- Advertisement -
Homeஜோதிடம்வார பலன் | Vara rasi palangalஇந்த வார ராசிபலன் 14/08/2023 முதல் 20/08/2023 வரை - 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

இந்த வார ராசிபலன் 14/08/2023 முதல் 20/08/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். ஏதாவது உடம்புக்கு சரியில்லை என்றால் மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்குவது, கை வைத்தியம் பார்ப்பது போன்ற விஷயங்களை எல்லாம் தவிர்த்து விட்டு, நேரடியாக நல்ல மருத்துவரை அணுகவும். கொஞ்சம் வீண் விரைய செலவு, மருத்துவ செலவு ஆகத்தான் செய்யும். அதை பற்றி கவலைப்படாதீர்கள். தொடர்ந்து உழைப்பதற்கு ஆரோக்கியம் முக்கியம் அல்லவா. அதனால் தான். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷத்திற்கு எந்த குறைவும் இருக்காது. செய்யும் வேலை சொந்த தொழில் எல்லாம் அது பாட்டுக்கு நல்லபடியாக செல்லும். தினமும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லா வேலைகளிலும் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். யாரை நம்பியும் உங்களுடைய வேலையை ஒப்படைக்காதீங்க. தெரியாத மூன்றாவது நபரிடம், நெருங்கிய நட்புறவு வைத்துக் கொள்ள வேண்டாம். உங்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ரொம்ப நம்பி ஏமாந்திட்டாங்க. நம்பி பணத்தை கொடுத்தேன், ஆனால் அவன் ஏமாற்றி விட்டான். நம்பி என்னுடைய ரகசியத்தை அவனிடம் சொன்னேன். ஆனால், அவன் கடைசியில் காலை வாரிவிட்டான். என்று நீங்கள் புலம்பக்கூடிய சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஆக கொஞ்சம் உஷாராக இருங்கள். கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. விட்டு கொடுத்து செல்லவும். தினமும் துர்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்லவாரமாக தான் இருக்கும். ஆனால் முக்கியமான விஷயங்களுக்கு முடிவெடுப்பதாக இருந்தால், அடுத்த வாரம் தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். புதிய முயற்சிகளை அடுத்த வாரம் தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பிள்ளைகளின் படிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.

பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளாக இருந்தால், அவர்கள் நடவடிக்கையையும் கொஞ்சம் கவனியுங்கள். அவர்களுடைய நட்புறவு என்ன, அவர்கள் எங்க போறாங்க, வராங்க அவங்க மொபைல் போனை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை எல்லாம் அவர்களுக்கே தெரியாமல் ஒரு கண் பார்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் சொல்லும் அளவிற்கு நாம் இருக்கக் கூடாது. நம்முடைய வேலையை சரியாக செய்து விட்டால் நல்லது. தினமும் ஸ்ரீ ராம ஜெயம் மந்திரம் சொல்லுங்கள் நன்மை நடக்கும்.

- Advertisement -

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரம் ஆகத்தான் இருக்கப்போகின்றது. எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். உங்களுடைய நல்ல மனதை புரிந்து கொள்வார்கள். கடன் சுமை படிப்படியாக குறையும். வருமானம் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கைநிறைய சம்பளத்தோடு புதிய வேலை கிடைக்கப் போகின்றது. இடமாற்றம் பணி மாற்றம் நன்மையை கொடுக்கும். குடும்பத்தோடு ஒரு முறை குலதெய்வ கோவிலுக்கு சென்று நன்றி தெரிவிப்பது நல்லது.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கும். இத்தனை நாள் உங்களை போட்டு வாட்டி வதைத்த பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக சரியாகும். நீ பெரியவனா, நான் பெரியவனா என்று சண்டை போட்டு எதுவும் ஆகப் போவதில்லை. ஆகவே, கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளுங்கள். விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போனதும் கிடையாது. அடம்பிடித்து பிடிவாதம் பிடித்து ஒரு காரியத்தில் நான் தான் ஜெயிக்க வேண்டும் என்று நிற்பது தவறு. தினமும் மனதை அமைதிப்படுத்த ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி வாருங்கள்.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. செலவுக்கு என்னடா செய்யப் போகிறோம் என்று தவித்து வந்திருப்பீர்கள். கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கு பணத்தை கொடுத்து உதவி செய்ய போகின்றான். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். பிள்ளைகள் மேல் படிப்புக்காக கட்ட வேண்டிய ரொக்கத் தொகையை கட்டி விடுவீர்கள். பெற்றவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.

குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். எது எப்படியாக இருந்தாலும் நீங்கள் உங்கள் வேலையை பார்ப்பது மட்டும் நல்லது. மூன்றாவது நபர்களுடைய பிரச்சனையில் மூக்கை நுழைக்காதீங்க. தினமும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு போய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது குடும்பத்திற்கு நல்லது.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்க போகின்றது. வாரா கடன் வசூல் ஆகும். நீண்ட நாட்களாக பிரச்சனையில் இருந்து சொத்து உங்கள் பக்கம் தீர்ப்பாகும். அதனால் நிலம் புலம் வீடு வாங்குவதற்கான யோகமும் உங்களுக்கு கிடைக்கும். வருமானம் ஒரு பக்கம் இருக்க, நீங்கள் வாங்கிய கடனை எல்லாம் சரியாக திருப்பிக் கொடுத்து விட்டீர்களா என்று கவனிக்கவும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில், நீங்கள் மறந்த சில விஷயங்கள் உங்களுக்கு பிரச்சனையை தரலாம். தினமும் குபேரரை நினைத்து வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது நன்மையை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி வாகை சூடக் கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. எல்லா விஷயத்திலும் வெற்றி தான். உங்களை எதிர்த்து எத்தனை பேர் போட்டி போட்டாலும், எல்லாவற்றையும் தூக்கி போட்டு துவம்சம் செய்ய போகிறீர்கள். எதிரிகள் உங்களைக் கண்டு பயப்படுவார்கள். சொந்தத்தொழிலில் நீங்கள் நினைத்ததை விட பெரிய இடத்தை அடைவதற்கு உண்டான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் சப்போர்ட் இருக்கும். நல்லது நடக்கும். இந்த வாரம் 14ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் ஜாக்கிரதை.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. எப்படியாவது கஷ்டப்பட்டு இந்த வாரம் மௌன விரதம் இருக்க வேண்டும். யார் என்ன கேட்டாலும், ஆமாம்,இல்லை, என்று பதில் சொல்வதோடு வைத்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக பேசினால் பிரச்சனை உங்களுக்கு தான். உங்கள் வாயை பிடுங்கி வம்புக்கு இழுக்க உங்களை சுற்றி நான்கு பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வாயை திறந்தால் முடிந்தது. நீங்கள் தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் என்று பழி உங்கள் மேல் விழுந்து விடும். ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. இந்த வாரம் 14, 15, 16, ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம். அனுமன் கோவிலுக்கு போங்க தினமும். நல்லது நடக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாகத் தான் இருக்க போகின்றது. சில ஏற்ற இறக்கங்கள், சில வெற்றி, தோல்விகள் இருக்கும். அதை கண்டு பயப்பட வேண்டாம். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஏற்ற இறக்கம் இருப்பது சகஜம் தான். ஆனால், புதிய முயற்சிகளில் கூடுமானவரை இந்த வாரம் கால் வைக்க வேண்டாம். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களிடம் பேசும் போது கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ளவும். அனாவசிய வார்த்தைகளை வாயில் இருந்து விடக் கூடாது. மனதிற்குள் சிவ சிவ நாமத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். எல்லாம் நல்லதாக நடக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வீட்டை பராமரிக்கக் கூடிய வேலை இருக்கும். வீட்டில் வேலை செய்யாத எலக்ட்ரிக் சாதனங்களை பழுது பார்ப்பீர்கள். மனைவிக்கு உதவியாக இருப்பீர்கள். குழந்தைகளுடன் நேரத்தை கழுவி கழிப்பீர்கள். சந்தோஷமான வாரமாகவே இருந்தாலும், நீங்கள் ஒரு சில விஷயங்களை இந்த வாரம் கவனிக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் அடுத்தவர்களுடைய பேச்சை நம்ப கூடாது. உங்களுடைய வேலையை அடுத்தவர்களிடம் ஒப்படைக்க கூடாது. யாரிடமும் வாக்குவாதம் செய்யக் கூடாது. எப்போதுமே அடுத்தவர்களை குறை சொல்லிக் கொண்டே இருக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள். தினமும் பெருமாள் வழிபாடு நன்மையை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடும். எல்லாம் நல்லதாக நடக்கப் போகிறது என்று காத்துக் கொண்டே இருப்பீர்கள். ஆனால் அது கடைசியில் உங்களுக்கு கிடைக்காமலேயே போய்விடும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ஆகவே முயற்சியை மட்டும் கைவிடாதிங்க.

உங்களுடைய முன்னேற்றம் இன்னும் கொஞ்சம் தொலைவில் தான் உள்ளது. நீங்க எதிர்கொள்ளும் ஒவ்வொரு கஷ்டத்திற்கும் கடவுள் கணக்கு வைத்திருக்கின்றான். சீக்கிரம் அதற்கான பலனை கொடுத்து விடுவான். வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். வெளியூர் செல்பவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். தினமும் முருகர் வழிபாடு நன்மையை தரும்.

சற்று முன்