இந்த வார ராசிபலன் 13-09-2021 முதல் 19-09-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்தது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வும், பதவியும் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய சொத்துக்களை வாங்க இந்த வாரம் முயற்சி செய்யலாம். வெளியிடங்களுக்கு செல்லும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மாஸ்க் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம். உடல்நிலையில் ஏதாவது பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். உங்களுடைய வெற்றிக்கு உங்கள் சொந்த பந்தங்களும் உறுதுணையாக நிற்கும். புதியதாக தொழில் தொடங்க இந்த வாரம் சிறப்பான வாரமாக அமையும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இதுநாள்வரை வேலையில் இருந்த சிக்கல்கள் இனி படிப்படியாக குறையத் தொடங்கும். மனதில் இனம் புரியாத நிம்மதி வரும். இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத வருமானம் வந்து உங்கள் பையை நிரப்ப போகின்றது. இருப்பினும் ஆடம்பர செலவை குறைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்திற்கு சேமிப்பு நன்மை தரும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அரசு சம்பந்தமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக பேசுவார்கள். உங்களை சுற்றி உள்ளவர்களிடம் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயர்ந்து காணப்படும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. உங்களுடைய மனதில் இனம் புரியாத அமைதி நிலவும். வருமானம் அதிகரிக்கும். புதியதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க நிறையவே வாய்ப்பு உள்ளது. தடைப்பட்ட சுபகாரியங்கள் வீட்டில் நடக்கத் தொடங்கும். இந்த வார இறுதியில் மட்டும் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக கோபப்படக்கூடாது. வீண் விவாதம் செய்யக் கூடாது. ஓம் நமசிவாய மந்திரத்தை தினம்தோறும் மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே வாருங்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமைகள் வெளிப்படும் வாரமாக அமையப்போகின்றது.‌ எந்த வேலையை கொடுத்தாலும் அதை சுறுசுறுப்பாக திறமையுடன் செய்து முடித்து விடுவீர்கள். கொஞ்சம் கூட உடலில் சோர்வு என்பதே இருக்காது. உங்களுடைய திறமையை பார்த்து அனைவரும் வியக்கும் அளவிற்கு கூட சில சாகசங்களை செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. முடிந்தவரை பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணம் செய்வதாக இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடன் வாங்க முயற்சி செய்யலாம். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கும். எந்த வேலையைத் தொட்டாலும் அது சட்டென முடியாது. கொஞ்சம் இழுத்துக் கொண்டே செல்லும். மறைமுகமாக இருக்கக்கூடிய எதிரிகளின் மூலம் சில தொல்லைகள் வரலாம். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் துணிச்சல் என்பது கட்டாயமாக இருக்க வேண்டும். அதற்காக எந்த விஷயத்திலும் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்பதை இந்த வாரம் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வார இறுதியில் நீங்கள் எதிர்பார்க்காத வரவு உங்களை தேடி வரும். உங்களுடைய தன்னம்பிக்கையே, உங்கள் வாழ்க்கையை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதியான வாரமாக இருக்கும். தேவையற்ற பிக்கல் பிடுங்கல் இருந்து வெளிவந்து விடுவீர்கள். கடன் பிரச்சனை நீங்கும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு சில விஷயங்களை தொடங்கலாம். புதிய முயற்சிகள் கட்டாயம் வெற்றியில் தான் முடியும். வருமானம் அதிகமாக இருக்கும். அதேசமயம் சுப செலவுகளும் அதிகரிக்கும். வீட்டில் விருந்தினரின் வருகை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றபடி தொழில் நல்ல லாபத்தைக் கொடுக்கும். வேலை செய்யும் இடத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன மகிழ்ச்சியை கொடுக்கும் வாரமாக இருக்கப் போகின்றது. உங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் நினைத்தபடி திருமணத்தை நிச்சயிப்பீர்கள். வீடு மனை வாங்க கூடிய நல்ல நேரம் கைகூடி வரும். தேவையற்ற மன கசப்பான விஷயங்கள் உங்களை விட்டு தானாக விலகும். எதிரி தொல்லை இருக்காது. வருமானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு உண்டு. உங்களுடைய கஷ்டங்கள் அனைத்திற்கும் விடிவுகாலம் கிடைக்கப் போகின்றது. தினம் தோறும் குலதெய்வ வழிபாடு கைமேல் பலனை கொடுக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எதிலும் ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள்‌ முடிந்தவரை வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. செலவு கொஞ்சம் அதிகரிக்கும். சேமிப்புகள் கரையும்‌. நிதி நிலைமை சற்று தடுமாறித்தான் செய்யும். இந்த மாத இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். கணவன் மனைவி அனுசரித்து செல்ல வேண்டும். வீண் வாக்குவாதம் செய்தால் குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகமாகிவிடும். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் சந்தோஷமாக பொழுதை கழிக்க போகிறீர்கள். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். உங்களுடைய குடும்ப உறவினர்களுடன் வெளி இடங்களுக்கு சுற்றுலா செய்வதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. சந்தோஷமாக நேரத்தை கழித்து நிறைய பணத்தை செலவழித்து இந்த வாரத்தை கடந்து செல்லப் போகிறீர்கள். எது எப்படி இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். ஜீரணம் சம்பந்தப்பட்ட வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேசமயம் உங்களுடைய உடலில் காயம் படுவதற்கும் சில வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். வியாழக்கிழமை அன்று குரு பகவான் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பங்கள் நீங்கும். தெளிவான மனநிலை இருக்கும். கடன் சுமையில் இருந்து படிப்படியாக வெளிவர தொடங்குவீர்கள். மேலும் மேலும் கடன் வாங்காமல் பார்த்துக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது. வீட்டில் திருமணம், நிச்சயம் போன்ற சுப காரியங்களை சுறுசுறுப்பாக ஆரம்பிக்கத் தொடங்குவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். என்னதான் வருமானம் வந்து, என்னதான் கடன் அடைந்தாலும், உங்களுடைய செலவுகள் மட்டும் உங்களை விட்டு போகவே போகாது. வருமானத்திற்கு முன்பாக செலவுகள் வந்து நிற்கும். பரவாயில்லை விடுங்கள். எல்லாம் வரக்கூடிய நாட்களில் சரியாகிவிடும். தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சலான வாரமாக தான் இருக்கப்போகின்றது. வேலை காரணமாக அங்கும் இங்குமாக சுற்றி திரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். நேரத்திற்கு சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள். அலைச்சலும் வேலையும் ஒருபக்கம் இருந்தாலும் உங்களுடைய புத்திசாலித்தனத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பு உங்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பயணங்களின்போது அதிக கவனம் தேவை. அலட்சியம் வேண்டாம். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -