இந்த வார ராசிபலன் 03/04/2023 முதல் 09/04/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan10
- Advertisement -

மேஷம்:
எப்பாடுபட்டாவது வாழ்க்கையில் முன்னேறி விட வேண்டும் என்று ஒரு குறிக்கோளோடு இந்த வாரம் உழைக்கப் போகிறீர்கள். உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றாலும், அதற்கான பலன் நிச்சயம் உண்டு. ஆகவே மனம் தளராமல் உங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

வேலை செய்யும் இடத்தில் பெயர் புகழ் கிடைக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். பாராட்டுகள் கிடைக்கும். உறவினர்கள் காசு என்று கேட்டால் கருணை உள்ளம் படைத்து பணத்தை வாரி வழங்காதீர்கள். பின்னால் உங்களுக்கு தான் கஷ்டம். எதிர்பாலின நட்போடு பழக வேண்டாம். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். தினமும் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மை தரும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கும். எந்த முயற்சியை எடுத்தாலும் அதில் தடை போடவும், குறை சொல்லவும் நாலு பேர் வந்துடுவாங்க. அவங்களை சமாளிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. முயற்சிகளை கைவிடாதிங்க. விவசாய தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூரம் பயணம் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யக்கூடிய பணியாளர்களுக்கு வேலைக்கு ஏற்ற ஊதியமும் பாராட்டும் கிடைக்கும்.

மன நிறைவான சந்தோஷத்தை பெறுவீர்கள். மூன்றாவது நபர்களிடம் நெருங்கி பழக வேண்டாம். குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம். சில பேருக்கு இரவில் நிம்மதியான தூக்கம் இருக்காது. குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பெரிய கஷ்டங்கள் இருந்தால் சரியாகிவிடும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகள் வெற்றி தரும். புதிய தொழில் தொடங்கலாம். புதிய வேலைக்கு செல்லலாம். புதியதாக வீடு வாகனம் நிலம் வாங்குவதாக இருந்தால் கூட வாங்கலாம். உங்களுக்கு அது லாபம் தான். எதிரிகளின் தொல்லை நீங்கும்.

எதிர்பாராத பண வரவு சந்தோஷத்தை கொடுக்கும். நினைத்து பார்க்காத நல்ல காரியம் ஒன்று நடக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் தொடங்கும். கூடுமானவரை யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க. தினமும் துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது நன்மை தரும்.

- Advertisement -

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதியான வாரமாக இருக்கப் போகின்றது. பிரச்சனைகளை எல்லாம் தூக்கி தூர போட்டுவிட்டு நிம்மதியான உறக்கத்தை பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சுப காரிய நிகழ்ச்சிகள் தொடங்கும். சுப செலவுகளும் உண்டு. வியாபாரத்தில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பக்கத்தில் இருப்பவர்கள் கூட துரோகம் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.

பண வரவு சந்தோஷத்தை கொடுக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. பெயரும் புகழும் உங்களைத் தேடி வரப் போகின்றது. பதவி உயர்வு கிடைக்கும் சம்பள உயர்வு கிடைக்கும். தினமும் வீட்டில் மகாலட்சுமியை நினைத்து விளக்கு ஏற்றுவது வீண் செலவுகளை குறைக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிரமம் நிறைந்த வாரமாக தான் இருக்கப் போகின்றது. எடுத்த காரியம் உடனடியாக கைக்கூடி வராது. பலமுறை முயற்சி செய்த பின்பு தான் வெற்றி உங்கள் பக்கம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். நல்ல சாப்பாடு உறக்கம் இருக்காது.

நீண்ட தூர பயணத்தை கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அப்போது தானே உழைத்து பணம் சேர்க்க முடியும். யாரை நினைத்தும் பாவம் பார்க்காதீங்க. பாவம் பார்த்து நீங்கள் செய்யக்கூடிய உதவி பின்னால் உங்களுக்கு பிரச்சனையாக வந்து விடியும். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாரை நம்பியும் பணம் கொடுக்க வேண்டாம். தினமும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானம் தேவை. எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. முன்பின் தெரியாத வேலைகளை செய்யக்கூடாது. யாரை நம்பியும் கடன் கொடுக்காதீங்க. யாரை நம்பியும் கடன் வாங்காதீங்க. உங்க குடும்ப பிரச்சனையை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் உஷாராக நடந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய இடத்தை பிடிப்பதற்கு நிறைய பேர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அண்ணன் எப்போ போவான், திண்ணை எப்போ காலி ஆகும் என்ற கதை தான், உங்கள் கதையும். செலவை கொஞ்சம் குறையுங்கள். சேமிப்பை அதிகப்படுத்துங்கள். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதிநிலைமை கொஞ்சம் பற்றாக்குறையாக இருக்கும். அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சொந்தத் தொழிலில் பெரியதாக லாபம் இருக்காது. தொழிலை விரிவு படுத்த அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.

குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவில்லை. விருந்தினர்களின் வருகை இருக்கும். மனம் நிம்மதி அடையும். எந்த இடத்திலும் தன் அடக்கம் தேவை. தலைகனத்தோடு நடக்காதீங்க. சின்ன சின்ன பிரச்சனைக்கு கூட சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. தினமும் கண்களை மூடி ஒரு பத்து நிமிடம் ஓம் நமசிவாய மந்திரம் சொல்லி தியானம் செய்வது நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக இழுப்படியாக இருந்த சொத்து வழக்குகள் உங்களுக்கு சாதகமான முடிவைத் தரும். பண வரவு மன நிறைவை கொடுக்கும். கஷ்டம் என்று வரும்போது யாரும் உங்களுக்கு உதவி செய்ய மாட்டாங்க. அதன் மூலம் சின்ன மன அழுத்தம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. விடுங்க, கடவுளை துணைக்கு கூப்பிட்டுக் கொள்ளுங்கள்.

உங்களால் முடிந்த உதவியை நீங்கள் நாலு பேருக்கு செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு நன்மை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் என்னதான் உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்கப் போவது கிடையாது. அதற்காக வேலை செய்யாமலும் இருக்க முடியாது. வாங்கும் சம்பளத்துக்கு வேலையையும் செய்து விடுங்கள். தினமும் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை சொன்னால் நிம்மதி கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன தடைகள் வந்து போகும். எதிர்பாராத செலவு சிக்கலை உண்டாக்கும். பாக்கெட்டில் பணம் காலி ஆகிவிடும். செலவுகளை சமாளிக்க கொஞ்சம் கஷ்டம் இருக்கும். இந்த மாத இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். கவலைப்படாதீங்க, சின்ன சின்ன தடைகள் இருந்தாலும் அதை எதிர்த்துப் போராடி வெற்றி அடைய கூடிய மன தைரியம் உங்களிடத்தில் உள்ளது. திருமணம் பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக நடந்து முடியும்.

உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை சாப்பிடுங்கள். அதிகமாக வெயிலில் சுற்ற வேண்டாம். மற்றபடி எந்த விஷயத்திலும் பிடிவாதம் பிடிக்காமல் அட்ஜஸ்ட் செய்து போனால் ஜெயிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. தினமும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடக்கும். செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். சம்பளம் வாங்கிய உடனே எல்லாவற்றையும் செலவு செய்து விட்டால் மாத இறுதியில் திண்டாட்டம் தான்.

வாக்குவாதம் செய்வதை குறைத்துக் கொள்ளவும். முக்கியமாக மேலதிகாரிகள் சொல்படி கேட்டு நடக்கவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பிரபலங்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். தினமும் குரு பகவான் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கனவு நிறைவேற போகிறது. நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேலையை இந்த வாரம் செய்து முடிப்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாயகம் திரும்புவீர்கள்.

சொந்த பந்தங்களை சந்திப்பீர்கள். மனது சந்தோஷமாக இருக்கும். உங்களை எதிரிகள் சாய்க்க நினைத்தாலும் அதிலிருந்து மீண்டும் எழுந்து வந்து விடுவீர்கள். நீங்கள் சாதிக்க இன்னும் நிறைய இருக்கிறது. மனம் தளர வேண்டாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். 4, 5 தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கிறது ஜாக்கிரதை. பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். சேவிங் கரையும். கண்ணில் ரத்த கண்ணீர் வரும். என்ன செய்வது சில நேரத்தில் செலவுகளை சமாளித்து தான் ஆக வேண்டும். பேசும்போது வார்த்தையில் அதிக கவனம் தேவை. யாரையும் எடுத்துறிந்து பேசாதீங்க. வார்த்தைகளை விட்டு விட்டால் மீண்டும் அள்ள முடியாது.

பயணங்கள் செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தால் பயணத்தை அடுத்த வாரம் தள்ளி வைப்பது நல்லது. தொழிலை விரிவுபடுத்தலாம். நல்ல லாபம் வரக்கூடிய நேரம் தான். சூதாட்டம் கூடவே கூடாது. உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிபையும் எடுக்காதீங்க. நிதானமாக இருப்பது நன்மை தரக்கூடிய விஷயம். 6ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் ஜாக்கிரதை. தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -