இந்த வார ராசிபலன் 23-08-2021 முதல் 29-08-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகமாக இருக்கும். வருமானத்திற்கு ஏற்ப வீட்டில் சுபச் செலவுகளும் அதிகரிக்கும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நிலுவையில் இருந்த அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளை இந்த வாரம் தொடங்குங்கள். எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. சொந்தத் தொழில் அதிகப்படியான கடனை வாங்க வேண்டாம். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சி நிறைந்த வாரமாக அமையப்போகின்றது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யுமிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலில் நல்ல லாபம் உண்டு. இருப்பினும் குடும்ப விஷயங்களில் கொஞ்சம் கவனம் தேவை. உறவினர்களிடையே சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் வேண்டாம். அனுசரித்து செல்ல வேண்டும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. பணம் எவ்வளவு தான் வந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். முடிந்தவரை அதிக வட்டிக்கு கடன் வாங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெளியிடங்களுக்கு செல்லும் போது கொஞ்சம் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மாஸ்க் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம். நண்பர்களிடத்தில் இருந்து கொஞ்சம் விலகியே இருங்கள். தேவையற்ற பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் எல்லாவற்றையும் சரியான முறையில் வழி நடத்திச் செல்வீர்கள். பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு பக்குவமாக சமாளித்து, நல்ல பெயரையும் எடுக்கப் போகிறீர்கள். வேலை செய்யுமிடத்தில் பாராட்டுகள் குவியும். முடிந்தவரை சொந்த தொழிலில் அகலக்கால் வைக்க வேண்டாம். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கும். உறவினர்களின் வருகை இருக்கும். நெருங்கிய சொந்த பந்தங்களிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். வாக்குவாதம் பிரச்சனையில் போய் முடியும். தினம்தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அவசியம் தேவையானது பொறுமை. பொறுமையை கடைபிடித்தால், பிரச்சினையில்லை. அனாவசியமாக பொறுமை இழந்து, கோபப்பட்டு வார்த்தையை விட்டு விட்டால் குடும்பத்தில் குழப்பங்கள் வருவதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது. எந்த ஒரு முக்கியமான முடிவு எடுப்பதாக இருந்தாலும் அடுத்த வாரம் தள்ளிப் போட வேண்டும். ஒன்றுக்கு பலமுறை யோசித்து புதிய முடிவுகளை எடுப்பது நல்லது. ஓம் நமசிவாய மந்திரத்தை மனதுக்குள் சிரித்துக் கொண்டே இருங்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும். எவ்வளவு தான் வருமானம் வந்தாலும் செலவுகளை சமாளிக்க முடியாது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கடன் வாங்கிய தொகைக்கு வட்டி கட்ட முடியாத நிலைமை உண்டாகும். EMI பிரச்சனைகள் கழுத்தை நெறிக்கும். ஆனால், இந்த மாத இறுதிக்குள் உங்களுக்கு இருக்கக்கூடிய நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக குறையத் தொடங்கிவிடும். உங்களுடைய செலவுகளை, நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். மேற்கொண்டு கடன் வாங்காதீர்கள். தினந்தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சிக்கலான வாரமாக தான் இருக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் நீங்கள் யோசிக்காமல் எடுக்கும் சில முடிவுகள் உங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். பாதிப்புகள் பெரியதாக இருக்காது. இருப்பினும் ஜாக்கிரதை. எதை செய்தாலும் ஒன்றுக்குப் பலமுறை யோசித்து அதன் பின்பு, அந்த செயலில் ஈடுபடுங்கள். வியாபாரத்தில் லாபம் திருப்தியைத் தராது. சொந்தத் தொழிலில் என்னதான் உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. தினம்தோறும் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்க.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனநிறைவான வாரமாக இருக்கப்போகின்றது. கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனையிலிருந்து வெளிவருவீர்கள். வருமானம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க தொடங்கும். வேலை செய்யுமிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத யோகம் அடிக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருக்கும் கோர்ட் கேஸ் பிரச்சனைகள், இந்த வாரம் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்து உங்கள் கை வந்து சேரும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். வியாபாரம் எப்போதும்போல சுமுகமாக செல்லும். வேலை செய்யும் இடத்தை, உடன் வேலை செய்பவர்களிடம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகிறது. முடிந்தவரை வாங்கிய கடனை சீக்கிரமாக திருப்பிக் கொடுக்க பாருங்கள். செலவுகளைக் குறைக்கவேண்டும். வீட்டில் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாக பழக வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்கள் பழிச்சொல்லை ஏற்கக்கூடிய நிலையை உண்டாக்கிவிடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. சொந்த வீடு நிலம் வாகனம் வாங்க இந்தவாரம் முயற்சிகள் எடுக்கலாம். தினம் தோறும் குரு பகவான் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரம் ஆகத்தான் இருக்கும். எந்த விஷயத்திலும் இந்தவாரம் பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயரை, உங்களுடன் இருப்பவர்கள் தட்டிச் சென்று விடுவார்கள். அந்த சமயத்தில் கொஞ்சம் கோபம் தலைதூக்கத் தான் செய்யும். இருப்பினும் கோபத்தை வெளிப்படுத்த கூடாது. சொந்தத் தொழிலில் பங்குதாரர்களிடம் கவனம் தேவை. தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன சஞ்சலங்கள் இருக்கப் போகின்றது. நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருந்தாலும் உடன் இருப்பவர்கள் எதையாவது சொல்லி உங்களை சங்கடப்படுத்தி, விடுவார்கள். மனக்குழப்பங்கள் வந்து விலகும். எதை நினைத்தும் கவலைப்பட வேண்டாம். இந்த வார இறுதிக்குள் எல்லாம் சரியாகிவிடும். வேலை செய்யும் இடத்தில் அனுசரணையோடு நடந்து கொள்ளுங்கள். தினம் தோறும் முருகன் வழிபாடு தடைகளை தகர்க்கும்.

- Advertisement -