இந்த வார ராசிபலன் 02-08-2021 முதல் 08-08-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமைகள் வெளிப்படும் வாரமாக இருக்கப் போகின்றது. இருப்பினும் அடிக்கடி வரக்கூடிய முன்கோபத்தால் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அனாவசியப் பேச்சுகளைத் பேச வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் இருக்கும் பெண்கள் பொறுமை காப்பது நல்லது. சிந்தித்து செயல்பட்டால் பிரச்சனைகள் இல்லை. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள்‌. வேலை செய்யும் இடத்தில் பெரிய பதவிகள் தானாகவே உங்களைத்தேடி வரும். சொந்த தொழிலில் அதிகப்படியான முதலீட்டை போட வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே சில சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துச் என்றால் பிரச்சினை இல்லை. தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. எந்த ஒரு முடிவையும் நிதானத்தை இழந்து அவசரப்பட்டு எடுக்கவே கூடாது. அது உங்களுடைய வாழ்க்கையில் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதை விட வேறு வழியே இல்லை. இந்த வேலையை விட்டு விட்டால், புதிய வேலை கிடைப்பதில் நிறைய சிரமங்கள் உள்ளது. தொழில் கொஞ்சம் மந்தமாக தான் செல்லும். மற்றபடி உங்களுடைய சொந்த விஷயங்கள் அனைத்துமே நல்லபடியாக நடந்து முடியும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தொடங்கும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். சுபச்செலவுகள் ஏற்படும். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் தர்மசங்கடங்கள் நிறைந்த வாரமாக தான் இருக்கப் போகின்றது. ஆனால் அந்த சங்கடங்கள் அனைத்தையும் உங்களுடைய சாமர்த்தியத்தால் முறியடித்து விடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் வேலையை விடும் அளவிற்கு கூட சில பேருக்கு பிரச்சினைகள் வரலாம். நிதானமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். முன் கோபம் வரவே கூடாது. எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து எடுப்பது நன்மை தரும். மனதிற்குள் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிக்கலான வாரமாக தான் இருக்கப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில், வேலை பளு அதிகரிக்கும். சொந்தத் தொழிலில் தேவையற்ற பிரச்சனைகள் வந்து லாபத்தை குறைக்கும். திடீரென்று பயணங்கள் ஏற்படும். உடல் அசதி ஏற்படும். இப்படி சில சங்கடங்களை இந்த வாரம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். இது தவிர உங்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினால், பெரிய செலவுகளை தவிர்க்கலாம். வீட்டில் இருக்கும் குடும்ப தலைவிகளுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக அமையும். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உயர்வு தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. வேலை செய்யுமிடத்தில் பாராட்டுகள் குவியும். நல்ல பெயரை சம்பாதிப்பீர்கள். சொந்த தொழிலுக்காக வெளியிடங்களில் அதிக அளவு கடன் வாங்க வேண்டாம். யாரை நம்பியும் கடனும் கொடுக்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றத்தில் கொஞ்சம் உஷாராக இருங்கள். முடிந்தவரை இந்த வாரம் யாருக்கும் உதவி செய்யாமல் இருப்பதே நல்லது. பயணங்களில் சிரமங்கள் இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் போட்டு கொண்டு செல்ல வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் புதிய முயற்சிகளைத் தொடங்கலாம் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். மன குழப்பம் இருக்காது. தெளிவான முடிவுகளை எடுத்து தெளிவாக சிந்திப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் இது நாள் வரை பிரச்சினைகள் கொடுத்து வந்தவர்களுக்கு, பதிலடி கொடுத்து வாயை அடைத்து விடுவீர்கள். பேச்சுத் திறமையும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும். தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. உழைப்புக்கேற்ற ஊதியமும், செய்த வேலைக்கான பாராட்டும் உங்களை வந்து சேரும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் அனுசரித்துச் சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வீட்டில் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பேச்சுத்திறமை அதிகரிக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்திலும் சரி, தொழில் செய்யும் இடத்திலும் சரி உங்களது பேச்சு திறமையால் நிறைய வேலைகளை சாதித்துக் கொள்வீர்கள். கடன்தொகை வசூலாகும். நீங்கள் வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. பெண்கள் வேலை செய்யும் இடத்தில் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். காண்ட்ராக்ட் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்கள் பக்கம் கையெழுத்தாக நிறையவே வாய்ப்பு உள்ளது. கோர்ட் கேஸ் பிரச்சனைகளில் உங்களுக்கே வெற்றி. சந்தோஷம் நிறைந்த இந்த தருணத்தில் குலதெய்வ வழிபாட்டை மறக்க வேண்டாம்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக இருக்க போகின்றது. இதுநாள் வரை கடந்து வந்த பல பிரச்சனைகளுக்கு இந்த வாரம் முற்றுப்புள்ளி வைத்து விடுவீர்கள். குடும்பத்தில் உறவினர்களின் மூலம் சில சிக்கல்கள் வரும். பிரச்சனைகள் உண்டாகும். ஆனால் இந்த வார இறுதிக்குள் அது அத்தனையும் சரியாகிவிடும். இருப்பினும் மனதில் இனம்புரியாத கவலை ஒன்று இருந்து கொண்டே இருக்கும். மனதை அமைதிப்படுத்தி கொண்டு தினந்தோறும் காலையில் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி ஐந்து நிமிடங்கள் தியானம் செய்யுங்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பாராட்டும் புகழும் தேடி வரப் போகின்றது. உங்கள் உடன்பிறந்தவர்களின் நிலைமையை புரிந்துகொண்டு அவர்களை அனுசரித்து செல்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் நடந்துகொள்ளும் விதம், உங்களுக்கு நிறைய பாராட்டுக்களை குவிக்க போகிறது. உங்களை அறியாமலேயே நீங்கள் பக்குவம் அடைவீர்கள். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் நடக்கும். முன்னேற்றங்கள் நிறைந்த வாரம் தான் இது. செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பு உயர்த்துங்கள். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பங்கள் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. எந்த முடிவை எடுக்கலாம் எந்த முடிவை எடுக்கக் கூடாது என்ற தடுமாற்றம் இருக்கும். இருப்பினும் நீங்கள் எடுக்கக் கூடிய முடிவு உங்களுக்கு சாதகமாகவே அமையும். குழப்பங்கள் வேண்டாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவிக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். தினம்தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -