இந்த வார ராசிபலன் 10/04/2023 முதல் 16/04/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan10
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருந்தாலும், முட்டுக்கட்டைகளும் சில தடுமாற்றம் இருக்கும். நிறைய முறை முயற்சி செய்தால் தான் ஒரு விஷயத்தை சாதிக்க முடியும். ஆகவே நீங்கள் இந்த வாரம் சோர்ந்து போகக்கூடாது. எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும்.

ஏதாவது தோல்வி ஏற்பட்டால் அதை நினைத்து மனது உடைந்து போகவும் கூடாது. தைரியத்தோடு செயல்பட்டால் வெற்றி உங்கள் பக்கம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். வேலையில் முழு கவனம் இருந்தால் பிரச்சனைகளை சமாளித்து விடுவீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் தொடங்கும். தினம்தோறும் ஊர் எல்லையில் இருக்கக்கூடிய காவல் தெய்வத்தை வழிபாடு செய்வது நன்மை தரும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாகத் தான் அமையப் போகின்றது. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வருமானத்தில் பிரச்சனை இருக்காது. வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும். வாரா கடன் வசூல் ஆகும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். திருமணம் கைகூடி வரும். தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் நினைத்த காரியம் எல்லாம் வெற்றி அடையும். வீட்டில் விருந்தினர்களின் வருகை இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்தித்து நேரத்தை செலவழிப்பீர்கள். சுப செலவுகள் ஏற்படும்.

- Advertisement -

வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். போட்டி பொறாமை காரணத்தால் உங்கள் மீது வீண்பழி விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் நல்ல லாபம் இருக்கும். யாரை நம்பியும் தொழிலில் கணக்கு வழக்குகளை ஒப்படைக்காதீங்க. வரவு செலவு கணக்குகளை நீங்களே பாருங்க. தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சந்தோஷமாக உங்கள் வேலையை செய்வீர்கள். இரவு நிம்மதியாக தூங்குவீர்கள். வீட்டில் இருக்கக்கூடிய இல்லத்தரசிகளுக்கு கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கும். உடல் சோர்வு ஏற்படும்.

- Advertisement -

விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தினமும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பொறுமை தேவை. எதையுமே யோசிக்காமல் செய்யாதீங்க. முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றால் பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவு எடுப்பது நல்லது. கொஞ்சம் அலைச்சல் இருக்கும். எந்த வேலையை தொட்டாலும் இழுபறியாக போகும்.

புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வண்டி வாகனம் ஓட்டுவதில் கொஞ்சம் கவனம் தேவை. நீண்ட தூர பயணத்தை இந்த வாரம் தவிர்த்துக் கொள்வது நல்லது. கவலை வேண்டாம். உங்களுக்கு பிரச்சனை என்றால் வாழ்க்கை துணை உங்களோடு நின்று பிரச்சினையை சமாளிப்பாங்க. தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் நடக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருப்பீர்கள். இத்தனை நாட்களாக கிடைக்காமல் இருந்திருக்கலாம். தற்போது கிடைக்கும். வேற நல்ல வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய வீட்டுக்கு குடி போகலாம்.

பெரிய பெரிய அதிகாரிகளின் சந்திப்பு உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். சரியான இடத்தில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். பெயர் புகழ் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதேசமயம் செலவுகளையும் கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும். வீண் செலவு சேமிப்பை கரைக்கும். மாத இறுதியில் கஷ்டம் வந்துவிடும் பார்த்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்க போகின்றது. நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை கூட இன்றே முடித்து விடுவீர்கள். நிறைய நேரம் இருக்கும். அந்த நேரத்தை குடும்பத்தோடு செலவழிக்க போகிறீர்கள். குடும்பத்தோடு சுற்றுலா பயணம் செல்வது கோவில் குளங்கள் செல்வது போன்ற சந்தோஷமான நேரத்தை கழிப்பீர்கள்.

தொழிலில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பார்ட்னரை வேலை செய்பவர்களை எல்லாம் முழுமையாக நம்ப வேண்டாம். நம்பிக்கை என்பது வேறு. கண்மூடித்தனமாக நம்புவது என்பது வேறு. நீங்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் பாராட்டும் கிடைக்கும். காதல் கைகூடி வரும். கெட்டி மேள சத்தம் கேட்கும். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக பிரிந்த ஒருவரை சந்திக்க கூடிய சூழ்நிலை ஏற்படும். மனமகிழ்ச்சி அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளித்துக் கொள்வீர்கள்.

உங்களுடைய திறமை வெளிப்படக்கூடிய நேரம் காலம் வந்துவிட்டது. எந்த பிரச்சினைக்கு எந்த தீர்வு சரியாக இருக்கும் என்பதை யூகிக்கும் அளவிற்கு உங்களுடைய தொலைநோக்குப் பார்வை சூப்பரா இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வார இறுதியில் முடிந்தால் வீட்டின் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று ஒரு பாலபிஷேகம் செய்வது நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிசிறப்பு வாய்ந்த வாரமாக இருக்க போகின்றது. புதிய தொழில் தொடங்கலாம். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். புதியதாக சொத்து சுகம் வாங்கலாம். வண்டி வாகனம் வாங்கலாம், புதிய துணிகள் ஆபரண நகைகள் இப்படி விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.

மனதிற்கு பிடித்தபடி எல்லா விஷயங்களும் நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு புது வரவு உண்டு. சந்தோஷம் நிறைந்த வாரம் இது. குடும்பத்தோடு குல தெய்வத்திற்கு நன்றி தெரிவித்து பூஜை செய்யவும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாகத் தான் இருக்கும். நல்லது நடக்கிறதே என்று நிம்மதியாக உட்கார்ந்தவுடன் சில பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பிக்கும். ஐயோ இது ஒரு பிரச்சனையாக இருக்கிறதே, என்று நினைக்கும் போது அடுத்த நல்லது கதவை தட்டும். இப்படி பலவிதமான சூழ்நிலைகளை சந்திக்க போகிறீர்கள். எல்லாம் நல்லதாகத்தான் நடக்கும். விடாமுயற்சியை கைவிடாதிங்க. நெகட்டிவா திங்க் பண்ணாதீங்க.

வார இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மூன்றாவது நபரை நம்பக்கூடாது. குடும்ப விஷயங்களை வெளி ஆட்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அவ்வளவு தான். தினம் தோறும் மனதிற்குள் ஓம் நமசிவாய மந்திரம் சொல்லுங்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பொறுமை தேவை. யாரையும் எழுதறிந்து பேச வேண்டாம். உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று அடுத்தவர்களை மட்டம் தட்டி பேசினால், இறுதியில் பிரச்சனை உங்களுக்கு தான். உங்களுடைய சுபாவத்தை கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள். பொறுமை காக்க வேண்டும். அடுத்தவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து நடக்க வேண்டும்.

குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்க கூடிய வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. கஷ்டமான வேலையை கூட ஈசியா முடிச்சிடுவீங்க. அது உங்களிடம் இருக்கக்கூடிய ஸ்பெஷாலிட்டி. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அலைச்சல் வாரமாக இருக்கப் போகின்றது. நிறைய வேலை கிடப்பில் கிடக்கும். அதை செய்வதற்கு 24 மணி நேரம் போதாது. உடல் அசதி, எந்த முடிவாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து எடுக்க வேண்டும். அதிரடி முடிவுகள் ஆபத்தை கொடுத்து விடும்.

வேலை அதிகமாக இருந்தாலும் சரி, வேலையில் பிரச்சனை இருந்தாலும் சரி, வேலையை தக்க வைத்துக் கொள்ள பாருங்கள். புதிய வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பு. பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். சிரமப்படாமல் எதுவும் நமக்கு கிடைக்காது என்பதை மனதில் ஆழ பதிய வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அதிகாலை எடுத்து சூரிய நமஸ்காரம் செய்வது உங்கள் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும்.

- Advertisement -