கேட்கும் வரத்தை உடனே கொடுத்துவிடுமாம் இந்த கண்ணாடி! அது எப்படி?

கேட்கும் வரத்தை உடனே தரும் கண்ணாடியா? மாயாஜால படத்தில் வருவது போன்ற தலைப்பாக இருக்கின்றதே! என்கின்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுந்திருக்கும். ‘ஜீ பூம் பா’ என்ற மந்திரத்தை போட்டு, வரத்தினை பெற்றுவிடலாம் என்று நினைத்தீர்களா? நிச்சயமாக இல்லை. ஏனென்றால் எந்தவித முயற்சியையும் செய்யாமல், சுலபமாக நம் கைக்கு கிடைக்கும் எந்த ஒரு பொருளும் நிரந்தரமாக நம்மிடம் தங்காது. ஆகவே, இப்படிப்பட்ட மாயாஜாலத்திற்கு எல்லாம் உங்கள் வாழ்க்கையில் இடம் தராதீர்கள்.

mirror

நாம் கேட்கின்ற வரத்தை உடனே தரப்போகும் கண்ணாடி என்றால்! நாம் கண்ணாடியை பார்த்து ஒரு பயிற்சியை மேற் கொள்ளப் போகின்றோம். அந்த பயிற்சியின் மூலம் உங்கள் உடம்பிலிருந்து வெளிவரும் நேர்மறை ஆற்றலானது, நீங்கள் கேட்கும் வரத்தை பெற்றுத் தரப் போகிறது. உங்களது வாழ்க்கை பாதையை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். இந்த பயிர்ச்சிக்காக சொல்லப்பட்ட தலைப்புதான் அது! அது என்ன பயிற்சி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா?

பொதுவாகவே நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டது அனைத்தையுமே நம் உடலில் இருந்து வெளியேற கூடிய ஆற்றலும், காந்த சக்தியும் தான் நிர்ணயிக்கின்றது. நம்மிடம் இருந்து வெளியேற்றப்படும் காந்த சக்தியாக இருந்தாலும் சரி, ஆற்றலாக இருந்தாலும் சரி, நேர்மறை தாக்கங்களை உண்டு பண்ணினால், அதன் மூலம் நம்மை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து நமக்கு நன்மை நடக்கும். அதுவே நம் உடம்பிலிருந்து வெளிவரும் ஆற்றலும், காந்த சக்தியும் எதிர்மறை நோக்கத்தோடு இருந்தால் நமக்கு எதிர்மறை தாக்கங்களை உண்டு பண்ணி விடும்.

mirro

நமக்கு நல்லது நடப்பதற்கும், கெட்டது நடப்பதற்கும் நாம் தான் காரணம். நம்மிடம் இருந்து வெளியேறும் ஆற்றலையும், காந்த சக்தியையும் நேர்மறையாக மாற்றுவதற்காக தான் இந்த பயிற்சி. முதலில் இந்த பயிற்சியை செய்வதற்கு உங்கள் உருவம் முழுவதும் தெரியும்படியான ஒரு கண்ணாடி தேவைப்படுகிறது. முடிந்தவரை அந்த கண்ணாடியை நீங்கள் மட்டுமே பயன்படுத்தும் படி வைத்துக் கொள்ள வேண்டும். கண்ணாடியில் தெரியும் நம் உடல் உருவ பிம்பத்தினை, முதலில் நாம் நன்றாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். உற்று கவனிக்க வேண்டும்.

- Advertisement -

நீங்களே சற்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். உங்களையும் உங்களது உடல் உறுப்பையும் என்றாவது கவனித்துள்ளீர்களா? உடலில் இருக்கும் உறுப்பில் ஏதாவது ஒன்று, என்றைக்காவது, செயல்படாமல் இருக்கும் போது, அன்றைக்கு தான் அதனுடைய அருமை நமக்கு தெரியும். உதாரணத்திற்கு கை கால் நன்றாக இருக்கும் போது அந்த உறுப்பினைப் பற்றி நாம் கவலை கொள்வதே கிடையாது. ஏதோ ஒரு காரணத்தினால் கையோ, காலோ உடைந்து இருக்கும் தருணத்தில் எவ்வளவு கஷ்டப்படுகிறோம்.

mirror kannaadi

முதலில் நம் உடலுக்கும் சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நம் உடல் உறுப்புக்கும் தினம்தோறும் நன்றியை தெரிவிக்க வேண்டும். நம்முடைய உடல் உறுப்பை கண்ணாடியின் மூலம் பார்த்து இந்த நன்றியை தெரிவிப்பதன் மூலம் நமக்கு நேர்மறை ஆற்றலானது அதிகரிக்கப்படுகிறது. உங்களது உடலை கண்ணாடியின் மூலம் முழுமையாக பார்த்து கவனித்து உற்றுநோக்கி, உங்கள் உருவத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

அதன்பின்பு கண்களை மூடி, உங்களது உருவத்தை உங்களது நினைவிற்குக் கொண்டுவாருங்கள். கண்களை மூடும் போது உங்களின் உருவம்தான், உங்களின் மன கண்களுக்கு தெரிய வேண்டும். அந்த அளவிற்கு உங்களது உருவமானது உங்கள் கண்களிலும், மனதிலும் பதிந்திருக்க வேண்டும். புரிகிறதா?

mirror1

அதாவது எந்த ஒரு பொருளின் மீது, எண்ணத்தை செலுத்தி, கவனித்து, அதிகப்படியான ஆசை வைக்கிறோமோ, அதன் மீது நம்முடைய நேர்மறை எண்ணங்கள் செலுத்தப்படுகின்றது. இப்போது நீங்கள் உங்களின் உருவத்தின் மீது ஆசைப்பட்டு, நேர்மறை எண்ணங்களை அதன் மீது செலுத்தி உள்ளீர்கள். ஆக, உங்களுக்குள் இருக்கும் ஆற்றலானது மேலும் மேலும் அதிகரிக்கப் போகிறது என்பதுதான் அர்த்தம். உங்களது உடல் பிம்பத்தை, உங்கள் மனதுக்குள் நிறுத்தி, கண்களை மூடி உங்களுக்கு என்ன தேவையோ இப்போது அந்த கண்ணாடியின் முன் கேளுங்கள்!

நல்ல வேலை கிடைக்க வேண்டுமா? அதிகப்படியான வருமானம் வர வேண்டுமா? உங்கள் வியாபாரம் நன்றாக நடக்க வேண்டுமா? அல்லது குறிப்பிட்ட நபர் தொடர்ந்து பிரச்சனை தந்து கொண்டே இருக்கிறதா? அதை சரியாக்க வேண்டுமா? உங்கள் வாழ்க்கைத் தரத்தை உங்கள் இஷ்டப்படி மாற்றி வைத்துக் கொள்ளலாம். நீங்கள் நினைத்தபடி உங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். என்ன கோரிக்கை வேண்டும் என்றாலும் அந்த கண்ணாடியிடம் கேளுங்கள்! ஆனால் அது நல்ல கோரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த கோரிக்கையாக இருந்தாலும் ஒரே ஒரு கோரிக்கையாக வையுங்கள்! குறைந்தபட்சம் கண்களைமூடி 9 முறை உங்களது கோரிக்கையை கேளுங்கள்.

mirror

இப்படியாக உங்களுடைய வாழ்க்கையை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய இந்த பயிற்சியை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நீங்கள் கேட்கின்ற வரத்தை கொடுக்க கூடிய கண்ணாடி உங்கள் வீட்டில் தான் உள்ளது. அந்தக் கண்ணாடியிடம் உங்கள் விருப்பத்தை சொல்லி நிறைவேற்றிக் கொள்ளும். பயிற்சியை கட்டாயம் நம்பிக்கையோடு செய்ய வேண்டும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணாடி சாதாரண கண்ணாடியாக இருக்க வேண்டுமா? அல்லது நீங்கள் கேட்ட வரத்தை எல்லாம் தரக்கூடிய மாயாஜால கண்ணாடியாக இருக்க வேண்டுமா? அது உங்கள் கையில் தான் இருக்கிறது. சோதித்து தான் பாருங்களேன்!

English Overview:
Here we have Kannadi payirchi seivathu eppadi. Mirror in Tamil. Kannadi payirchi. Kannadi payirchi vilakkam. Mirror training.