இந்த வார ராசிபலன் 09-08-2021 முதல் 15-08-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எண்ணங்கள் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். மனது ஒரு நிலையாக இருக்காது. தேவையற்ற மனிதர்களால் சில சஞ்சலங்கள் வரும். சொந்த பந்தங்களுடன் வீண் விவாதம் செய்யாதீர்கள். நண்பர்களிடத்தில் இருந்து கொஞ்சம் விலகியே இருங்கள். வேலை செய்யும் இடத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். சொந்தத் தொழிலில் லாபம் சுமாராகத்தான் இருக்கும். முக்கியமான முடிவுகளை இந்த வாரம் எடுக்க வேண்டாம். தினம் தோறும் முருகப் பெருமானை வழிபாடு செய்வது நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக இருக்கப் போகின்றது. உங்களது வேலையை சுறுசுறுப்பாக செய்து முடித்து, சுற்றி இருப்பவர்களுடைய பாராட்டை பெறுவீர்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு புதிய முயற்சிகள் வெற்றி தரும். கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையத் தொடங்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் உண்டு. குடும்பத்தோடு ஆன்மிக சுற்றுலா செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரும் நாளாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு கொஞ்சம் அதிகரிக்கும். சொந்த தொழில் காரணமாக நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வார இறுதியும் தேவையற்ற சில பிரச்சனைகள் வந்து தொல்லை கொடுக்கும். இருப்பினும் உங்களுடைய புத்திசாலித்தனத்தால் வரக்கூடிய சிக்கலை சமாளித்து விடுவீர்கள். பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஓய்வு தரும் வாரமாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு பிரச்சனைக்கும் செல்ல மாட்டீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் தேவையற்ற பேச்சுக்கள் வந்தாலும் சரி, அதை இந்த காதில் வாங்கிக்கொண்டு அந்த காதல் விட்டு விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த வாரம் அமைதியாகத்தான் சொல்லப் போகின்றது. எந்த பிரச்சினைகளுக்கும் இடமில்லை. தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் துணிச்சலோடு தான் செயல்பட வேண்டும். இல்லை என்றால் எதிர்பாராத சில தோல்விகளை சந்திக்க நேரிடும். என்ன பிரச்சனை வந்தாலும் சரி அதை எதிர்கொண்டு துணிச்சலோடு போராடுங்கள். பிரச்சினையைக் கண்டு பின் வாங்காதீர்கள். வெற்றி உங்கள் பக்கம்தான் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய தன்மானத்திற்கு இழிவாக ஏதேனும் செயல் நடந்தால், அதை நீங்கள் தட்டி கேட்டுத்தான் ஆகவேண்டும். உங்களுடைய வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகளை இந்த வார இறுதியில் எடுக்க நேரிடும். தினம்தோறும் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே வாருங்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் வெரும் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. உங்களுக்கு இந்த வாரம் விடாமுயற்சி மட்டும் தான் வெற்றியை கொடுக்கும். பதட்டத்துடன் எந்த ஒரு விஷயத்தையும் தொடங்காதீர்கள். 100% உறுதியோடு நம்பிக்கை இருந்தால் மட்டும் ஒரு காரியத்தில் காலை வையுங்கள். வேலை செய்யுமிடத்தில் சில பிரச்சனைகள் வரும். சொந்தத் தொழிலை முன்னேற்ற விடாமல், முதலீடுகளில் பிரச்சனைகள் ஏற்படும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப்போகிறது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றி தரும் வாரமாக அமையப் போகின்றது. அதிர்ஷ்டம் உங்களுக்கு கை கொடுக்கும். நீங்கள் வேண்டா வெருப்பாக எந்த வேலையை தொடங்கினாலும் அதில் உங்களுக்கு சக்சஸ் தான். வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்ட போகின்றது. புத்திசாலித்தனத்தனமும், திறமையும் உங்களுடைய நாவில் நடனமாடும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் நன்மை தரக்கூடிய வாரமாக தான் இருக்கப்போகின்றது. எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் தொடங்கும். புத்துணர்ச்சியாக செயல்பட்டு வெற்றி வாகை சூடப் போகும் வாரம் தான் இந்த வாரம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். கடன் வாங்காதீர்கள். கடன் கொடுக்காதீர்கள். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிக்கல்கள் நிறைந்த வாரமாக தான் இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் நல்லதையே செய்தாலும் அந்த பாராட்டு உங்களுக்கு கிடைக்காது. அந்த நல்லது இறுதியில் சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும். தொழில் செய்யும் இடத்தில் பங்குதாரர்களிடம் கவனமாக இருக்கவேண்டும். முதலீட்டில் சிக்கல் ஏற்படும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தினமும் காலையில் எழுந்து ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்து மனதை அமைதிப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். நீங்கள் எதிர்பாராத சம்பள உயர்வு, பதவி உயர்வு, உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். உங்களுடைய மனது உற்சாகத்துடன் இருக்கும். மனத் திருப்தி ஏற்படும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்வாகும். பூர்வீக சொத்து வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. எதற்கு சந்தோஷப்படுவது என்றே தெரியாத அளவிற்கு நிறைய சந்தோஷமான விஷயங்கள் இந்த வாரம் நடக்கும். குடும்பத்தோடு குல தெய்வத்துக்கு நன்றி சொல்ல வேண்டாம்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பம் நிறைந்த வாரமாக தான் இருக்கப் போகின்றது. வாழ்க்கையில் சில முடிவுகளை இந்த வாரம் எடுக்காமல் இருப்பதே நல்லது. நீண்ட நாட்களாக திருப்பிக் கொடுக்க முடியாத கடன் தொகையை இந்த வாரம் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். பண பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, வரும். பணத்திற்கு எந்த தட்டுப்பாடும் இருக்காது. இருப்பினும் வாழ்க்கை சம்பந்தப்பட்ட சில சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து செல்லுங்கள். முன் கோபப்படாதீர்கள். அனாவசிய வார்த்தையை பயன் படுத்தாதீர்கள். தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் கற்பனை உலகத்திலேயே மிதப்பார்கள். சந்தோஷமும் ஒருவிதமான பூரிப்பும் அவர்களுடைய மனதிற்குள் வந்து கொண்டே இருக்கும். கையில் பணம் காசு இல்லை என்றாலும்,  தங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி செல்வார்கள். யார் என்ன சொன்னாலும் சரி, என்னுடைய வாழ்க்கை இப்படித்தான். நான் என் இஷ்டத்திற்கு தான் வாழ்வேன் என்று ஒரு பேச்சு. இந்த வாரம் முழுவதும் இப்படியே சென்று விடும். கவலைகளுக்கு இடம் இருக்காது. அந்த ஈசன் வழிபாடே இவர்களுக்கு மனநிறைவையும் கொடுக்கும்.

- Advertisement -