திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பரிகாரங்கள்

ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் அப்பன்னிரண்டு ராசிகளுக்குள் அடங்கும் 27 நட்சத்திரங்களுக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த நட்சத்திரங்கள் மற்றும் ராசிகள் விண்ணில் இருக்கும் ஒன்பது கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருக்கின்றன. அந்த நட்சத்திரங்களின் வரிசையில் வரும் “திருவாதிரை” நட்சத்திரம் பற்றியும், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

rahu 1

27 நட்சத்திரங்களின் வரிசையில் ஆறாவதாக வரும் நட்சத்திரம் “திருவாதிரை” நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதி தேவதையாக ருத்ரன் எனும் சிவபெருமான் இருக்கிறார். திருவாதிரை நட்சத்திரம் பொதுவாக துஷ்ட சக்திகளை அழிப்பதற்கான மந்திர பூஜைகளை செய்வதற்கு சிறந்த தினமாக கருதப்படுகிறது. ராகு பகவான் இந்த நட்சத்திரத்தை ஆள்வதால் இந்நட்சத்திரத்தில் கூச்ச சுபாவம் அதே நேரத்தில் அதிக தைரிய குணம் என்கிற இரண்டு நேர்மாறான குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் கெடுபலன்கள் ஏற்படுவதை குறைத்து நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படுவதற்கு செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் ராகு பகவானுக்கு செவ்வரளி பூக்களை சமர்ப்பித்து, நெய் தீபங்கள் ஏற்றி ராகு பகவானுக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். பிரதோஷ தினங்களின் போது சிவபெருமானின் அபிஷேகத்திற்கு பால் தானம் தந்து வழிபட வேண்டும். தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து, நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் நன்மைகள் பல ஏற்படும்.

sivan lingam

மாதந்தோறும் வரும் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. புற்று நோய், தொழு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள், ஆடைகள் தானம் அளிப்பதும் சிறந்த பரிகாரங்கள் ஆகும். மாதத்தில் வரும் அஷ்டமி தினங்களில் பைரவர் கோயிலுக்கு பச்சை பயறு தானியங்களை தானமளிக்க வேண்டும். பைரவரின் அம்சமான நாய்களுக்கு அவ்வப்போது உணவளிப்பதாலும் உங்கள் நட்சத்திர தோஷங்கள் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
துர்க்கை அம்மன் விரதம் மற்றும் பலன்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thiruvathirai natchathira pariharam in Tamil. It is also called Rahu bhagavan nakshatras in Tamil or Thiruvathirai nakashatra devta in Tamil or Thiruvathirai natchathiram in Tamil or Bairavar valipadu in Tamil.