தேவையற்ற உடல் உபாதைகள் பாடாய்படுத்துகிறதா? மருத்துவரிடம் சென்றும் தீர்வு கிடைக்கவில்லையா? ஒருவாட்டி இதை முயற்சி செஞ்சு பாருங்களேன்!

thirusti-onion

நம்மில் சில பேருக்கு உடல் உபாதைகள் இருந்து கொண்டே இருக்கும். அதாவது கால் வலி, முதுகுவலி, தலைவலி, உடல் சோர்வு, வயிறு வலி, இப்படி இதில் ஏதாவது ஒரு பிரச்சனை அல்லது இதில் இல்லாத வேறு ஏதாவது பிரச்சனையாக கூட இருக்கலாம். நம்மை பாடாய் படுத்தி எடுக்கும் அந்த பிரச்சனைக்காக, நாம் மருத்துவரிடமும் சென்று சிகிச்சையும் எடுத்துக் கொண்டு இருப்போம். சாப்பிடாத மருந்தே, இருக்காது இருக்காது. எடுக்காத டெஸ்ட் இருக்காது ஆனால், பிரச்சினைக்கு மட்டும் தீர்வு கிடைக்காது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? அதை சுலபமான முறையில் சரி செய்ய என்ன பரிகாரம் உள்ளது? என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

thirusti

கண் திருஷ்டியினாளும் உடல் உபாதைகள் ஏற்படும், கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்திகளின் மூலமும் உடல் உபாதை ஏற்படும், என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பதிவினை பார்த்து பயனடைந்து கொள்ளலாம். இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, இந்த குறிப்பு பயனுள்ளதாக அமையாது.

பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, உங்களுக்கு ஏதாவது உடல் உபாதைகள் இருந்தால் முதலில் மருத்துவரை அணுகி, அதற்கான பரிசோதனை செய்து, அதற்கான மருந்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மருத்துவர் கொடுக்கும் மருந்துதோடு, சேர்ந்த மாந்திரீகம் கட்டாயம் நல்ல பலன் தரும்.

onion

முதலில் சதுர வடிவில் ஒரு வெள்ளைத் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு, ஒரு துண்டு கற்பூரம், சிறிதளவு கடுகு, 5 மிளகு, சிறிதளவு வெண் கடுகு, காய்ந்த மிளகாய் மூன்று, படிகார கட்டி ஒன்று, சின்ன வெங்காயம் ஒன்று. சின்ன வெங்காயத்திற்கு கெட்ட சக்தியையும் கண்திருஷ்டியையும் தூக்கி தூரப் போடும் சக்தி அதிகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, கட்டாயம் சின்ன வெங்காயத்தை ஒன்று வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த எல்லா பொருட்களையும், வைக்கும் அளவிற்கு சதுர வடிவில் வெள்ளைத் துணி எடுத்துக் கொண்டு, இவை எல்லாவற்றையும் அதனுள் வைத்து, வெள்ளை நூலைக் கொண்டு, ஒரு முடிச்சாக கட்டிக்கொள்ளுங்கள். அமாவாசை அன்று இப்படி ஒரு முறை திருஷ்டி கழிக்கலாம். வாரம் தோறும் வரும் செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் இப்படி செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை இரவும் இப்படி செய்யலாம்.

vellai-mudichu

உங்கள் வீட்டில் யாருக்கு பிரச்சனை இருக்கின்றதோ யாருக்கு உடல் உபாதைகள் தீராமல் தொடர்ந்து தொல்லையாக இருந்து வருகிறதோ, அவரை கிழக்கு பார்த்தவாறு அமர வைத்துவிட்டு, இந்த முடிச்சினை இடது கையில் எடுத்துக் கொண்டு, அவரது தலையை சுற்றி, முதலில் வலது பக்கம் மூன்று முறை சுற்ற வேண்டும். இரண்டாவதாக இடது பக்கம் மூன்று முறை சுற்ற வேண்டும். இறுதியாக ஏற்ற இறக்கமாக மூன்று முறை சுற்றி, முடிந்தால் முச்சந்தியில் வைத்து கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டு விடலாம்.

முச்சந்தியில் வைக்க முடியாதவர்கள், உங்கள் வீட்டு வாசலில் வைத்து, அதாவது ரோட்டின் நடுவே வைத்து கொலுத்து விடுங்கள். உங்கள் உடம்பில், எப்படிப்பட்ட கெட்ட சக்திகள் இருந்தாலும் பஸ்பமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிகாரத்தை நீங்களே, உங்களுக்கு சுற்றிக் கொள்ளலாம். உங்கள் குழந்தைகளுக்கு என்றால், பெரியவர்கள் இதை சுற்றி போடலாம். பெரியவர்கள் தான், சிறியவர்களுக்கு செய்ய வேண்டும். நம்பிக்கையோடு செய்தால் நல்ல பலனை அடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சூரிய கிரகணம் பின்பு அப்படி என்ன தான் நடக்கும்? தமிழ் பஞ்சாங்கம் முன்னரே எச்சரித்த திடுக்கிடும் தகவல்கள் இதோ!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kan thirusti neenga. Kan thirusti neenga in Tamil. Kan thirusti neenga Tamil. Kan thirusti pariharam Tamil.