உங்கள் வீட்டின் மேல் மற்றவர்களின் பொறாமை கண்கள் படாமலிருக்க இதை தலைவாசலில் மாதம் 1 முறை கட்டி வையுங்கள்.

- Advertisement -

எல்லோரது கண்களும் ஒரே மாதிரியான பார்வை நம்மை பார்ப்பதில்லை. நாம் எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்பது மற்றவர்களின் பார்வைக்கு தெரியுமாறு நாம் நடந்து கொள்ளப் போவதில்லை. இதனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இவர்கள் நன்றாக தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன குறை? நமக்குத்தான் ஆயிரம் பிரச்சினைகள், கஷ்டங்கள் என்று தோன்றி விடுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இவ்வளவு ஏன் இதை நாமே கூட மற்றவர்களை பார்த்து நினைத்திருக்கலாம். இதற்குப் பெயர் தான் பொறாமை கண் திருஷ்டி என்பார்கள். இதைப் போக்க இந்த ஒரே ஒரு விஷயத்தை தலை வாசலில் கட்டி தொங்க விட்டால் போதும். அது என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

kan-thirusti

கண் திருஷ்டியை சாதாரணமாக நாம் நினைப்பதுண்டு. திருஷ்டி பட்டால் என்ன ஆகிவிடப் போகிறது? என்ற அலட்சியம் நமக்கு வரக்கூடாது. ஒருவர் வயிறு எரிந்து சாபம் விடுவார்கள். அதெல்லாம் பலிக்குமா? என்று நிறைய பேர் நினைப்பதுண்டு. அதுபோல மற்றவர்களின் சாபத்தை உண்மையில் வாங்கியவர்கள் அதன் பிறகு படு மோசமான நிலைமைக்கு சென்றதுண்டு. இது எல்லோருக்கும் நடக்குமா? என்பது தெரியாது. ஆனால் நடந்ததுண்டு என்பதை தான் இங்கு வலியுறுத்த விரும்புகிறோம்.

- Advertisement -

சாபம் என்பது சாதாரண விஷயம் அல்ல. உண்மையிலேயே அவர்கள் மற்றவர்களால் பாதிக்கப்பட்டு மனம் நொந்து வயிற்றெரிச்சல் உடன் பொங்கி அழுது சாபமிட்டால், அந்த சாபம் ஏதோ ஒரு வகையில் அவர்களைக் கஷ்டப்படுத்திய அந்த நபரை பாதிக்க செய்யும் என்பது தான் உண்மை. அப்படி எல்லாம் இல்லை, அவர்கள் எல்லாம் நன்றாக ஒஹோ.. என்று தான் இருக்கிறார்கள். என்று நீங்கள் நினைத்தால், அதை உங்கள் அறியாமை என்றே கூறலாம்.

Thirusti

நன்றாக இருப்பவர்கள் அனைவரும் உண்மையில் நன்றாக இருப்பதில்லை. அதை அவர்கள் உடன் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். தூரத்தில் இருக்கும் நமக்கு தெரியாது அவ்வளவுதானே தவிர அவர்கள் எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறார்கள்? என்பதை நம்மால் உணர முடியாது.

- Advertisement -

அதே போல் தான் நம் வீட்டின் மேல், நம்முடைய வாழ்க்கையின் மேல் பொறாமை கண்களுடன் திருஷ்டி பார்வை பார்ப்பவர்கள் நம்மை சுற்றிலும் இருக்கத் தான் செய்வார்கள். அவர்களை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அதனால் தான் மாதம் தோறும் திருஷ்டி கழிக்க அமாவாசை தினத்தில் பூசணிக்காய், எலுமிச்சங்காய் போன்றவற்றை சுற்றி போடுமாறு நம் முன்னோர்கள் கூறி வைத்து சென்றுள்ளனர். இதை முறையாக பின்பற்ற முடியாதவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

salt

ஒரு சிகப்பு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். சிகப்பு, கருப்பு போன்றவை கண் திருஷ்டியை போக்க வல்லவை என்பார்கள். அதனால் சிகப்பு அல்லது கருப்பு துணியை சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பை எடுத்து குடும்பத்தினர் மற்றும் வீட்டை சுற்றி திருஷ்டி கழியுங்கள். அதாவது மூன்று முறை வலது புறமாகவும், மூன்று முறை இடது புறமாகவும் சுற்றிக் கொள்ளுங்கள். அதை அந்தத் துணியில் போட்டு அதனுடன் சிறிதளவு கடுகு அல்லது வெண்கடுகு ஏதாவது ஒன்றை போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதனை நீளவாக்கில் சுற்றி பின்னர் இரு முனைகளையும் பிடித்து, நன்றாக முடிந்து கொள்ளுங்கள். இதனை தலைவாசலில் ஆணி அடித்து வைத்திருப்பீர்கள் அல்லவா? அதில் மாட்டி வைத்து விடுங்கள். மாதம் ஒரு முறை மட்டும் இதனை மாலை ஆறு மணி ஆவதற்குள் கலற்றி தண்ணீரில் கரைத்து யார் காலிலும் படாதவாறு வெளியே ஊற்றி விடுங்கள். இதை அமாவாசை தினத்தில் செய்தால் கூடுதல் சிறப்பான பலனை தரும். முடியாதவர்கள் மற்ற நாட்களிலும் தாராளமாக இதை செய்யலாம். மீண்டும் புதியதாக இதே போல் செய்து ஆறு மணிக்குள் கட்டிவிடுங்கள். அவ்வளவு தான். உங்கள் வீட்டை எந்த ஒரு கண் திருஷ்டியும் நெருங்கக் கூட முடியாது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த விஷயத்தை கடைப்பிடிக்கும் பெண்களிடம் காசு, பணம் கொட்டிக் கிடக்குமாம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -