இந்த வார ராசிபலன் 25-05-2020 முதல் 31-05-2020 வரை – 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். இது நாள் வரை இருந்த பிரச்சினைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடும். ஆடம்பர செலவை மட்டும் குறைத்துக்கொண்டால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அலுவலகத்தில் பணிச்சுமை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் முக்கியமான முடிவுகளை எதுவும் எடுக்க வேண்டாம். மன தைரியத்தோடு செயல்படும் நீங்கள், அவசரமாக எடுக்கும் எந்த ஒரு முடிவும், உங்களை பிரச்சனையில் மாட்டிக் கொள்ள வைத்துவிடும். குளிர்ச்சியான உணவை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கூடும். சொந்தத் தொழிலில் ஏற்படும் இடர்ப்பாடுகளை, பொறுமையோடு கடந்து சென்றால் வெற்றி கிடைக்கும். தினம்தோறும் சிவன் வழிபாடு மன அமைதியைத் தரும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி தரும் வாரமாக தான் பிறக்கப் போகின்றது. பிரச்சனையோடு இருந்த குடும்ப உறவுகள், ஒன்று சேர அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் உங்களது பேச்சில் மட்டும் அதிக கவனம் தேவை. அனாவசிய பேச்சை குறைத்துக் கொண்டால், இனிவரும் காலங்களில் பிரச்சினைகளை குறைத்துக் கொள்ளலாம். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பாராத சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக தான் பிறக்கப் போகின்றது. சாதாரணமாக நீங்கள் செய்யும் வேலையில் இன்னும் அதிகமாக உற்சாகம் காட்டுவீர்கள். வெளியில் செல்லும் போது மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். பயணத்தின்போது இன்னும் அதிகம் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களது மேல் அதிகாரிகளின் ஆதரவு நீங்கள் கேட்காமலேயே கிடைக்கப் போகின்றது. சொந்த தொழில் எப்போதும்போல் பிரச்சனை இல்லாமல் செல்லும். தினம் தோறும் அனுமன் வழிபாடு மனதைரியத்தை தேடித்தரும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் தரும் வாரமாக தான் பிறக்கப் போகின்றது. உறவினர்களின் அருமை பெருமைகளை நீங்கள் தெரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது. எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். செலவுகள் சற்று அதிகமாகத்தான் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். சொந்த தொழிலில் புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். அம்மன் வழிபாடு மிகவும் நல்லது.

கன்னி
kanni

கன்னி ராசிக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக பிறக்கப் போகின்றது. நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பணவரவு வழக்கத்தைவிட அதிகமாக கைக்கு வரும். சிக்கனப்படுத்த எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பிற்காலத்தில் உதவும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். சமாளித்துக் கொள்ள வேண்டியது அவசியம். முன் கோபம் வேண்டாம். சொந்த தொழிலில் அதிக லாபம் வாய்ப்பு ஈட்ட சந்தர்ப்பம் ஏற்படும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமை காக்க வேண்டியது மிக அவசியம். மற்றவர்களிடம் பேசும்போது, வார்த்தைகளை நிதானமாக வெளிப்படுத்த வேண்டும். கடினமான வார்த்தைகளை உபயோகப்படுத்த கூடாது. வீட்டில் சண்டை சச்சரவு ஏற்பட்டால் கூட, விட்டுக் கொடுப்பது நல்லது. வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கலாம். அலுவலகப் பணி எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் செல்லும். பயணத்தின் போது மட்டும் கவனமாக இருப்பது நல்லது. தினம் தோறும் குரு பகவானை வீட்டிலிருந்தே நினைத்து தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வாய்ப்புகள் தேடி வர கூடிய சூழ்நிலை அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரு காரியம் நிறைவடைந்து, மனமகிழ்ச்சியை அடைவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும், சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம சூழ்நிலை ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் மட்டும் சற்று கவனம் தேவை. யாரை நம்பியும் பணம் கொடுக்க வேண்டாம். யாரை நம்பியும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம். பைரவரை நினைத்து தினந்தோறும் வீட்டிலிருந்தே தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதி தரும் வாரமாக தான் பிறக்கப் போகின்றது. ஏனென்றால் இதுநாள்வரை இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் கூட, இந்த வாரம் முழுமையாக தீர்ந்து விடும். நிலுவையில் இருந்த கடன் தொகை அனைத்தும் இந்த வாரம் வசூலாக வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் சற்று அலைச்சல் இருந்தாலும், பொறுமை காத்தால் வெற்றி நிச்சயம். அலுவலகப் பணியில் ஆர்வத்தோடு ஈடுபாடு காட்டுவீர்கள். தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு மன அமைதி தரும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரும் வாரமாக தான் பிறக்கப் போகின்றது. அலுவலகத்தில் நீங்கள் எதிர்பாராத மதிப்பும் மரியாதையும் உங்களை தேடி வரும். சொந்தத் தொழிலில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீண் பேச்சுக்களை மட்டும் குறைத்துக் கொண்டால், பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். எடுத்தெறிந்து பேசினால், தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக் கொள்ள வேண்டிய நிலைமைதான் ஏற்படும். வீட்டில் சுப காரியங்களை தொடங்கலாம். குலதெய்வ வழிபாடு மிக அவசியம் என்பதை மறக்காதீர்கள்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் தரும் வாரமாக தான் பிறக்கப் போகின்றது. வருமானம் சீராக இருக்கும். இருப்பினும் சுபச்செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் போட்டிகள் வந்தாலும், எதிர்த்து ஜெயித்து விடுவீர்கள். அலுவலக பணியில், மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். பிரச்சினை என்று வந்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் அளவிற்கு திறமை உங்களிடம் உள்ளது. முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. தினம்தோறும் சிவபெருமானை நினைத்து 5 நிமிடம் தியானம் செய்தால் நன்மை.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை காக்க வேண்டியது மிக அவசியம். ஏனென்றால், குடும்பத்தில் பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. வாக்குவாதம் அதிகரித்தால், பிரிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. பொறுமையோடு செல்ல வேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக தான் இருக்கும். வியாபாரத்தில் லாபம் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கிடைக்கும். பிரச்சனைகள் வருவதும் போவதுமாக இருந்தாலும், அதை சமாளித்து குடும்பத்தில் நிம்மதியை நிலைநாட்டும் திறமை உங்களிடம் உள்ளது. குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்து வாருங்கள் நன்மை நடக்கும்.