இந்த வார ராசிபலன் 30-08-2021 முதல் 05-09-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நல்லபடியாக நடந்து முடியும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்க தொடங்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். தாராளமாக புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்கள் உயர்கல்வியை படிப்பதற்கு தேவையான முயற்சிகளை தொடங்கலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். பாராட்டையும் பெறுவீர்கள். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்துக்களை விற்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் யோகமும் உண்டு. தேவையற்ற சிக்கல்களிலிருந்து இந்த வாரம் விடுபடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலில் நல்ல லாபம் உண்டு. புதியதாக தொழில் தொடங்குவதாக இருந்தால் இந்த வாரம் தொடங்கலாம். மாணவர்கள் கல்வியில் முன்னேற அதிக ஆர்வம் காட்ட வேண்டும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகரிக்கப் போகின்றது. சொல்லப்போனால் பண மழையில் நனையப் போகிறீர்கள். வாராக் கடன் வசூலாகும். உங்களுடைய கடன் பிரச்சனை தீரும். வியாபாரத்தில் அமோகமாக லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றத்தை பெறுவீர்கள். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். இந்த வார இறுதியில் சில பிரச்சனைகள் வரும். தேவையற்ற மனசஞ்சலங்கள் ஏற்படும். ஆனால் பிரச்சினைகளுக்கு வாய்ப்பு இல்லை. தினம் தோறும் பெருமாள் வழிபாடு கஷ்டங்களை குறைக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். மனதில் சந்தோஷம் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். நிதி நிலைமை சீராக செல்லும். சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு. குடும்பத் தலைவனும் தலைவியும் கோபத்தை விட்டு, அனுசரித்து சென்றால் மேலும் பல நன்மைகளை அடைய முடியும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் எதுவும் இருக்காது. சொந்த தொழில் எப்போதும் போல செல்லும். தினமும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமைகள் வெளிப்படும் வாரமாக அமையப்போகின்றது. உங்களுடைய பேச்சிலும் செயலிலும் ஏதோ ஒரு மாற்றம் இருக்கும். அந்த மாற்றம் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகளை கொண்டுவந்து குவிக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் பாராட்டும் அளவிற்கு சுறுசுறுப்பாக செயல்பட போகிறீர்கள். அந்த அளவிற்கு உற்சாகமான உடல்நிலை மனநிலை இருக்கும். சொந்தத் தொழிலை விரிவுபடுத்தலாம். அதிக வட்டிக்கு கடன் வாங்கும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உயர்வு தரும் வாரமாக இருக்கப்போகின்றது. வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற போகிறீர்கள். சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு. சிலருக்கு காதல் கை கூடுவதற்கு இந்தவாரம் நிறையவே வாய்ப்பு உள்ளது. சந்தோஷத்தில் உங்களுடைய முகத்தில் ஒரு தெளிவு காணப்படும். பயணங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்வது நல்லது. தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மையை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகளில் இந்த வாரம் வெற்றி கிடைக்கும். இதனால் உங்களுடைய மனம் சந்தோஷத்தில் நிறைந்திருக்கும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக இனி குறைய தொடங்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை அழகு படுத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்கள் படிப்பில் இன்னும் கொஞ்சம் அக்கறை காட்டவேண்டும். கஷ்ட காலத்தில் உறவுகள் சப்போர்ட் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டி இருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வார இறுதியில் முன் கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நல்லது. தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியம் கொள்ளக்கூடாது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. முக்கியமான முடிவுகள் ஆக இருந்தால், முடிவெடுப்பதை அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். நிதி நிலைமை சீராக தான் இருக்கும். ஒரு சிலருக்கு பணவரவு அதிகமாகவே இருக்கும். எப்படியாக இருந்தாலும் உங்கள் வருமானத்திலிருந்து ஒரு தொகையை சேமித்து வையுங்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் சுபத்தில் முடியும். உயர் பதவிகள் உங்களைத் தேடி வரும். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிக்கலான வாரமாக தான் இருக்கப் போகின்றது. தேவையற்ற பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பிக்கும். வேலை செய்யும் இடத்தில் அவ்வப்போது சின்னசின்ன எதிரிகள் உருவாகுவார்கள். எந்த பிரச்சினை வந்தாலும் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். முன் கோபம் வேண்டாம். அனாவசியமான வார்த்தைகளை பேச வேண்டாம். மௌனம் மட்டுமே உங்களுடைய ஆயுதமாக இருக்க வேண்டும். இந்த வார பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். இந்த வார இறுதியில் எதிர்பாராத ஒரு அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரப் போகின்றது. பொறுமை காக்க வேண்டும். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு மன வலிமையை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் உங்களுடைய ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். அனாவசியமாக வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம். நீண்ட தூர பயணத்தை தவிர்த்து கொள்ளுங்கள். வெளியிடங்களில் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். உடன் பிறந்தவர்களிடமும், நண்பர்களிடமும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வந்தால் யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுப்பது நல்லது. வாக்குவாதம் வேண்டாம். மன அழுத்தத்துடன் இருக்காதீர்கள் ரிலாக்சாக இருந்தால் இந்த வாரம் பிரச்சனை இல்லை. தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பம் இல்லாத வாரமாக இருக்கப் போகின்றது. எல்லா விஷயங்களிலும் தெளிவாக இருப்பீர்கள். பிரச்சினை என்று வந்தால் கூட குழம்ப மாட்டீர்கள். எது நல்லது எது கெட்டது என்று ஆராய்ந்து முடிவு எடுக்கும் அளவிற்கு மனநிலை தெளிவாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளை தொடங்கலாம். நிதி நிலைமை சீராக இருக்கும். ஆடை ஆபரண பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும். தினம்தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு கடந்த சில நாட்களாக இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கும். உங்களுடைய புத்திசாலித்தனம் வெளிப்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். கொஞ்சம் பணம் பற்றாக்குறையாகத்தான் இருக்கும். அடுத்த மாதம் சம்பளம் வந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும். நீண்ட தூர பயணத்திற்கு வாய்ப்பு உள்ளது. பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -