திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு

Thiruvalluvar

அகர முதல என்று தன் குறளினை தொடங்கி மொத்தமாக 1330குறள்களை தந்து அதன் மூலம் மக்களுக்கு தன நன்னெறிகளை குறிப்புணர்த்தியவர் தான் திருவள்ளுவர். மக்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதனை தனது 133 அதிகாரரங்கள் மூலம் தெளிவாக பல நூறு வருடங்களுக்கு முன்னரே இந்த உலகிற்கு தெரிவித்து சென்றவர் என்ற பெருமை திருவள்ளுவருக்கு உண்டு.

thiruvalluvar 1

இன்றும் “உலக பொதுமறை” என்று அனைத்து மக்களாலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு நூலினை நமது தமிழ் இனத்தினை சேர்ந்த ஒருவர் எழுதியுள்ளார் என்பது தமிழர்களாகிய நமக்கு மிகப்பெரும் பெருமை என்றே கூறலாம். இப்படிப்பட்ட திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றின் தொகுப்பு இந்த பதிவில் உள்ளது.

திருவள்ளுவர் பிறப்பு:

திருவள்ளுவரது பெயர், பெற்றோர் மற்றும் பிறப்பிடம் ஆகிய அனைத்தும் இன்று வரை உறுதிசெய்யப்படவில்லை. இருந்தாலும் அவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் பிறந்திருக்க கூடும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் தற்போதைய சென்னையில் உள்ள “மயிலாப்பூர்” பகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்றும் ஒரு தகவல் உண்டு .

மேலும் காவேரிபக்கம் பகுதியில் வாழ்ந்த மார்கசெயன் என்பவர் திருவள்ளுவரது கவித்திறனை நேரில் கண்டு பூரித்து தனது மகளான வாசுகியை திருவள்ளுவருக்கு மணமுடித்து தந்ததாகவும் கூறப்படுகிறது.

பெயர் – திருவள்ளுவர்
பிறந்த வருடம் – கி .பி. 2ஆம் நூற்றாண்டு (சரியான ஆதாரம் இல்லை)
பிறந்த இடம் – மயிலாப்பூர் (சரியான ஆதாரம் இல்லை)
மனைவியின் பெயர் – வாசுகி
வசித்த இடம் – மயிலாப்பூர்

- Advertisement -

thiruvalluvar 3

திருக்குறள் என்னும் அற்புத படைப்பு:

“வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு தமிழுக்கு புகழை சேர்த்த இவரது மிகச்சிறந்த படைப்பு இந்த திருக்குறள் எனும் நூல். திருக்குறளை படிக்காத தமிழன் இல்லை என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் நன்னெறி நூலாக உள்ளது . திருக்குறளின் உன்னதத்தினை உணர்ந்த இதனை “ஜி.யு. போப்” என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரடிகளில் உலகின் தத்துவத்தினை தெள்ளத்தெளிவாக கூறி அனைவரும் எளிமையாக புரிந்து கொள்ளும் அளவிற்கு தன் கருத்துகளை அதில் முத்து முத்தாக பொறித்துள்ளார். மொத்தம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட இந்த நூல் முறையே “அறத்துப்பால்”, “பொருட்பால்” மற்றும் “காமத்துப்பால்” என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அறத்துப்பால் – 38 அத்தியாயங்கள்

பொருட்பால் – 70 அத்தியாயங்கள்

காமத்துப்பால் – 25 அத்தியாயங்கள்

thiruvalluvar 5

அறத்துப்பால் : முதல் பிரிவான அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் அறம் சார்ந்த வாழ்வியல் கருத்துக்கள் முதல் இல்லறம் போன்ற பல கருத்துக்களை கூறி அறத்தின்படி எவ்வாறு வாழ்க்கையினை முறைப்படுத்தி கொண்டு செல்லவேண்டும் என்று கருத்துகளை விவரித்து உள்ளார்.

பொருட்பால்:இரண்டாவது பாலான பொருட்பாலில் 70 அதிகாரங்கள் இடம்பெற்றுள்ளன. உட்பிரிவுகள் மூலம் அரசியல், ஊழியல் மற்றும் துறவறிவியல் போன்ற கருத்துக்களை இடம்பெறவைத்துள்ளார்.

காமத்துப்பால் – மூன்றாம் பாலான காமத்துபாலில் களவியல் மற்றும் கற்பியல் என்ற உட்பிரிவுகள் மூலம் காதல், இன்பம் மற்றும் இல்லறம் குறித்த கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று வகைப்பாட்டின் மூலம் வாழ்வியல் கருத்துக்களை கூறி வாழ்வின் உன்னதத்தை கூறி மக்களை நெறிப்படுத்திய புலவர் திருவள்ளுவர் உலகத்திற்கு அழியா பொக்கிஷமான திருக்குறளை தந்து சென்றார்.

thiruvalluvar 4

திருக்குறளின் சிறப்பு பெயர்கள் :

திருக்குறள் ஒரு பொக்கிஷ நூலாக இன்றுவரை கருதப்படுகிறது. அவற்றிற்கு பல சிறப்பு பெயர்கள் உள்ளன . அதனை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

உலக பொதுமறை

முப்பால்

ஈரடி நூல்

உத்திரவேதம்

தெய்வநூல்

தமிழ் மறை

பொய்யாமொழி

வாயுறை வாழ்த்து

திருவள்ளுவரின் இறப்பு:

தமிழ் புலவரான திருவள்ளுவர் இறப்பு குறித்து இன்றுவரை அதிகாரபூர்வமான குறிப்புக்கள் இல்லை. ஆனால் , மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்த இவர் ஒளவையர் உதவியுடன் மதுரையில் உள்ள தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளினை அரங்கேற்றினார் என்றும் நம்பப்படுகிறது.

Thiruvalluvar

 

திருவள்ளுவரின் புனைபெயர்கள் (அ) சிறப்புப்பெயர்கள் :

திருக்குறளினை தந்த திருவள்ளுவருக்கும் பல சிறப்பு பெயர்களை பலரும் அளித்தனர். அதில் முக்கியமானவைகளை கீழே தொகுத்து உள்ளோம்.

பொய்யில்புலவர்

தெய்வபுதல்வர்

முதற்பாவலர்

செந்நாப்போதானார்

தேவர்

நாயனார்

பெருநாவலர்

திருவள்ளுவரின் நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலை :

வள்ளுவர் கோட்டம் – இன்றைய சென்னையில் உள்ள ஒரு முக்கிய பகுதி இந்த “வள்ளுவர் கோட்டம்”. இந்த வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவருக்காக ஒரு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குறள் மண்டபத்தில் திருக்குறளின் அனைத்து குறள்களும் பதிக்கப்பட்டுள்ளன . இன்றுவரை தமிழக அரசு அதனை சிறப்பாக பேணிக்காத்து வருகிறது.

வள்ளுவரின் சிலை – தமிழக மற்றும் இந்திய தேசத்தின் கடைக்கோடியான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் இவரது திருஉருவ சிலை நிருவப்பட்டுள்ளது. அவரது 133 அதிகாரிங்களின் நினைவாக அந்த சிலையானது 133அடிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையினை செய்த சிற்பியின் பெயர் கணபதி ஸ்தபதி.

thiruvalluvar 2

வள்ளுவரின் கோயில் – திருவள்ளுவருக்காக அவரது பிறப்பிடமாக கருதப்படும் மயிலாப்பூரில் ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இன்றுகூட அதனை நீங்கள் காண முடியும். அந்த கோவிலானது மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோயில் அருகில் உள்ளது.

வள்ளுவரின் மண்டபம் – வள்ளுவர் கோட்டம்

வள்ளுவரின் சிலை – கன்னியாகுமரி [ சிற்பி – கணபதி ஸ்தபதி ]

வள்ளுவரின் கோயில் – மயிலாப்பூர்

மேலும் பல நாடுகளின் வள்ளுவரின் புகழினை உணர்ந்து பல சிலைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருக்குறள் முழுவதையும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

English Overview:
Here we have Thiruvalluvar biography in Tamil. Thiruvalluvar is a great Poet who lived in Tamilnadu, India. Thiruvalluvar is a Writer of Thirukural. Above we have Thiruvalluvar history in Tamil. We can also say it as Thiruvalluvar varalaru in Tamil or Thiruvalluvar essay in Tamil or Thiruvalluvar Katturai in Tamil.