ஆருத்ரா தரிசனம். நடராஜர் கோவிலில் செய்யக்கூடிய திருவாதிரை களி செய்வது எப்படி?

thiruvathirai-kali
- Advertisement -

மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திரத்தன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்த திருவாதிரை களி பிரசாதமாக செய்யப்படும். அந்த திருவாதிரை களி எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்னும் ஒரு சில நாட்களில், அதாவது 20.12.2020 திங்கட்கிழமை அன்று திருவாதிரை நட்சத்திரம் வரவிருக்கின்றது. இந்த திருவாதிரை நட்சத்திரத்தினை வடமொழியில் ஆருத்ரா என்று சொல்லுவார்கள். நம் வீட்டிலும் எம்பெருமானுக்கு இந்த நிவேதனத்தை செய்து வழிபாடு செய்வதன் மூலம் நடராஜரின் அருளாசியை நிறைவாக பெறமுடியும். சரி, திருவாதிரை களி எப்படி செய்வது எப்படி? தெரிந்து கொள்வோமா.

thiruvathirai-kali1

1 – கப் பச்சரிசி, 2 – ஸ்பூன் பாசிப்பருப்பு, 1 1/2 கப் – வெல்லம், 3 – டம்ளர் தண்ணீர், 3 – ஏலக்காய், ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவல், 2 – ஸ்பூன் நெய், 10 லிருந்து 15 – முந்திரிப்பருப்பு, இந்த பொருட்கள் தான் நமக்கு தேவைப்படும்.

- Advertisement -

முதலில் பாசிப்பருப்பையும் பச்சரிசியையும் ஒன்றாகப் போட்டு மூன்று முறை நன்றாகக் கழுவி, தண்ணீரை நன்றாக வடித்து கொள்ளுங்கள். கழுவிய இந்த பச்சரிசி பாசிப்பருப்பை ஒரு கடாயில் போட்டு வறுக்க வேண்டும். தண்ணீரோடு இருக்கும் அரிசியை கடாயில் போட்டவுடன் கொஞ்சம் பிசுபிசுப்பு தட்டும். ஈரம் வற்றியவுடன் அரிசியும் பருப்பும் நன்றாக வறுபட்டு வரும். அரிசி நன்றாக பொரிந்து வந்த உடன் பாசிப் பருப்பு நன்றாக சிவந்தவுடன், அடுப்பை அணைத்து விடுங்கள். இதை உடனடியாக ஒரு தட்டுக்கு மாற்றி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

thiruvathirai-kali2

ஆறிய அரிசி பருப்பை மிக்ஸியில் போட்டு லேசாக கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். ரவை அளவுக்கு பெரியதாகவும் அரைக்கக் கூடாது. மாவு பதத்திற்கு நைசாகவும் அரைத்து விடக்கூடாது. இரண்டுக்கும் நடுவில் ஒரு பக்குவம். லேசான கொரகொரப்பு பக்குவம். இந்த பக்குவம் முக்கியம். இந்த இடத்தில் சரியாக அரிசியை அரைத்தால் தான் சரியான பக்குவத்தில் களி கிடைக்கும். அரைத்த இந்த மாவு அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

1 1/2 டம்ளர் வெல்லத்திற்கு, 3 டம்ளர் தண்ணீர் தேவைப்படும். (அதாவது 1 கப் அரிசி வேக, 3 டம்ளர் வெல்லத் தண்ணீர் என்பது அளவு.) வெல்லத்தை நன்றாக பொடியாக நறுக்கி விடுங்கள். அதில் 3 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கரைத்து தூசி இல்லாமல் வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த வெல்லப் பாகும் அப்படியே இருக்கட்டும்.

vellam

இப்போது களி செய்ய தொடங்கி விடலாம். அடி கனமாக இருக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். நான்ஸ்டிக் பாத்திரமாக இருந்தால் இன்னும் சிறப்பு. அதில் எடுத்து வைத்திருக்கும் வெல்லக் கரைசலை ஊற்றி கொள்ள வேண்டும். அடுப்பை பற்ற வைத்து விடுங்கள். இந்த வெல்லக் கரைசல் ஒரு கொதி வரட்டும். வந்தவுடன் ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவலை போடவேண்டும். அடுத்தபடியாக மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கொஞ்சமாக வெல்லக் கரைசலில் போட்டு கலந்து விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். கொஞ்சம் கட்டிகள் பிடிக்கும்.

thiruvathirai-kali3

கரண்டியை வைத்து அந்த கட்டிகளை நன்றாக மசித்து விடுங்கள். சிறிது நேரத்தில் அரிசி நன்றாக வெந்து, கொஞ்சம் கட்டியாக தளதள பதத்திற்கு வந்தவுடன், அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, இந்த களிக்கு மேலே ஒரு மூடி போட்டு 8 லிருந்து 10 நிமிடங்கள் வேக வைக்கவேண்டும். அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இடையிடையே கலந்து கொள்ளலாம். அவ்வளவு தான். இறுதியாக நமக்கு களி வெந்து தயாராக கிடைத்திருக்கும். அடுப்பை அணைத்துவிடுங்கள்.

thiruvathirai-kali4

ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்புகளை போட்டு வறுத்து இந்த களியில் கொட்டி நன்றாகக் கலந்து ஆற வைத்து சுவாமிக்கு நைவேத்யமாக வைக்க வேண்டியது தான். சுவையான அற்புதமான ஆருத்ரா களி தயார்.

- Advertisement -