இந்த வார ராசிபலன் 21/08/2023 முதல் 27/08/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

intha Vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக திகழப்போகிறது. சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சுப செய்திகள் வீடு தேடி வரும். வீடு, மனை, நிலம் சம்பந்தப்பட்ட தடைகள் அனைத்தும் நிவர்த்தி ஆகும். மேற்கொள்ளக்கூடிய பயணங்களால் பல அனுகூலங்கள் ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மன பயம் நீங்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனம் தேவை.

பிள்ளைகளிடம் கோபம் கொள்ளாமல் அமைதியாக அவர்களின் தவறை எடுத்துரைப்பது மிகவும் நன்மை பயக்கும். உத்தியோகத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் குறையும். தொழிலில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். பொருளாதாரத்தில் நல்லதொரு பெரிய மாற்றம் நிகழும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடிய வாரமாக அமையப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வருவதால் உடல் நலத்தில் அக்கறை தேவை. தொழில் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் பயணம் சாதகமாக அமையும். வியாபாரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் குறைந்து, ஏற்றம் ஏற்படும். சுப காரிய தடைகள் நீங்கி விரைவில் நடக்க குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல அனுகூலமான வாரமாக திகழ போகிறது. உத்தியோகத்தில் ப்ரமோஷனுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். இடம் மாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். படிப்பில் இருக்கக்கூடிய தடைகள் அகன்று முன்னேற்றம் ஏற்படும். வாகன மாற்றம் நன்மை பயக்கும். அதே சமயம் இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

குடும்பத்திற்கு புதுவரவு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. பிறரிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொள்வதன் மூலம் தோஷங்கள் நீங்கும். பூர்வீக சொத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டிய வாரமாக இருக்கிறது. பேசும் வார்த்தையில் கவனம் தேவை. தேவை இல்லாத வாக்குறுதிகளை யாரிடமும் கொடுக்கக் கூடாது. தொண்டை வாய் தொடர்பான நோய்களால் பிரச்சனைகள் ஏற்படும். வாகனத்தை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். முடிந்த அளவு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

கூடா நட்பு பிரச்சினைகளை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கல்களில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். உறவுகளுக்கு இடையே பிரச்சனை இருப்பின் அவை தீர்வதற்கான வாய்ப்பு ஏற்படும். பூர்வீக சொத்து சம்பந்தமாக நல்ல செய்தி தேடி வரும். நரசிம்மர் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுபகாரியம் நடைபெறும் வாரமாக திகழப் போகிறது. உத்தியோகம் ரீதியாக நீங்கள் எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை. அவசரப்படக்கூடாது. மன அழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. யாரையும் நம்பி எந்த செயலையும் செய்யக்கூடாது.

தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பெரிய பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். விநாயகரை வழிபடுவதன் மூலம் நன்மைகள் கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சனைகள் நிறைந்த வாரமாக இருக்கப் போகிறது. தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பண விஷயங்களில் கவனம் தேவை. புதிதாக முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். விரயங்கள் உண்டாகும். முடிந்த அளவு கடன் வாங்காமல் இருப்பது நன்மை பயக்கும். உத்தியோக மாற்றம் நல்ல அனுகூலத்தை தரும். முதுகுத்தண்டு பிரச்சனை இருப்பவர்கள் அதில் ஏதேனும் பாதிப்பு ஏற்படின் உடனே கவனிக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு யாரிடமும் எந்த வாக்குறுதியும் அளிக்கக்கூடாது. குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் தடைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக அமையப்போகிறது. தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கப் போகிறது. தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். வியாபாரம் அபிவிருத்தி ஆகும்.

பிறரிடம் உங்களின் செல்வாக்கு உயரக்கூடிய சூழ்நிலை ஏற்படும். உங்கள் துணையுடன் வாக்குவாதம் மேற்கொள்வதை தவிர்ப்பது நன்மை பயக்கும். மனம் தெளிவு பெறும். நீண்ட நாட்களாக கண்ட கனவை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படும். சொந்தத் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் மேலோங்கி இருக்கிறது. துர்க்கை மற்றும் முருகரை வழிபடுவதன் மூலம் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிகாரர்களுக்கு இந்த வாரம் தடைகள் விலகி உயர்வு கிடைக்கக்கூடிய வாரமாக திகழப் போகிறது. தொழிலில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கிவிடும். வேற்று மொழி பேசுபவரால் ஆதாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கடல் கடந்து செய்யும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப்போகிறது.

புது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். குடும்பத்திலும், சமூகத்திலும் கௌரவம் கிடைக்கும். சிவ பார்வதி வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் சுப காரியங்கள் நடைபெறும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செல்வாக்கு பெருகக்கூடிய வாரமாக திகழப்போகிறது. உடல் நலனில் கவனம் தேவை. வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். வெளிவட்டார பழக்கவழக்கம் உயரும். புதிதாக தங்களிடம் அறிமுகமாகும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். ஜாமின் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது.

வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகளின் மீது இருந்த கோபம் மறையும். அவர்களின் கனவை நிறைவேற்றுவீர்கள். பசு மாட்டிற்கு உணவு அளிப்பதன் மூலம் நன்மைகள் ஏற்படும். மேலும் இந்த ஆவணி மாதத்தில் ஓர் நாளாவது கோதுமை தவிடு மற்றும் வெல்லம் கலந்து ஞாயிற்றுக்கிழமை அன்று பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டும். விநாயகர் மற்றும் சூரிய பகவானின் வழிபாடும் நன்மை பயக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. வாகனம் ஓட்டும்பொழுது கவனம் தேவை. சட்டவிரோதமான செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும். சட்ட விரோதமாக செயல்களை செய்பவர்களிடம் பேசுவதையும் தவிர்க்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். மன பயம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அவசரப்பட்டு எடுக்கக் கூடாது.

வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். செய்யக்கூடிய செயலில் தடைகள் ஏற்படும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. பிறரின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது மிகவும் நன்மை பயக்கும். விநாயகர், நரசிம்மர், அனுமன் போன்றவர்களின் மந்திரங்களை கேட்பதன் மூலம் நன்மைகள் நடைபெறும். பிறந்த கிழமை அன்று மதியம் தயிர் சாதமும் எலுமிச்சை ஊறுகாயும் தானமாக வழங்குவதன் மூலம் தடைகள் நீங்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் காரர்களுக்கு இந்த வாரம் சுப செய்திகள் வந்து சேரக்கூடிய வாரமாக அமையப் போகிறது. தம்பதிகளிடையே ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வெளிநாடு செல்லக்கூடிய அனுகூலமான செய்தி வந்து சேரும். சுப விரயம் ஏற்படும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

திருமணத்திற்காக எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். உத்தியோகத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். புதிதாக தொழில் தொடங்க ஆசைப்படுபவர்களுக்கு இருந்த சிக்கல்கள் நீங்கி தொழில் தொடங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடற்பயிற்சி மேற்கொள்வதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். முருகனை தொடர்ந்து வழிபடுவதன் மூலம் தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் விலகி நன்மைகள் உண்டாகும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் தொடங்குவதற்கு அற்புதமான வாரமாக திகழப்போகிறது. பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விடுவதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும்.

பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களில் கவனம் தேவை. எதிரிகளின் ஆதிக்கம் குறையும். தொழிலிலும், உத்தியோகத்திலும், வியாபாரத்திலும் புது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். இடமாற்றச் செய்ய நினைப்பவர்கள் இப்பொழுது செய்தால் நன்மையாக இருக்கும். குலதெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி நிச்சயம். மகான்களின் வழிபாடு சிக்கல்களை தீர்க்கும்.

- Advertisement -