த பரிகாரத்தை செய்த ஒரு சில நிமிடங்களில் நிச்சயமாக கண்திருஷ்டி உங்களை விட்டும் விலகியதை உணரமுடியும். உடல் அசதி இருந்தால் அந்த அசதி உடனடியாக நீங்கும். வீட்டில் சண்டை சச்சரவுகள், மன நிம்மதி இல்லாத சூழ்நிலை நிலவினால் அதற்கு ஒரு தீர்வு உடனடியாக கிடைத்து விடும் மன அமைதி பெறும். உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுக்கு உடல்நிலையில் பிரச்சினை என்று வரும்போது அந்த சமயத்தில் இந்த பரிகாரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது பிரச்சனையே இல்லை எனும் பட்சத்தில் கூட வாரம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

theertham

இந்த தண்ணீரை தெளிக்கும் போது மட்டும் உங்களுடைய மனதில் கண் திருஷ்டியும் துஷ்ட சக்தியும் உங்களை விட்டு விலக வேண்டும் என்று சொல்லிக்கொண்டே தெளிக்க வேண்டும் என்பது மட்டும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.