- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகண் திருஷ்டியை ஒழித்துக்கட்ட இதை விட சுலபமான பரிகாரம் வேறு எதுவுமே கிடையாது. இதை செய்தால்...

கண் திருஷ்டியை ஒழித்துக்கட்ட இதை விட சுலபமான பரிகாரம் வேறு எதுவுமே கிடையாது. இதை செய்தால் வாழ்வில் உங்களுக்கு என்றுமே வீழ்ச்சி இல்லை.

- Advertisement -

மனிதனிடம் இருக்கக் கூடிய பொன் பொருள் நிம்மதி ஆரோக்கியம் எல்லாவற்றையும் ஒரு நொடிப் பொழுதில் அழிக்கக் கூடிய வல்லமை கொண்டது தான் கண் திருஷ்டி. பெரும்பாலும் இது நாம் எல்லோருக்குமே தெரிந்திருக்கும். கல்லடி பட்டாலும் பரவாயில்லை கண்ணடி படக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொன்ன வார்த்தை ஒருபோதும் பொய்த்துப் போனது கிடையாது. ஓஹோன்னு வாழ்ந்து கொண்டிருந்த குடும்பம் ஒரே நாளில் நிம்மதி இழந்து சொத்து இழந்து நடுவீதி வருவதற்கு ஒரு விதத்தில் காரணமாக இந்த கண் திருஷ்டி இருக்கும்.

கண் திருஷ்டியை கழிப்பதற்கு ஒரே ஒரு முறையில் மட்டும் பரிகாரத்தை செய்து நிறுத்தி விட்டால் கண் திருஷ்டியில் இருந்து நம்மால் தப்பித்துக் கொள்ள முடியாது. வாரத்தில் ஒரு நாளோ அல்லது மாதத்தில் ஒரு நாளோ நமக்கு இருக்கக் கூடிய கண்திருஷ்டியை கழித்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த வரிசையில் நம்மை பிடித்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கண்திருஷ்டியை கழிக்க ஒரு சில சுலபமான ஆன்மீக ரீதியான குறிப்புகள் உங்களுக்காக.

- Advertisement -

பொதுவாகவே கண் திருஷ்டியை போக்குவதற்கு சிதறு தேங்காய் உடைக்கலாம். உப்பு சுற்றி போடலாம். அல்லது பூசணிக்காயை சுற்றி உடைக்கலாம். இது நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த மூன்று பொருட்களையும் கண் திருஷ்டி கழிக்க நாம் பயன்படுத்தும் போது இதோடு இன்னொரு முக்கியமான ஒரு பொருளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் பரிகாரக் கல்.

ஒரு தேங்காயின் மேலே கற்பூரத்தை வைக்கும் போதோ அல்லது எலுமிச்சம் பழத்தின் மேல் கற்பூரத்தை வைக்கும் போதும் இதோடு ஒரு படிகார கல்லை வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயின் மேல் சிறிய படிகார கல் வைத்துவிட்டு அதன் மேலே கற்பூரத்தை வைத்து, சூடம் கொளுத்தி குறிப்பிட்ட நபரின் தலையை மூன்று முறை சுற்றி தேங்காய் உடைத்தால் முழுமையான திருஷ்டியும் கழிந்து போகும். இதே போல் தான் எலுமிச்சம்பழம், பூசணிக்காயை திருஷ்டி கழிக்க பயன்படுத்தும் போதும் கற்பூரத்தின் கீழே படிகார கல்லை வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக கையில் கல்லுப்பு வைத்துக் கொண்டு திருஷ்டி சுற்றி போட்டாலும் சரி, அந்த கல் உப்புடன் ஒரு சிறிய துண்டு படிகாரம் சேர்த்து திருஷ்டி சுற்றிப் போட்டால் உங்களை பிடித்த கண்திருஷ்டி முழுவதும் உங்களை விட்டு நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திருஷ்டி கழிக்கும் பரிகாரத்தை திங்கள் கிழமை மற்றும் ஞாயிற்று கிழமையில் செய்ய வேண்டும்.

மனிதனின் உடம்பில் இருக்கக் கூடிய தேவை இல்லாத எதிர்மறை ஆற்றலை அப்படியே உறிஞ்சி எடுக்கக் கூடிய தன்மை கொண்டது தான் இந்த படிகாரக்கல். சாம்பிராணி தூபம் தினமும் போட்டு வருபவர்கள் வீட்டில் கண் திருஷ்டி அண்டாது. தினம்தோறும் அம்பாளை வணங்கி அம்பாளின் குங்குமத்தை நெற்றியில் இட்டு கொள்பவர்களுடைய உடம்பில் கண் திருஷ்டி தங்காது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். மேல் சொன்ன விஷயங்களை தொடர்ந்து பின்பற்றி வந்தாலே கண் திருஷ்டியால் வரக்கூடிய பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

சற்று முன்