இந்த வார ராசிபலன் – 6/12/2021 முதல் 12/12/2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்தி தரக்கூடிய வாரமாக அமையப்போகின்றது. செலவுக்கேற்ற வருமானம் பையை நிரப்பும். வாராக் கடன் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. முடிந்த வரை குடும்ப பிரச்சனைகளை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அநாவசிய பேச்சை தவிர்த்துக் கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்த வேலை காரணமாக நீண்ட தூர பயணத்திற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு அவ்வப்போது சின்னச் சின்ன குழப்பங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சில வேலைகளை செய்யலாமா வேண்டாமா என்ற தடுமாற்றத்தில் இருப்பீர்கள். பொறுமையோடு முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். அவசரப்பட வேண்டாம். குடும்ப உறவுகளிடையே அனுசரித்துச் சென்றால் பிரச்சினை இல்லை. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படும். விட்டுக் கொடுத்து தான் செல்லவேண்டும். கடின உழைப்பை முதலீடாக போட்டால்தான் வியாபாரத்தில் அதிக லாபத்தை பெறமுடியும். தினம் தோறும் அனுமன் வழிபாடு மன தைரியத்தை கொடுக்கும்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு வருமானத்திற்கு ஏற்ற செலவு வரிசைகட்டி நிற்கப் போகின்றது. தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் கிட்டும். சுபகாரிய செலவுகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். இருப்பினும் மனதை போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். வேலை வேலைக்கு சரியாக சாப்பிட்டு கடின உழைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி உங்கள் பக்கம் நிற்கும். சொந்த தொழிலில் அதிகப்படியான முதலீட்டை செலுத்த வேண்டாம். இந்த வார இறுதியில் உற்சாகமான மிக நல்ல பலன்கள் கிடைக்கும். தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்களை நடத்தி முடிப்பீர்கள். குடும்பத்தோடு குலதெய்வ கோயிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிட்டும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக நிற்பார்கள். வேலை செய்யும் இடத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பதவி உயர்வு சம்பள உயர்வுடன் சேர்ந்த இடமாற்றத்திற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் தரும் வாரமாக இருக்கப்போகின்றது. எவ்வளவு பெரிய கஷ்டமான வேலையாக இருந்தாலும் போராடி முட்டிமோதி அதில் வெற்றி காண்பீர்கள். சுற்றி இருப்பவர்களிடம் பாராட்டையும் பெறுவீர்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளில் பின்னடைவு இருந்தால், இந்த வாரம் முயற்சியில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். வீட்டில் பிள்ளைகளால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரும் சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் செலவுகள் அதிகமாக இருக்கப்போகின்றது. வரக்கூடிய வருமானத்தை மீறி சில செலவுகள் கழுத்தை நெறிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண தடை நீங்கும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் சக பணியாளர்களுடன் கவனமாகப் பழகவேண்டும். யாரையும் நம்பி எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்களுடைய உடைமைகளை நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் சுமுகமான போக்கு இருக்கும். எதிர்பார்த்ததைவிட லாபம் கொஞ்சமாக கிடைத்தாலும், திருப்தி தரக்கூடியதாக இருக்கும். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் கனவு நிறைவேற போகின்றது. எதிர்பார்ப்புகளுடன் நம்பிக்கை வைத்து காத்துக் கொண்டிருந்த நிறைய விஷயங்கள் ஒவ்வொன்றாக இனி நடக்க தொடங்கும். வீட்டில் அவ்வப்போது கணவன்-மனைவிக்கிடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் பஞ்சாயத்துக்கு மூன்றாவது மனிதர்களிடம் செல்லாதீர்கள். வீட்டிலிருக்கும் உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டும். வேலை செய்யும் இடத்தில் முதலாளிக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அனாவசியமாக யார்கிட்டயும் பேசாதீங்க. உங்க வேலையை நீங்க பாருங்க. நல்லதே நடக்கும். ஓம் நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பாராத நல்ல வாய்ப்பு உங்கள் வீட்டு கதவை தட்டும். அதை நீங்கள்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். சில வேலைகளை உங்களுடைய புத்தி கூர்மையால் சாதுரியமாக சாதித்துக் காட்டுவீர்கள். இருப்பினும் வார இறுதியில் ஏதோ ஒரு மனசஞ்சலம் மனதைக் குழப்பிக் கொண்டே இருக்கும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். மனதை அமைதிப்படுத்த தியானம் செய்ய வேண்டும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் முக்கியமான முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். அன்றாடம் வேலையை கண்ணும் கருத்துமாக பொறுப்போடு செய்து முடிக்க வேண்டும். அனாவசிய போக்கு இருக்கக்கூடாது. அலட்சிய போக்கு இருக்கக்கூடாது. நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் உங்கள் மனதில் வரவே கூடாது. உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையும் கிடையாது. உங்களுடைய பிள்ளைகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் சிலபேருக்கு சுபச்செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கத் தொடங்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, வேலை கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். இருப்பினும் விடாமுயற்சியோடு ஈடுபடுங்கள். நல்ல செய்தி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பிக்கல் பிடுங்கல் இருக்கத்தான் செய்யும். அனுசரணையுடன் நடந்து கொள்ள வேண்டும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்தி தரக்கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. அப்பாடா, என்று சில வேலைகளை வெற்றிகரமாக முடித்து சாதனை படைக்க போகிறீர்கள். செய்யும் தொழிலில் மனத்திருப்தி இருந்தாலும் நல்ல வருமானம் இருந்தாலும், சொல்ல முடியாத கஷ்டம் சிலரை வாட்டி வதைக்கும். மனதளவில் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கி இருப்பீர்கள். உங்கள் மனைவியை விட்டு பிரிந்து இருக்கலாம், குழந்தை குட்டிகளை விட்டு வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஆக இருக்கக் கூடிய மன சங்கடங்கள் கூடிய விரைவில் தீரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. சொந்தத் தொழிலில் எதிர்பாராத அளவிற்கு லாபம் கிடைக்கும். தினம்தோறும் அம்பாள் வழிபாடு நன்மையை தரும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அடுத்தடுத்து வேலைகள் தலை மேல் வந்து நிற்கும். எந்த வேலையை முதலில் செய்வது என்று தெரியாமல் திணறுவீர்கள். உடல் சோர்வு ஏற்படும். நேர நேரத்திற்கு சத்தான உணவை சாப்பிட்டு உங்களுடைய ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் பிள்ளைகளின் மூலம் சந்தோஷம் கிடைக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிய நிறையவே வாய்ப்புகள் உள்ளது. முடிந்தவரை கடன் வாங்க வேண்டாம். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க பாருங்கள். சொந்த தொழில் புதிய முதலீடு போட்டு விரிவுபடுத்த வேண்டாம். தினம்தோறும் குருபகவான் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -