இந்த வார ராசிபலன் 26-04-2021 முதல் 1-05-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கப் போகிறீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். எவ்வளவு தான் வேலை இருந்தாலும் சோர்ந்து போக மாட்டீர்கள். ‌சொந்தத் தொழிலில் இருந்துவந்த பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் புது யுத்திகளை பயன்படுத்தி பெரிய பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பணத் தட்டுப்பாடு இருக்காது. கையில் வரும் பணத்தை செலவு செய்வதில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அவ்வப்போது சில பிரச்சனைகள் வந்து போகத்தான் செய்யும். இருப்பினும் அதை சமாளிக்க கூடிய பக்குவம் உங்களுக்கு வந்துவிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை செய்யுமிடத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள். குடும்பத்தோடு குலதெய்வ கோயிலுக்கு செல்லக்கூடிய நேரம் வரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பல நன்மைகள் இந்த வாரம் நடக்க வாய்ப்பு உள்ளது. கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் இந்த வாரம் நல்ல முடிவுக்கு வந்துவிடும். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
Gemini zodiac sign
உங்களுடைய திறமையை கண்டு இந்த உலகமே பாராட்டும் போகின்றது. அந்த அளவிற்கு புத்திசாலித்தனத்துடன் வேலை செய்ய போகிறீர்கள். வருமானம் எதிர்பாராத அளவிற்கு பையை நிரப்ப போகின்றது. வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மட்டும் சில பிரச்சனைகள் வரவாய்ப்பு உள்ளது. உடன் வேலை செய்பவர்களை முழுமையாக நம்பாதீர்கள். நண்பர்கள் என்று நினைத்து உங்கள் ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். வீட்டில் விசேஷங்கள் நடக்கும். சுப செலவு ஏற்படும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்த சண்டை விலகும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். யார் எதை சொன்னாலும் சிந்திக்காமல் ஒரு காரியத்தில் கால்  வைத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அனுசரித்து தான் செல்ல வேண்டும். யாரையும் எதிர்த்து பேச வேண்டாம். பணிவோடு பேசி, பணிவோடு நடந்து கொள்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு புதிய விஷயத்தை தொடங்குவதாக இருந்தாலும் ஒன்றுக்கு பல முறை சிந்தியுங்கள். பெரியோர்களிடம் ஆலோசனை கேளுங்கள். தினந்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. உங்களுடைய முன்னேற்றத்திற்கு உங்களின் உறவினர்கள் உதவி செய்வார்கள். வேலையில் பணிச்சுமை அதிகமாக தான் இருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அன்றைய நாள் வேலையை அன்றைக்கே முடித்துக் கொள்வது நன்மையை தரும். சொந்த தொழிலில் அதிகப்படியான முதலீடு செய்ய வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கடின உழைப்பு ஒன்றே வெற்றியை கொடுக்கும். தேவையற்ற அலைச்சல்களின் மூலம் உடல் உபாதைகள் ஏற்படும். தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகின்றது. உங்களது வேலையை சுறுசுறுப்பாக முடித்துவிட்டு வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். உங்களது வேலையை நீங்கள் தான் செய்ய வேண்டும். மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். அனாவசியமான பேச்சை தவிர்த்துக்கொள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். தேவையற்ற பயங்கள் மனதில் இருந்து நீங்கும். சொந்தத் தொழிலில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். வீட்டில் சொந்த பந்தங்கள் நண்பர்களின் வருகை இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகள் வெற்றி தரும். தற்போது செய்யும் வேலையை விட, நல்ல வேலைக்கு முயற்சி செய்யலாம். வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கின்றது. வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகளை தொடங்கலாம். உங்களுடைய கஷ்டங்களுக்கு, உங்களை சுற்றி இருப்பவர்கள் நிச்சயமாக உதவி செய்வார்கள். எதிரிகளின் தொல்லை நீங்கும். பூர்விக சொத்து உங்கள் பக்கம் தீர்ப்பாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். யாரையும் நம்ப வேண்டாம். ‘ஓம் நம சிவாய’ மந்திரத்தை உச்சரிக்க மறக்காதீர்கள்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று மந்தமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. சொந்தத் தொழிலில் அதிக கவனம் தேவை. இட மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் வரக்கூடிய சில மாற்றங்கள் சில கஷ்டங்களை கொடுக்கும். இருப்பினும், இருக்கின்ற வேலையை விடாமல் தக்க வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். வீட்டில் உள்ள உறவுகளுக்கிடையே சந்தோஷமான சூழ்நிலை நிலவும். எதிர்பார்த்த சில நல்ல தகவல்கள் வருவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கத்தான் செய்யும். பொறுமை அவசியம் தேவை. பொறுமை காத்தால் நல்ல பலனை பெற முடியும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட போகிறீர்கள். உங்களிடமிருந்த சோம்பேறித்தனம் உங்களை விட்டு வெளியேறி விடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தேவையற்ற விஷயங்களுக்காக வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் பிடிவாதமாக இருக்க போகிறீர்கள். எந்த ஒரு செயலிலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். வேலை செய்யும் இடத்தில் அடுத்து பிடித்ததாவது நல்ல பெயரை வாங்கி விடுவீர்கள். சந்தோஷம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளும் வந்து நிற்கும். வெளியிடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருக்கவேண்டும். தினம் தோறும் விஷ்ணு வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் துணிச்சலுடன் செயல்படப் போகிறீர்கள். நினைத்ததை நடத்தி முடிக்காமல் விடமாட்டீர்கள். இருப்பினும் கொஞ்சம் கவனம் தேவை. தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கடன் வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். வேலைப்பளு அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சிவன் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். பல நாட்களாக தடைப்பட்டுவந்த காரியங்கள் இந்த வாரம் வெற்றி அடையும். உடல் உபாதைகள் தீரும். வேலை விஷயமாக வெளியூர் செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். அதிக உழைப்பை போட்டால்தான் நல்ல லாபத்தை பெற முடியும். எந்த வேலையையும் நிதானத்தோடு சிந்தித்து செயல்படுங்கள். அவசரப்படாதீர்கள். அவ்வப்போது சில விஷயங்களில் தடைகள் ஏற்பட்டு விலகும். தினந்தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.